Sunday, May 31, 2015

BSNL STVs as on 01-06-2015


இந்திய தொலைத்தொடர்புத் துறையை குறி வைக்கும் கார்லோஸ் ஸ்லிம்!

America_Movil
   பில்கேட்ஸிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் கார்லோஸ் ஸ்லிம் (75), இந்திய தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்க சமயம் பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த காத்திருப்பிற்கு இந்திய சந்தைகளின் வளர்ச்சி மட்டும் காரணமல்ல, மெக்சிகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அவரின் தொலைத்தொடர்பு நிறுவனமான ‘அமெரிக்கா மூவில்’ (America Movil) சற்றே பொருளாதார நெருக்கடியில் தடுமாறி வருவதனால் தான்.இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியா வந்திருந்த கார்லோஸ் ஸ்லிம், இந்தியாவில் பெரிய அளவில் தொலைத்தொடர்பு துறையில் சாதித்திராத ‘வீடியோகான்’ (Videocon) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வேணுகோபால் தூத் மற்றும் சில செல்பேசி நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தொலைத்தொடர்புத் துறையில் இந்தியாவில் பெருகி வரும் வாய்ப்புகள் பற்றி ஸ்லிம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மூவில் நிறுவனம் இந்தியாவில், தொலைத்தொடர்புத் துறை வர்த்தகத்தில் மட்டுமல்லாமல் கல்வி, ஊடகம், மருத்துவம், நிதி சேவைகள் உள்ளிட்ட வேறு சில துறைகளிலும் முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளது. எனினும், இதுபற்றிய தகவல்களை அளிக்க அமெரிக்கா மூவில் நிறுவனம் மறுத்துவிட்டது. வீடியோகான் நிறுவனமோ, தங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களிடமிருந்து ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்துள்ளது.அமெரிக்கா மூவில் நிறுவனம் மெக்சிகோ மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒட்டுமொத்தமாக 18 பிரிவுகளாக இயங்கி வந்தாலும், கார்லோஸ் ஸ்லிம் இந்திய சந்தைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அதற்கு மிக முக்கியமான காரணங்கள் இந்தியாவில் பெருகி வரும் திறன்பேசிகள் வர்த்தகம் மற்றும் இந்திய மக்களின் ஜனத்தொகை.இதுவரை வீடியோகான் தலைமை நிர்வாகியை மூன்று முறை சந்தித்துள்ள கார்லோஸ் ஸ்லிம், அனைத்தும் சரியாக நடந்தால் அடுத்த முறை இரு நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 49 சதவீத பங்குகளை வீடியோகான் நிறுவனத்திடம் இருந்த அமெரிக்கா மூவில் கைப்பற்றும் என அந்நிறுவனங்களின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
                     நன்றி :- செல்லியல் .காம் 

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு- 'பாரத் பந்த்' நடத்த அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு!!

           மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கள் இணைந்து முடிவெடுத்துள்ளன. டெல்லியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களான பி.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, ஹெச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ, டி.யூ.சி.சி., சேவா, எல்.பி.எஃப், யூ.டி.யூ.சி ஆகிய தொழிற்சங்கங்களும் இணைந்து தேசிய கருத்தரங்கை நடத்தியது.
All Employee Unions plan to Nationwide Bandh
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்தும் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்கங்களும் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் மாதம் மாதம் நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.
                      நன்றி :- ஒன் இந்தியா 

