Wednesday, December 31, 2014

Tuesday, December 30, 2014

நவீன அடிமை முறை

பணி நீக்கத்தை எதிர்த்து இணையதளத்தில் போராட்டம்!! டிசிஎஸ் ஊழியர்கள்:-
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்தில் சுமார் 30,000 பணியாளர்களை வருகிற பிப்ரவரி மாதம் 2015ஆம் ஆண்டுக்குள் நீக்க உள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளார். இதன்படி சில பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லிப்-ம் நிர்வாகம் கொடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்நிறுவன பணியாளர்கள் சமுக வளைதளங்கள் மற்றும் இணையதள வாயிலாக ‘We are against TCS layoff' என்ற பெயரில் போராட்டங்கள் நடத்திவருகினறனர்.

இது விசயமாக  முகநூலில் முத்திரையிடப்பட்ட ஒரு கருத்து 
வா.மணிகண்டன் அவரது துறையான கணிப்பொறியியல் வணிகத்தில் சமீபத்தில் நிகழவிருக்கிற பெரும்ஊழியர் வெளியேற்றம் பற்றி எழுதியிருக்கிறார். நான் வேலை பறிபோகும் என்ற அச்சமே இல்லாத ஒரு துறையில் பணியாற்றியவன். இன்றும் அத்தகைய அச்சமேதுமில்லை, ஓய்வுபெற்றுவிட்டேன். என் பிள்ளைகளும் அதில் இல்லை. ஆனால் அந்தக்கட்டுரை திகிலை அளித்தது.எட்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ரயிலில் என்னுடன் ஓர் இளைஞர் பயணம் செய்தார். கணிப்பொறித்துறை ஊழியர். அத்தகைய இளைஞர்களைப்போல தன்னை ஓர் அமெரிக்கனாகவே பாவனைசெய்துகொண்டிருந்தார். என்னுடன் இருந்த இன்னொருவர் ரயில்வே தொழிற்சங்க ஊழியர். அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். இளைஞர் தனக்கு அரசியல் தெரியாது, அதிலும் இந்திய அரசியலில் ஆர்வமே இல்லை என்றார். தொழிற்சங்க அரசியல் என்பது தகுதியற்றவர்கள் மிரட்டல் மூலம் வேலைகளில் நீடிக்கச் செய்யும் ஒரு வழிமுறை என்றும் இந்தியா அழிந்ததே தொழிற்சங்கத்தால்தான் என்றும் சொன்னார். தொழிற்சங்கவாதி பொறுமையாக பதில் சொன்னார். தான் பேசுவது இடதுசாரி அரசியல் அல்ல, வெறும் பொருளியல் என்று சொல்லி ஆரம்பித்தார். மக்கள்தொகை மிக்க இந்தியச்சூழலில் தேவை X இருப்பு சூத்திரத்தின்படி எப்போதும் உழைப்பவர்தரப்பு பலவீனமாகவே இருக்கும் என்றார். ஆகவே உழைப்பவர்கள் ஒன்றாகக்கூடி தங்கள் பலத்தை குவித்துக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது என்றார். தொழிற்சங்கம் அதற்கான வழிமுறைதான் என்றும் அது அவ்வப்போது சோம்பலையும் பொறுப்பின்மையையும் ஊக்குவிக்கலாம் , ஆனால் பொதுவாக தொழிற்சங்க அரசியலே இந்தியாவில் உழைப்பவர்கள் கௌரவமாகவும் நம்பிக்கையாகவும் வாழ வழிசெய்தது என்றும் விளக்கினார்.