ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்ற நவம்பர் மாத சம்பளம் 16-12-2013 வரை பட்டுவாடா ஆகாமல் இருப்பதை இன்று பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துணை பொது மேலாளர் திரு .ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியபோது துணை பொது மேலாளர் அவர்கள் உடனடியாக ஒப்பந்தகாரரை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சம்பளத்தை பட்டுவாடா செய்ய வலியுறுத்தியதை தொடர்ந்து ஒப்பந்தக்காரர் இன்று பட்டுவாடா செய்ய ஆரம்பித்து உள்ளார். ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர் மாநில தலைவர் தோழர் முருகையா அவர்களிடமும் கூறியுள்ளோம். பிரச்சனையில் உடனடியாக தலையிட்ட துணை பொது மேலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நமது நன்றி .
No comments:
Post a Comment