நானே கேள்வி நானே பதில்

''அரசியல்வாதிகளின் வீடுகளில் திருடர்கள் புகுந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா?''
''கேரள முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் இறப்பதற்குச் சில காலம் முன்பு, அவர் குடியிருந்த வாடகை வீட்டில் ஒரு திருடன் புகுந்து, பீரோவில் இருந்த 3,500 ரூபாயைத் திருடிச் சென்றுவிட்டதாக ஒரு செய்தி படித்தேன். ஒரு முன்னாள் முதல்வர் வீட்டில் இருந்தது 3,500 ரூபாய் தானா என்ற ஆச்சர்யம் ஒரு பக்கம். ஒரு முன்னாள் முதல்வர் ஏன் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆச்சர்யம் இன்னொரு பக்கம். விசாரித்தபோது, பாரம்பரியப் பணக்கார நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பிறகு, தன் வீடு, தோட்டம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, வாடகை வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். அவர் அளித்த சொத்தின் மதிப்பு இன்று 10 கோடியைத் தாண்டும். இப்படியும் சில அரசியல்வாதிகள் சில காலம் முன்பு நம்மிடையே வாழ்ந்திருக் கிறார்கள்!''
                         நன்றி :- விகடன் 

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடு

30-05-2015 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடும் தோழர் ஆறுமுகம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும்  கிளை தலைவர் தோழர் .L தங்கதுரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர் கந்தசாமி அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க , கிளை செயலர் தோழர் .சமுத்திரம் வரவேற்புரை நிகழ்த்தினார் . அதன் பின் முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கிளை மகாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார் . நடந்து முடிந்த 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் வெற்றியையும் , மத்திய  அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து 11 மத்திய தொழிற் சங்கங்கள் நடத்த உள்ள செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டிய அவசியத்தையும் , வேலை கலாச்சாரம் மாற  வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார் . பிராட் பேண்ட் சந்தையில் நமது பங்களிப்பு முதல் ஸ்தானத்தில் இருந்து 3 ஆம் இடமாகியுள்ள சூழ்நிலையில் நமது நிறுவனத்தை சந்தையில் நிலை நிறுத்த வேண்டிய சூழ்நிலையை அவர் விளக்கினார் . மாவட்ட மட்ட சூழ்நிலைகள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தனது உரையில் சுட்டி காட்டினார் .மகாநாட்டை வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் வெங்கடேஷ் , அஷ்ரப் தீன் , முத்துசாமி ,  தோழியர் பகவதி கிளை செயலர்கள் தோழர்கள் கருப்பசாமி, முத்துராமலிங்கம் , மாரியப்பா , சிங்கரவேல் ,ஓய்வூதியர் சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் . செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கைகள் மகாநாட்டில் ஒப்புதல் பெறப்பட்டன . தோழர்கள் வெங்கடசாமி , சமுத்திரம் ,பொன்னுசாமி ஆகியோர்  முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளராக தேர்வு செய்யப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கம் தன் புரட்சிகர    நல்  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

இப்ப என்ன பண்ணுவீங்க..? இப்ப என்ன பண்ணுவீங்க?!

                                         நன்றி :- தி ஹிந்து 

செல்ஃபி புள்ள!


                       நன்றி :- தி ஹிந்து 

Tuesday, May 26, 2015

' அந்த ஏப்பம் விட்ட நிறுவனங்கள் என்ன ஜாமீன் கொடுத்தார்கள்? '

     பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 5.2 சதவீத அளவுக்கு இருக்கிறது. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார்.பட்டியலிடப்பட்ட 40 வங்கிகளின் டிசம்பர் மாதம் வரையிலான வாராக்கடன் 2.43 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது மொத்த வாராக்கடன் 63,386 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு 16,610 கோடி ரூபாயாக இருக்கிறது.மார்ச் 31, 2013-ம் ஆண்டு முடிவில் 51,189 கோடி ரூபாய் வாராக்கடன் இருந்தது. அதனுடன் 32.40 சதவீதம் மொத்த வாராக்கடன் அதிகரித்து 67,799.33 கோடி ரூபாயாக இருக்கிறது.நிறுவனங்கள் மூலம் வரவேண்டிய கடன் தொகை 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி. மொத்தம் 406 நிறுவனங்கள். இதில், கிங் பிஷ்ஷெர் ஏர்லைன்ஸ் (2673 கோடி), மும்பை எஸ் குமார் ஜவுளி (1758 கோடி), ஸ்டெர்லிங் குழுமம் (3672 கோடி) ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை.