இளைஞர் ஒத்துக்கொள்ளவில்லை. திறமை இல்லாமல் இருக்கையிலேயே அதெல்லாம் தேவை, திறமை இருக்கையில் அது மட்டுமே பேரம்பேசும் ஆற்றலை அளிக்கும் என்றார். தொழிற்சங்கவாதி திறமை என்பது மேலோட்டமான சொல் என்றார். திறமையில் இரண்டுவகை உண்டு. பதிலி நீக்கம் செய்யப்படத்தக்கது , செய்ய முடியாதது [replaceable ,irreplaceable] என்றார். இரண்டாம்வகைப்பட்ட நிபுணர்கள் ஒருசதவீதம்கூட இருக்கமாட்டார்கள். முதல்வகையினரில் மிகத்திறன் வாய்ந்தவர்கள் உண்டு. அவர்கள் சங்கம் இல்லையேல் முதலாளியின் அடிமையாக வாழவேண்டியிருக்கும் என்றார். ‘தெறமை இல்லாம உலகத்திலேயே பெரிய ரயில்வே நெட்வர்க்கை முதலீடே இல்லாம நடத்திட்டிருக்க முடியாது தம்பி. ஆனா சமானமான தெறமை உள்ளவங்க ஆயிரம் பேர் இருக்காங்க, தேவை அம்பதுபேர்னா அந்த திறமைக்கு மதிப்பே இல்லை’.‘அதெல்லாம் இல்லை. திறமைய எவனும் ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றார் அந்த இளைஞர். ‘நீங்க சொந்தமா சாஃப்ட்வேர் உண்டுபண்றீங்களா? அந்த சாஃப்ட்வேர வேற யாருமே உண்டுபண்ண முடியாதா? அப்டீன்னா சரி’ என்றார் தொழிற்சங்கவாதி. இளைஞர் கோபம் அடைந்து கத்த ஆரம்பித்தார். ‘உங்களுக்கு என்ன தெரியும்? டெக்னாலஜி பத்தி ஏதாவது தெரியுமா?’ என ஆரம்பித்து சொல்மழை. தொழிற்சங்கவாதி ‘நான் அப்டி சொல்லல. எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது’ என்று சமாதானமானார்.இளைஞர் கழிப்பறை சென்றபோது என்னிடம் “நம்பிக்கையோட இருக்காரு. நல்லதுதான். ஆனா லாபருசி கண்ட முதலாளித்துவம் பத்தி இவருக்கு இன்னும் தெரியாது’ என்றார்.அந்நிகழ்ச்சியை எண்ணிக்கொள்கிறேன். இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் இந்த நவீன முதலாளிகளால் கைவிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தேசப்பொருளியலுடன் விளையாட இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வேலைநீக்கம் உண்மையில் தொழிலாளர்களின் உணர்வுகளை சிதைக்கும். நிரந்தரமான அச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்களை கற்பனையும் சுதந்திரமும் இல்லாத அடிமைகளாகவே ஆக்கும். அதற்கு இந்த முதலாளிகள் அனுமதிக்கப்படக்கூடாது.கேட்டால் இது நவீனத்தொழில்நுட்பத்துறை, நவீனப் போட்டிப்பொருளியல் என்பார்கள். ஆனால் மறுபக்கம் இலவச மின்சாரம், இலவச நிலம், கடன் சலுகைகள் என அரசிடம் இருந்து மானியங்களைப் பெற்றுக்கொண்டே இருப்பார்கள். அங்கே சோஷலிசம் பேசுவார்கள். உலகப்போட்டியில் பங்குபெற அரசின் உதவி அவசியம் என்பார்கள்.தனியார்மயத்தின் தேனிலவு முடிந்துவருகிறது என்றே நினைக்கிறேன். தொழிற்சங்கம் வலுவாக இல்லாமல் எந்த உழைப்பாளியும், எந்த ‘திறமையாளனும்’ கௌரவமாக வாழமுடியாது.
             <நன்றி :- ஒன் இந்தியா >

