தொழிலாளர் வர்க்கத்தை பிணைத்துள்ள அடிமை விலங்கை உடைத்தெறிய உறுதியேற்போம்.130வது மே தினம் வெல்லட்டும்.
சிகாகோ தியாகிகளின் லட்சியத்தை முன்னெடுப்போம்.மே தினம் 8மணி நேர வேலை, 8மணி நேர பொழுதுபோக்கு, 8மணி நேர உறக்கம் என்ற பொருளாதார கோரிக்கைகளை கொண்டிருந்தாலும் அது அடிப்படையில் சுரண்டலை ஒழிப்பது, அழுகிப்போன முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றுவதை உள்ளடக்கமாக கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக தான் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான மாபெரும் ருஷ்ய புரட்சி ஏற்பட்டது.மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் விடுதலை மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதை முடிவுக்கு கொண்டுவருவது, வர்க்கமற்ற சமூகத்தை படைப்பதற்காக கருவை கொண்டிருக்கிறது. அதை வளர்த்தெடுக்க வேண்டும். இதுதான் சிகாகோ தியாகிகளின் உண்மையான வழி மரபை உயர்த்தி பிடிப்பதாகும். மே தினம் வெல்லட்டும். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.