எத்தனையோ நிறுவனங்களில் (outstanding amount) நிலுவையை வசூலிக்க சிறப்பு குழுக்கள், சிறப்பு அமைப்புகள் வைத்து வசூல் செய்கிறார்கள். ஏன் வங்கிகள் அதுபோல் செய்யவில்லை? தனியாரிடம் வசூல் செய்ய விட்டு, வசூல் ஆகும் தொகையால் கமிசன் கொடுத்தால் பாதியாவது வந்திருக்குமே. இப்படி வாராக்கடனை, வரவே வராத கடன் ஆக்கியது ஏன்?கல்விக் கடன் கட்டாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் ஃபிளெக்ஸ் பேனரில் கட்டி அவமானப்படுத்துவதன் மூலம் வங்கித் துறையை பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும், வேண்டுமென்றே கடனை கட்டாமல், அவற்றை வாராக் கடனாக ஆக்கியிருக்கும் முதலாளிகளின் பெயரைக் கூட வெளியில் விடாமல் அவர்களது கௌரவத்தை காத்து வருகின்றன.ஏழை மாணவன் படிக்க கடன் கேட்டா, அரசு ஊழியர் ஜாமீன் வேண்டும். எழைகள் தொழில் தொடங்க கடன் கேட்டா, வீடு அடமானம் வைக்க வேண்டும். விவசாயி கடன் அடைக்கவில்லை என்றால் தூக்கு போட்டு சாகணும்.மேலே உள்ள நிறுவனங்கள் கடன் வாங்கும்போது யார் ஜாமீன் கொடுத்தார்கள்? யார் வீட்டை அடமானம் வைத்தார்கள்?
                            நன்றி: விகடன் 

சரிகிறதா மோடியின் செல்வாக்கு?

நன்றி :- விகடன் 

தேசிய கருத்தரங்கம்

இன்று (26-05-2015)   11 மத்திய  தொழிற்சங்கங்கள் பங்கேற்ற  தேசிய கருத்தரங்கம் புது டெல்லியில் நடைபெற்றது . இக் கருத்தரங்கில் நமது BSNLEU சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு , தலைவர் தோழர் பல்பீர் சிங் மற்றும் துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி  ஆகியோர் பங்கேற்றனர் . மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை எதிர்த்தும் , கார்போரேட்களுக்கு ஆதரவான மத்திய அரசின் போக்கை கண்டித்தும்    வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பொது வேலை  நிறுத்தம் செய்வது என முடிவு அக் கருத்தரங்கில் எடுக்கப்பட்டு உள்ளது . நமது சங்கம் அம் முடிவை இதய பூர்வமாக ஏற்று கொண்டு உள்ளது .

Monday, May 25, 2015

கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடும் தோழர் ஆறுமுகம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் வரும் 30-05-2015 அன்று மதியம் 2.30 மணி அளவில் நடை பெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் ,சென்னை RGB மற்றும் JCM உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது . 
நமது தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 03-06-2015 அன்று சென்னையில் நடைபெற உள்ளது .மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பிரச்சனைகள் எதுவும் இருப்பின் மாவட்ட செயலருக்கு தகவல் தெரிவிக்கவும் .ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஏப்ரல் மாத ஊதியத்தை நிர்வாகமே வழக்கிட மாவட்ட பொது மேலாளர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் .ERP யில் அதற்கான பணிகள் நாளை தொடங்க உள்ளன .எந்த ஊழியர்க்கும் வங்கி கணக்கு எண் தவறாக இருந்தால் உடனடியாக மாவட்ட செயலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .இட மாறுதல் விசயத்தில் நிர்வாகம் மாறுதல் கொள்கைக்கு புறம்பாக தவறான  உத்தரவு வெளியிட்டால் உடனடியாக போராட்டத்தை   நமது சங்கம் நடத்திடும் .
                       

டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்!