கட்டண உயர்வை ரத்து செய்தது ஏர்டெல்!!

செய்தி படிக்க :-Click Here

Sunday, December 28, 2014

மத்திய சங்க செய்திகள்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

30.12.2014 அன்று தூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்…

மாநில சங்க சுற்றறிக்கை எண் 11 படிக்க :-Click Here

சிறப்புமிகு ராஜபாளையம் கிளை மாநாடு

          ராஜபாளையம் BSNLEU மற்றும் TNTCWU  சங்கங்களின் கூட்டு  கிளை மாநாடு 27-12-2014 அன்று ராஜபாளையம் தொலைபேசி நிலைய வளாகத்தில் மூத்த தோழர் சந்திரசேகரன்  நமது BSNLEU சங்க கொடியை ஏற்றிவைக்க, TNTCWU சங்க கொடியை தோழர் பொன்னுசாமி ஏற்றிவைக்க மாவட்ட துணை செயலர் தோழர் வெங்கடேசனின் கோஷங்களுடன் மிக சிறப்பாக தொடங்கியது .தோழர் அனவரதம் அவர்கள் தலைமை வகிக்க கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
          அதன் பின் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நடுவண்  அரசின் கொள்கைகள் நாட்டின் ஏழை எளிய மக்களுக்கும் ,நடுத்தர வர்க்க மக்களுக்கும் மிக பெரிய அடியாக இருப்பதை சுட்டி காட்டி BSNL ஐ பாதுகாக்க வர உள்ள இயங்கங்களை பட்டியல் இட்டு கூறி வர உள்ள போராட்டங்களை 100 சத பங்களிப்போடு செய்ய வேண்டிய அவசியத்தை கூறி முறையாக கிளை மகாநாட்டை துவக்கி வைத்தார்.
          வாழ்த்துரையாக மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி, தோழர் வெங்கடேஷ் , TNTCTW மாவட்ட செயலர் தோழர் முனியசாமி , மூத்த தோழர் சிவஞானம் TNTCTWU சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேல்சாமி  ஆகியோர் பேசினர். சிறப்புரையாக மாநில உதவிசெயலர் தோழர் முருகையா பேசும் போது ராஜபாளையம் கிளைக்கும் அவருக்கும் 25 ஆண்டு காலமாக உள்ள இணைப்பை பற்றி பெருமிதமாக கூறி மாநில செயற்குழுவின் முடிவுகளையும், ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியம் பற்றியும், மக்கள் விரோத நடுவண் அரசின் போக்கையும் விரிவாக எடுத்துரைத்தார் .கிளை செயலர் தோழர் த .முத்துராமலிங்கம்  சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையும், கிளை பொருளாளர் சிவஞானம் சமர்ப்பித்த நிதி நிலை  அறிக்கையும்  ஏற்று கொள்ள பட்டு  புதிய நிர்வாகிகளாக தோழர்கள் அனவரதம் ,முத்துராமலிங்கம், சிவஞானம் ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.


















Thursday, December 25, 2014

யூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம்

யூனியன் பேங்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-12-2014 இல் இருந்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது .இது 31-12-2015 வரை அமலில் இருக்கும் MOU படிக்க :-Click Here

Tuesday, December 23, 2014

அஞ்சலி


இயக்குனர் இமயம் திரு K .பாலசந்தர் இன்று காலமானார் .மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியற்றை கருப்பொருளாக கொண்டு படம் இயக்கிய பாலச்சந்தர், இந்திய திரைப்படத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டவராவார்.பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, உள்பட பல்வேறு விருதுகளை பாலச்சந்தர் பெற்றுள்ளார்.அவர் மறைவிற்கு பி எஸ் என் எல் விருதுநகர் மாவட்ட சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது .

ராஜபாளையம் 11 வது கிளை மாநாடு

ன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                        வரும் 27-12-2014  சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் இராஜபாளையம் கூட்டு கிளை மாநாடு கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் நடைபெற உள்ளது .அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம் .
அனவரதம்              T.முத்துராமலிங்கம்               சிவஞானம்  
கிளை தலைவர்         கிளை செயலர்            கிளை பொருளாளர் 

தலைநகர் செய்திகள்

         ERP நடைமுறைப்படுத்துவது விசயமாக இன்று அனைத்து சங்க நிர்வாகிகள் முன்பாக நிர்வாகம் சார்பில் பொது மேலாளர் (ERP ) திரு ராமன் அகர்வால் தலைமையில் ஆன குழு ஒரு  வரைவு திட்டத்தை வழங்கியது .இக் கூட்டத்தில்  பயனுள்ள பல தகவல்கள் பரிமாற பட்டதாக   ஊழியர் தரப்பு கூறியுள்ளது .இத் திட்டம் நடைமுறைபடுத்தப்படுவது ஊழியர்களை உபரி ஆக்குவதற்கு  அல்ல என GM (ERP ) கூறியுள்ளார் .மனித வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தப்படுவதற்கு தான் என் கூறியுள்ளார் .இதை  நடைமுறைப்படுத்தும் போது non executive ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்க வேண்டும் எனவும் ,ஊழியர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் மாநிலங்களில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் ஏற்று கொண்டு உள்ளது .
போரம் சார்பாக 06-01-2015 முதல் தொடங்க உள்ள 3 நாட்கள் தர்ணா போராட்டத்தை வலுவான முறையில் நடத்திட நமது அனைத்திந்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது .

