Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Thursday, July 26, 2018

நன்றி

தொடர்புடைய படம்
ஒற்றுமைக்கு பங்கம் வந்தாலும் தடைகளை தாண்டி எழுச்சியுடன் நடைபெற்ற 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் 
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள் ,மற்றும் அதிகாரிகள் ,ஓய்வூதியர்கள் ,ஒப்பந்த ஊழியர்கள் ,கடந்த 3 நாட்களும் வந்த அனைத்து தோழர்களுக்கும் தங்கள் கைகளால்  குளிர் பானம் செய்து வழங்கிய நமது SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து மற்றும் மாவட்ட பொருளாளர்  தோழர் பாஸ்கரன் ,ராஜபாளையம் பகுதில் இருந்து ஒட்டு மொத்தமாக ஊழியர்களை அணிவகுத்து வர செய்த நமது ராஜை பகுதி மாவட்ட சங்க மற்றும் கிளை சங்க தோழர்கள் ,3 நாட்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற நமது மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,2 நாட்கள் பங்கேற்ற நமது சிவகாசி மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் ,பந்தல் மற்றும் சேர் ஏற்பாடு செய்த மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் ,3 நாட்களும் எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பிய நமது GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ,போராட்ட நிதிக்கு உதவிய SNEA மற்றும் AIBSNLEA சங்கத்திற்கும் ,நமது அனைத்து மாவட்ட சங்க மற்றும் கிளை செயலர்களுக்கும்  முஷ்டி உயர்த்தி நன்றியை  உரித்தாக்குவோம் .

Wednesday, January 24, 2018

நெஞ்சு நிறை நன்றி

இம் மாதம் 31 ஆம் தேதி பணி நிறைவு பெரும் தோழர் R வெங்கடாசலபதி அவர்கள் தனது பணி ஓய்வு பாராட்டு விழாவின் போது தனது பங்களிப்பாக ரூபாய் 10,500 ஐ நமது சங்கத்திற்கு கீழ் கண்டவாறு நன்கொடை வழங்கி உள்ளார் அவர்க்கு நமது மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி .
மாவட்ட சங்கத்திற்கு ----ரூபாய் 5,000
மாநில சங்கத்திற்கு -------ரூபாய் 3,000
அனைத்திந்திய சங்கத்திற்கு ---ரூபாய் 1,000
கிளை சங்கத்திற்கு ------------------ ரூபாய் 1,000
ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கு --ரூபாய் 500.


Monday, May 23, 2016

நன்றி

    Displaying RADHA.jpgDisplaying RADHA.jpg    நமது விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி விழா நிகழ்ச்சிக்கு நமது முன்னாள் மாவட்ட செயலரும் , ஓய்வு பெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசருமான தோழர் T.ராதாகிருஷ்ணன் அவர்கள் ரூபாய் 5000/- வழங்கியுள்ளார் .அவருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் .

Sunday, July 21, 2013

வலைப்பூவில் சுட்டியவர்கள்

தோழர்களே நமது வலைப்பூவில் சுட்டியவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்தது. தொடரும் தோழமைக்கு நன்றி.


Saturday, February 9, 2013

திருவில்லிப் புத்தூருக்கு நன்றி

          
          சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் கண்ணன் புகழ் பாடிய ஸ்ரீவில்லிபுத்தூரில், BSNLEU புகழ் பாடிய நமது ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. எதிர் பார்த்ததைவிட கூடுதல் தோழர்கள் வந்த பின்பும் அயராமல் உணவு ஏற்பாடு செய்து பம்பரமாய் பணி யாற்றிய தோழர்கள் ராஜாராம், சமுத்திரம், ஆறுமுகம், ராமநாதன், சேது, சுந்தர மகாலிங்கம், பாண்டி, காளிதாஸ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் வேல்சாமி, மாயகிருஷ்ணன், திருப்பதி, சஞ்சீவீ, பால்ராஜ், கோபால் ஆகியோருக்கும், மிகச்சிறப்பாய் செயற்குழு நடத்த அல்லும் பகலும் பாடுபட்ட தோழர்கள் புளுகாண்டி, வெங்கடேஸ்வரன், தோழியர் பகவதி, கிளைச் செயலர் தோழர் L.தங்கதுரை ஆகியோருக்கும், தோளோடு தோள் கொடுத்து வேலை செய்த ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும், நமது செயற்குழுவில் பங்கேற்ற பணி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் தோழர் அய்யாசாமி, தோழர் முத்தையா ஆகியோருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி.

Thursday, January 3, 2013

போக்குவரத்து படி

          புதிய பதவி உயர்வு பெறும்பொழுது பதவி உயர்வுத் தேதியிலிருந்து போக்குவரத்துப்படி வழங்கவேண்டும் என்ற உத்தரவை நமது மாநிலச்சங்கத்தின் முன் முயற்சியால் மாநில நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இந்த உத்தரவை நமது மாவட்டத்தில் அமலாக்க உதவிய Sr .AO திரு T.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதனால் சுமார் 48 ஊழியர்கள் பலன் பெற்று உள்ளனர்.   

Wednesday, December 12, 2012

சுட்டியால் தட்டியோர்க்கு நன்றி

ஒரு மாதத்தில் நம் வலைப்பூவைச் சுட்டியால் தட்டியவர்கள் எண்ணிக்கை 980


11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...