நன்றி :விகடன் 
டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிகள் தாண்டி விடும் என்ற “சாதனையை” நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது.இதைப்போல வேறு வருமானம் அரசுக்கு இல்லை என்று சொல்லி மக்களை சாக வைத்தாவது டாஸ்மாக் சரக்கின் வருமானத்தின் மூலம் அரசு ஊழியருக்கு சம்பளமும், ஓட்டு வாங்க 'இலவசம்' என்ற பெயரில் லஞ்சமும் கொடுக்க முடிகிறது. டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு என்ற பெயரில் இருந்து டாஸ்மாக் மக்களை வாழவைக்கும் “சாதனைக்குரிய” திரவமாக மாறி விட்டது. உணவுப்பொருளில் கலப்படம் என்றால் கூட வழக்கு போடும் சட்டமுள்ள இந்த நாட்டில் " விஷமே உணவாக " வழங்கப்படுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது சட்டம்,கணவனைக் காணவில்லை, மகனை காணவில்லை என்று காவல் நிலையம் செலவதற்கு முன் டாஸ்மாக் கடையில் பார்த்து விட்டு புகார் கொடுக்கச் சொல்லும் அளவிற்கு டாஸ்மாக் கடையால் "காணாமல் போனவர்கள்" அதிகம். 108 அவசர வண்டி குடிகாரருக்கு மட்டுமே சொந்தம் எனபது போல குடியால் விபத்து, இருதய நோயாளிகள், மூளைச் சாவு அடைந்தவர்கள் 108 ஐ ஆக்கிரமித்து விட்டனர்.

திருமணம்,கோவில் திருவிழா என்றால் முன்பெல்லாம் மகிழ்ச்சியுடன் உறவினர்கள், நண்பர்கள் குடும்ப உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் என்ற நிலை மாறி திருமணம் என்றால் திடீர் போதைச் சண்டையும், கோவில் திருவிழா என்றால் போதை ஆசாமிகள் செய்யும் அடாவடியால் போலீஸ் தடியடியும் , சாலை மறியலும் அன்றாடச் செய்தியாகி விட்டன.தெய்வத்தால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக, மன நிம்மதியற்று அடுத்த முறை திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்ற அளவிற்கு குடி போதையால் நடக்கும் கோவில் வன்முறைகள் குல தெய்வத்தை மறக்கச் செய்கின்றன.இலங்கையில் நடந்த இன அழிப்பை விட மோசமான இன அழிப்பு இங்கு நடைபெறுகிறது. அங்கு கொத்துக் கொத்தாக அணு குண்டு வீசினார்கள். இங்கு குவார்டர் குவார்டராக விஷம் ஊற்றுகிறார்கள். அங்கு சாவதற்கு பணம் வாங்கவில்லை. இங்கு சாவதற்கு முன்பணம் ஒவ்வொரு முறையும் அரசு வாங்கிக்'கொல்'கிறது”

வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்த தமிழன், இன்று வார இறுதி நாட்கள் என்றாலே காலை முதல் மறுநாள் திங்கள் காலை வரை அசைவ உணவுக்கு அடிமையாகி ,டாஸ்மாக் சரக்குடன் நடு ரோட்டில், டாஸ்மாக் கடையில் மயக்கத்தில் மன நோயாளி போல படுத்துக் கிடக்கின்றான்.திரைப்படங்களிலோ, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை டாஸ்மாக் விளம்பரப்படமா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு போதைகாட்சிகளும், மகளே தந்தைக்கு பாசத்தில் ஊற்றிக்கொடுக்கும் "பாசமலர் " காட்சிகளும், காதலிக்கும் பெண்ணும் குடிப்பாள் என்ற"தத்துவமும்" சொல்லும் விதமான காட்சிகள்.அதேப்போன்று மெகாத் தொடர்களும் மக்களை டாஸ்மாக் சரக்கை சாகும் வரை மறக்க முடியாதபடி செய்கின்றன.டாஸ்மாக் கடையால் காவலர்களுக்கு கிடைக்கும் லாபமும் அதிகம். அன்றாடம் மதுவால் நடக்கும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு தேடி வரும் மக்களிடமும், போதையால் வாகனம் ஒட்டுபவர்களிடம் "கவனித்து" வாகன ஓட்டிகளை அனுப்புவதும், ஒரு கையால் மதுவுடன் வண்டி ஓட்டுபவரை பிடிதுக்கொடுத்தாலும் பெரிய கேஸ் போடாமல் "கடமையை" செய்வதும், பெட்டி கேஸ் போடத் தேவையான தெருச் சண்டை களும் காவலர்கள் வாழ்வை வளமாக்கி வருகிறது. மாதந்தோறும் குற்ற வழக்கு கணக்கு காட்ட குற்ற வழக்கைத் தேடி அலைந்த போலீசார், காவல் நிலையத் தை விட்டு வெளியே செல்லாமல் குடி போதையால் நடக்கும் வன்முறை புகார்களுக்கு கட்ட பஞ்சாயத்து செய்யவே நேரம் இல்லாமல் திணறி வருகின்றனர்.ஏற்கனவே கேரளா, வட மாநிலத்தவர் ஆதிக்கத்தில் தமிழகம் தமிழர்களை தேடும் நிலைக்கு வந்துவிடு மோ என நினைக்கும் வேளையில், மதுவால் தமிழர்களின் மலட்டுத்தன்மை அதிகரித்து தமிழ் இனம் அழியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள்ள இளைய சமூகத்தினரின் பெரும்பாலான மது குடிப்போரின் பிரச்னையே நரம்புத் தளர்ச்சியும், ஆண்மை குறைவும்தான்.முதல்வர் வழக்கில் இருந்து விடுதலையாக எத்தனையோ பரிகாரங்கள் செய்துள்ளார். அதை எல்லாம் விட சக்தி வாய்ந்த பரிகாரம் மக்களின் ஏகோபித்த வாழ்த்தும், ஆசிர்வாதமும்தான். அதை மீறிய பரிகாரம் ஏதும் கிடையாது. அந்த வாழ்த்து டாஸ்மாக் கடை மூடுவதன் மூலம் நிச்சயம் கிடைக்கும்.


ஒரு காலத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டவுடன் அரசு என்ன நஷ்டத்தில் ஓடிப்போய் விட்டது?? அது போலத்தான் துணிவுடன் 'டாஸ்மாக்'கை தடை செய்ய வேண்டும். அரசுக்கு வருமானம் இல்லை என்பதும், அதனால்தான் டாஸ்மாக் சரக்கை ஊற்றிக்கொடுக்கிறது எனச் சொல்வதும் அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழி இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது. அனைத்து கனிம வளங்களையும் அரசு கைப்பற்றி நேரடியாக அல்லது தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலமாகவோ ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்க முடியும். அரசை ஏமாற்றி சம்பாதித்தவர்களே பல லட்சம் கோடிகள் குவிக்கும்போது அரசே நேரடியாக ஏற்றுமதி செய்யும்போது ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிகள் பெற முடியாதா?? அரசு தமிழகத்தில் இருந்து தாது மண், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து கனிம வளத்தை கைப்பற்ற வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் இரண்டு வண்டி வைத்தது தொழில் ஆரம்பித்த ஆம்னி பஸ் நிறுவனம், இன்று 200 வண்டிகள் வாங்கும் அளவிற்கு ஒரு கையில் மதுவுடன் வண்டி ஒட்டி சம்பாதிக்கும் நிலையில், அரசு பேருந்து மட்டும் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க சென்னை ஐ. ஐ.டி மாணவர்கள் குழுவைக கொண்டு ஆராய வேண்டும். பார்சல் போக்குவரத்தை அரசு தொடங்க வேண்டும்.நகரில் ஷேர் ஆட்டோக்களை ஒழித்து அரசு சிற்றுந்து பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும்.உங்கள் வழக்கு விடுதலைக்காக கோவில் கோவிலாகச் சென்ற மக்கள் பல லட்சம், அவர்களில் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேற்றியவர்கள் அதிகம்.அவர்கள் குடும்ப நலனுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள்? இலவசம் அளித்து மனிதர்களை கொல்வதைக் காட்டிலும், இலவசம் இல்லாமல் இனிமையான வாழ்விற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது மக்களின் நிம்மதிக்கு வழி வகுக்கும் என்பதே உண்மை.
அம்மா செய்வார்களா?

