Showing posts with label விருதுநகர். Show all posts
Showing posts with label விருதுநகர். Show all posts

Thursday, October 12, 2017

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர்

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட கூட்டம் 9 ஆம் தேதி NFTE அலுவலகத்தில் அதன் மாவட்ட செயலர் தோழர்  ராமசேகர் தலைமையில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் மாரியப்பா ஆகியோரும் சேவா BSNL சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி சகோதரர் பிரேம்குமார் மற்றும் தோழர் ராமநாதன் அவர்களும் ,SNEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் அவர்களும் ,AIBSNLEA சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் மற்றும் அதன் மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோரும் ,AIGETOA  சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் அவர்களும் ,TEPU சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் சரவணன் ஆகியோரும் பங்கேற்றனர் .வர இருக்க கூடிய போராட்டங்களை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க முடிவு செய்யப்பட்டது .ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட அமைப்புக்கு தோழர் ராம்  சேகர் தலைவராகவும் ,தோழர் ரவீந்திரன் கன்வீ னராகவும்  ,தோழர் செந்திகுமார் அவர்கள் பொருளாளராகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது .இணை கன்வீனர்களாக தோழர்கள் பிரேம்குமார் மற்றும் பிச்சைக்கனி ஆகியோர் செயல்படுவார்கள் .இணை தலைவர்களாக தோழர்கள் நாராயணன் மற்றும் விக்டர் சாம்சன் ஆகியோர் செயல்படுவர் .துணை .பொருளாராக தோழர் சரவணன் செயல்படுவார் .போராட்ட நிதியாக BSNLEU சார்பாக 1200 ,NFTE,AIBSNLEA,SEWA BSNL, AIGETOA சங்கங்கள் சார்பாக தலா 1000 ரூபாய் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .TEPU சார்பாக ரூபாய் 200 கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .
1)16/10/2017 அன்று மாவட்டம் முழுவதும் ஊழியர்களை திரட்டி GM அலுவலகம் முன்பாக காலை 1030 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது .
2) மக்களவை உறுப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்ய AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி முயற்சி செய்வது 
3) 16/11/2017 அன்று மனித சங்கிலி இயக்கத்தை மதுரை ரோட்டில் நடத்துவது ,அதற்குரிய போலீஸ் பெர்மிசன் பெறுவது 
4) டிசம்பர் மாதம்  நடைபெற உள்ள 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க மாவட்டம் முழுவதும் இணைந்து சுற்றுப்பயணம் செய்வது .என்று முடிவுகள் எடுக்கப்பட்டன .

Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting, table and indoor
Image may contain: 1 person, sitting and indoor

Wednesday, February 25, 2015

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மக்கள் மன்றத்தில் நமது சங்கப் பிரதிநிதி

         இன்சூரன்ஸ் அவசச் சட்டம் தேச நலனுக்கு உதவுமா? என்ற தலைப்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் “மக்கள் மன்றம்” ஒன்றைக் கூட்டியிருந்தது. நேற்று (24/02/2015) நடைபெற்ற இந்த மக்கள் மன்றத்தில் வணிகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் பங்கேற்றனர்.
          இந்த மக்கள் மன்றத்தில் இன்சூரன்ஸ் “அவசரச் சட்டம் தேச நலனுக்கு எதிரானதே” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுத்துறையினைச் சீரழிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் எதுவாயினும் அது தேச நலனுக்கு விரோதமானதே என்ற கருத்தினை வலியுறுத்தி BSNLEU விருதுநகர் மாவட்டத் துணைத்தலைவர் தோழர் A.கண்ணன் விவாதத்தில் கலந்து கொண்டார்.









Saturday, January 24, 2015

கூட்டு கிளை மாநாடு மற்றும் BSNL புத்தாக்க கருத்தரங்கம்

          விருதுநகர்  GM அலுவலகம் மற்றும் SDOP /விருதுநகர்  கிளைகளின் கூட்டு கிளை மாநாடு மற்றும் BSNL புத்தாக்க கருத்தரங்கம் மற்றும் தோழர் நாராயணன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 2015 ஜனவரி 24 அன்று மாலை 4 மணி அளவில் அதிர்வேட்டு பின்னணியில் இளமாறனின் எழுச்சி மிகு கோஷங்களுடன் ஆரம்பமானது. BSNLEU சங்க கொடியை மூத்ததோழர் நாராயணன் ஏற்றி வைக்க, TNTCWU சங்க கொடியை மாநில செயலர் தோழர் வினோத்குமார் ஏற்றிவைக்க கோலாகலமாய் துவங்கியது. தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க ஒரு நிமிட நேரம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
          தோழர்கள் ராஜசேகரன் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோரின் கூட்டு தலைமையில் மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக கிளை மாநாட்டை தொடக்கி வைத்தார். மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சிமிகு சிறப்புரை நிகழ்த்தினார். புத்தாக்க கருத்தரங்கதிற்க்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் C.வினோத்குமார் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரையாக தோழர்கள் K R கிருஷ்ணகுமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி, SNEA மாவட்ட செயலர் தோழர் G.செல்வராஜ் ஆகியோர்  பேசினர்.
          தோழர் நாராயணன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அவரை வாழ்த்தி தோழர்கள் ரவீந்திரன், வெங்கடப்பன், KRK, ராஜசேகர், இளமாறன் ஆகியோர் பேசினர். தோழர் நாராயணன் அவர்களுக்கு மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சந்தன மாலையை தோழர் ரவீந்திரன் சூட்டிட நினைவு பரிசினை தோழியர் தனலட்சுமி அவர்கள் வழங்கினார்கள். 2 மாநில செயலருக்கும் மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. GM அலுவலக கிளைக்கு தோழர்கள் முருகேசன், இளமாறன், மாரியப்பா ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். SDOP விருதுநகர் கிளைக்கு தோழர்கள் லக்ஷ்மணன், சிங்காரவேலு, சௌந்தரராஜன்  ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர  வாழ்த்துக்கள். பெரும் திரளாக பங்கேற்ற அனைவர்க்கும் மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து  கொள்கிறது.
















































11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...