Showing posts with label BSNLCCWF. Show all posts
Showing posts with label BSNLCCWF. Show all posts

Thursday, July 24, 2014

போராட்டம்

புவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது. நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ராஜ்கோட் மத்திய  செயற்குழு பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது .அந்த அடிப்படையில் தற்போது போராட்ட  அறைகூவல்   விடப்பட்டுள்ளது .

26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில்  தர்ணா போராட்டம்
25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி 
பிரச்சனைகள் தீராவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 
EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் வரும் டிசம்பர் மாதம் நடத்த உள்ளது .

Tuesday, January 21, 2014

பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்

         புவனேஷ்வரில்   பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்  சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில்  நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது.

  • 26-02-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் 
  • 26-03-2014 அன்று தர்ணா போராட்டம் 
  • 23-04-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
  • CMD அலுவலகம் நோக்கி பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
  • ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

கோரிக்கைகள் :-
  1. விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
  2. அரசாங்கத்தின்  உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
  3. சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி  ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  4. பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
  5. சமவேலைக்கு சமஊதியத்தை  ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 
  6. EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
  7. வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும்  வழங்கிட வேண்டும்.
  8. பழி   வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
  9. பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்  சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.

Tuesday, November 13, 2012

வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்பார்கள்

          காஜியாபாத் BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களின் படுகொலையைக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் குற்றவாளி ஆதேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் 2012 நவம்பர் 16 ஆம் நாள் UNITED Forum of BSNL சார்பாக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று BSNLCCWF அறிவித்துள்ளது.

          BSNLCCWFன் மிகச்சரியான இந்த முடிவிற்கு BSNLEU நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

BSNLEU வின் முன்னணித் தோழர்கள் BSNLCCWF மற்றும் UNITED Forum தலைவர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...