பொது துறை வங்கிகளின் பணத்தை சூறையாடிய மல்லையா

மல்யாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கொடுத்த பணம் ஊ..ஊ..! செய்தி  படிக்க :-Click Here

Wednesday, May 20, 2015

மோடி ஓராண்டில் சாதித்தது, சந்தித்தது என்ன?

வாசகர் பக்கம் 
'எப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறீர்கள் மிஸ்டர் பி.எம்.' என்று 56 நாள் லீவில் போய் திடீரென வந்து அறிக்கை கொடுத்து அசத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், கிண்டல் செய்யும் அளவுக்கு பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மே 26, 2014 அன்று பிரதமராக பதவி ஏற்ற மோடி கடந்த ஓராண்டில் சாதித்தது என்ன? சந்தித்தது என்ன? சாதனை என்ன? மக்களின் வேதனை என்ன?மோடியின் முதல் கோ(வே)ஷம் தூய்மை இந்தியா. 'கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை எல்லோரும் துடைப்பமும், கையுமாக அலைந்தார்கள் சில நாளைக்கு. சிலர் ஊரில் இருந்த குப்பையை கொண்டு வந்து கொட்டி கூட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். கிரிக்கட் வீரர், நடிகர் மற்றும் கவுன்சிலர் முதல் கலெக்டர் வரை கிளீன் பண்ணியே தீருவது என கங்கணம் கட்டி துடைப்பத்துடன் வீதியில் நின்றது சில நாட்களுக்குத்தான். அப்புறம் அந்த படம் ஏன் பெட்டிக்குள் போனது என தெரியவில்லை. இதனால் அப்போது துடைப்பம் வியாபாரிகள் பயனடைந்தார்கள் எனபது தான் அந்த திட்டம் கண்ட பலன் போலும்.
திடீர் இட்லி, திடீர் போண்டா மாதிரி, திடீர் சாமியார்கள் அவ்வபோது உதிர்த்த கருத்துக்கள் சிரிப்பு வெடி. இந்துகள் குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்பித்து, கோட்சே தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தார், காந்தி காட்டி கொடுத்தார் என்ற அளவுக்கு பேசி, குலுங்க குலங்க காமெடி சரவெடிகள் இந்த ஒருவருடத்தில் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.இவ்வளவு சர்ச்சைகள் இருக்கும் போது மோடி இதை பற்றி நாடாளுமன்றத்தில் வாய் திறக்கவில்லை, 'ஒரு வார்த்த பேச ஒரு வருடம் காத்திருந்தேன்' எனபதை உண்மையாக்கும் வகையில் ஒரு நாள் திருவாய் மலர்ந்தார். சர்ச்சை கருத்துகளுக்கு இடைவேளை விடப்பட்டது. அடுத்து ஏதாவது புது மசோதா தாக்கல் செய்யும் போது திசை திருப்ப இவர்கள் திடீரென தோன்றி பிரச்னை கருத்துகளை பரப்பலாம்.