Saturday, December 20, 2014

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

20-12-2014 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் தோழர் அனவரதம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ஆய்படு பொருளை  சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார் .கையெழுத்து  இயக்கம் பற்றி மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் விளக்கினார் .வர உள்ள  இயக்கங்களின் தொகுப்பையும் , அதில்  ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டிய அவசியத்தையும் ,இன்றைய மத்திய அரசு பொது துறை நிறுவனங்களை சீரழிக்கும் கொள்கையை அமல்படுத்தி தனியார் நிறுவனங்களை கொழுக்க வைக்கும் போக்கையும் , மத வெறியை தூண்டி உழைக்கும் வர்க்க போராட்டத்தை திசை திருப்பும் அரசின் போக்கையும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனியும் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரனும் விளக்கமாக எடுத்துரைத்தனர் .மாவட்ட அமைப்பு  செயலர்கள் தோழர்கள் சிவஞானம் மற்றும் இளைய தோழர் ராதாகிருஷ்ணன் அவர்களும் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேல்சாமி அவர்களும் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .
  

Friday, December 19, 2014

இன்னும் ஒரு மெல்லிசான கோடு


                        நன்றி : தி ஹிந்து 

மாவட்ட செயற்குழு

          விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 18-12-2014 அன்று மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் M.முத்துசாமி அஞ்சலி  உரை நிகழ்த்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் தன் தலைமையுரையில் சேவையை மேம்படுத்த மாவட்ட  நிர்வாகம் செய்யவேண்டிய பணிகளையும் அதை விரைவுபடுத்துவதற்கு நமது சங்கம் செய்துள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மாவட்ட செயலர் தனது உரையில் மாநில செயற்குழுவில் நமது  பொது செயலர் சுட்டி காட்டிய விசயங்களையும், மாவட்ட செயற்குழு எடுத்த முடிவுகளையும் விரிவாக  கூறினார். மாவட்ட செயலரின் எடுத்துரைத்த கருத்துக்கள் மீது ஒரு செழுமையான விவாதம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை  மிகவும் சக்தியாக கிளைகள் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

          ஜனவரி மாதம் 24 ஆம் தேதி விருதுநகர் GM அலுவலக கிளை மகாநாட்டை ஒட்டி BSNL புத்தாக்கம் விசயமாக "மாவட்டம் தழுவிய கருத்தரங்கம்" நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அக்கருத்தரங்கில் நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொள்வர். அதில் கலந்து கொள்ள அனைத்து சங்கங்களையும்  அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொள்ள அனைத்து கிளைகளுக்கும் கீழ் கண்டவாறு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
1.சிவகாசி               ------- 40 தோழர்கள்
2.ராஜபாளையம் ------- 20 தோழர்கள்
3. ஸ்ரீவில்லிபுத்தூர் ----15 தோழர்கள்
4.அருப்புகோட்டை  ---12 தோழர்கள்
5.சாத்தூர்         ------------- 5 தோழர்கள்
6. விருதுநகர்              ----60 தோழர்கள்
7.ஒப்பந்த ஊழியர் சங்கம் ---70 தோழர்கள்

          அதே போல் மாநில அளவில் நடைபெறும் கடலூர் கருத்தரங்கில் பங்கு பெற கீழ் கண்டவாறு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது .
1.சிவகாசி                 ------- 5 தோழர்கள்
2.ராஜபாளையம்  ------- 2 தோழர்கள்
3. ஸ்ரீவில்லிபுத்தூர்  ----4 தோழர்கள்
4.அருப்புகோட்டை   ---4 தோழர்கள்
5.சாத்தூர்        ------------- 2 தோழர்கள்
6. விருதுநகர்              ----5 தோழர்கள்

          பிப்ரவரி 25 இல் நடைபெறும் டெல்லி பேரணியில் கலந்துகொள்ள கீழ்கண்டவாறு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
1.சிவகாசி               ------- 4 தோழர்கள்
2.ராஜபாளையம் ------- 2 தோழர்கள்
3. ஸ்ரீவில்லிபுத்தூர் ----3 தோழர்கள்
4.அருப்புகோட்டை   ---2 தோழர்கள்
5.சாத்தூர்        ------------- 1 தோழர்
6. விருதுநகர்              ----4 தோழர்கள்

          லோக்கல் கவுன்சில் விவாதிக்கப் பட்ட பிரச்சனைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி ஒரு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்னை மாநில செயற்குழுவில் நமது மாவட்ட செயலர் சுட்டி காட்டி உள்ளார். ஒரு ஒன்று பட்ட போராட்டத்தை மாநில சங்க வழிகாட்டலின்படி நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.




 












11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...