கருப்பு பணம் மீட்கப்பட்டு உங்கள் கணக்கில் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி என்னாச்சு? என கேட்டதற்கு அது ஒரு அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது என்றார் அருண் ஜெய்ட்லி. இது அந்தர் பல்டி. ஆதார் அட்டை ஆபத்து, நாட்டின் பாதுகாப்புக்கே வேட்டு என எதிர்கட்சியில் இருக்கும்போது சொன்ன பா.ஜ.க. ஆதார் தான் இனி எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்று மந்திரம் சொல்லி மானியங்களை வெட்ட இதை பயன்படுத்தும் பா.ஜ.க. அடித்தது ஆகாச பல்டி.காக்காய் உட்கார பனம் பழம் விழுந்ததுபோல் பெட்ரோல் விலை குறைந்ததும், அந்நிய முதலீடுகள் பங்கு சந்தைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்க அம்சங்கள். அந்நிய முதலீடுகள் எந்நேரமும் வாபஸ் ஆகும் வாய்ப்பும் உள்ளது.இதில், சில மசோதாக்கள் படும்பாடு தான் சொல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு மசோதா தாக்கல் நிலையில் வாபஸ் ஆனது. நிலகையகபடுத்தும் மசோதாவை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது பா.ஜ.க. சில மசோதாக்கள் மக்களுக்கு நன்மை கொடுப்பதாக இருந்தபோதிலும் பெரும்பாலானவை, பெருநிறுவனங்களின் பாதுகாவலர் மோடி என்ற அச்சத்தை மக்களிடம் தோற்றுவித்து விட்டன. மொத்தத்தில் சொல்லப்போனால் பிரதமர் மோடியின் ஆட்சி எதையோ பிடிக்க போய், எதுவோ ஆனது போல் ஆகி விட்டது.இந்த ஒருவருட ஆட்சிக்கு உதாரணமாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் சந்தானம் சொல்வது போல், அலைபாயுதே மாதவன் மாடுலேஷன்ல பேசச்சொன்னா, உன்னை யார் அரண்மனைக்கிளி ராஜ்கிரண் மாதிரி பேசச்சொன்னது? என்ற டைலாக் தான் ஞாபகம் வருகிறது!
                        நன்றி :- விகடன் 

கார்ட்டூன்BSNL customers to get unused mobile data on next rechargeSubscribers of BSNL's pre-paid 2G and 3G services will get unused mobile Internet data added to their plans when they go for next recharge.This facility has been available on BSNLnetwork for both 2G and 3G mobile Internet plans but the same was stopped in February, the company said in a statement. "This new facility will be applicable for all the GSM 2G and 3G pre-paid mobile customers of all BSNL circles across India," the statement said.To cash in on high demand for 3G services, BSNL is gradually introducing new 3G mobile Internet plans at prices lower than industry. "BSNL recently introduced Rs 68 Data Special Tariff Voucher (STV) which allows 1 GB 3G Mobile Data for 10 days, never given by any other operator at this cheapest rates in the present market," the statement said.The mobile data carry forward facility of accumulation of unutilised balance data usage in BSNL pre-paid plans will also be applicable for all the customers of normal data STVs and longer validity BSNL 3G data plan schemes. "Quality of service and customer satisfaction is our top priority and transparency makes us different from other operators," BSNL Director for Consumer Mobility, N K Gupta said.

Monday, May 11, 2015

மாவட்ட செயற்குழு

          2015 மே 7 ஆம் நாள் காலை மாவட்ட லோக்கல் கவுன்சில் நடைபெற்றது.
          அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் மாவட்ட செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவிச் செயலர் தோழர் முத்துச்சாமியின் அஞ்சலியுரையுடன் நடைபெற்ற மாவட்ட செயற்குழுவை மாவட்டச் செயலர் தோழர் இரவீந்திரன் ஆய்படு பொருள்களை விளக்கி தொடங்கி வைத்தார்.
          லோக்கல் கவுன்சிலில் பேசப்பட்ட விஷயங்கள், போன் மெக்கானிக் கேடர் மாவட்ட அளவிலான லாங் ஸ்டாண்டிங் மாற்றங்கள், பொது மேலாளர் எழுத்தர் பணியில் சுழல் மாற்றம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் நமது பங்கும் பங்கேற்பும் என பல்வேறு விஷயங்களில் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Friday, May 1, 2015

மே தின கொடியேற்று விழா

 இன்று மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மே தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கள் இளமாறன் மற்றும் சிங்காரவேல் முன்னிலையில் நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் BSNLEU சங்க கொடியை தோழர் மாரியப்பா  அவர்களும் TNTCW U  கொடியை ஒப்பந்த ஊழியர் சங்க தோழியர் அவர்களும் ஏற்றிவைத்தனர் . 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...