Showing posts with label ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம். Show all posts
Showing posts with label ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம். Show all posts

Saturday, February 18, 2017

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

17/02/2017 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது ..மறைந்த தோழர் முத்துராமலிங்கம்அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது . கிளை செயலர் தோழர் பொன்ராஜ் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,முருகன் ,வேலுச்சாமி ,பிச்சை ஆகியோர் பிரச்சனைகளை சுட்டி காட்டி விவாதத்தில் பங்கேற்றனர் .ஏற்கனவே மார்க்கெட்டிங் பணிகளில் சிறப்பாக பணி புரியும் ராஜபாளையம் தோழர்கள் FORUM முடிவுகளை அமல்படுத்துவதில் சிறப்பான பங்கை வகிக்கும் என அனைவரும் உறுதி கூறினர் 8 வது .அனைத்திந்திய மாநாடு பிரதிபலித்த விஷயங்களை மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி சுட்டிக்காட்டி பேசினார் .FORUM முடிவுகளை மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவாக விளக்கினார் .மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக மேலும் ரூபாய் 6000/- ஐ மாவட்ட சங்கத்திடம் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம்  வழங்கினார் .அதே போல் பணி நிறைவு செய்த தோழியர் மாரியம்மாள் அவர்கள் மாவட்ட ,மற்றும் மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting

Saturday, December 20, 2014

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

20-12-2014 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் தோழர் அனவரதம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ஆய்படு பொருளை  சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார் .கையெழுத்து  இயக்கம் பற்றி மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் விளக்கினார் .வர உள்ள  இயக்கங்களின் தொகுப்பையும் , அதில்  ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டிய அவசியத்தையும் ,இன்றைய மத்திய அரசு பொது துறை நிறுவனங்களை சீரழிக்கும் கொள்கையை அமல்படுத்தி தனியார் நிறுவனங்களை கொழுக்க வைக்கும் போக்கையும் , மத வெறியை தூண்டி உழைக்கும் வர்க்க போராட்டத்தை திசை திருப்பும் அரசின் போக்கையும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனியும் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரனும் விளக்கமாக எடுத்துரைத்தனர் .மாவட்ட அமைப்பு  செயலர்கள் தோழர்கள் சிவஞானம் மற்றும் இளைய தோழர் ராதாகிருஷ்ணன் அவர்களும் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேல்சாமி அவர்களும் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .
  

Thursday, April 10, 2014

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

    இன்று(10-04-2014) ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் மற்றும்  தோழர் செல்வராஜ் அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழா கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ,TTA அவர்கள்  அனைவரையும் வரவேற்று பேசினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பொதுக்குழுவை தொடக்கி வைத்து பேசும் போது நடந்து முடிந்த மாவட்ட மகாநாடு , தவறான மாற்றல் உத்தரவை இட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மற்றும் சென்னை சொசைட்டி RGB தேர்தல் ஆகியவற்றின் வெற்றிக்கு நமது உருக்கு போன்ற ஒற்றுமை மட்டுமே காரணம் என்பதை விரிவாக   கூறினார் .வர உள்ள மக்களவை தேர்தலில் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவை அமல்படுத்தவேண்டிய கட்டாயத்தை விளக்கினார் .RGB தேர்தலில் திருமங்கலம் பார்முலா போல் NFTE சங்கத்தினர் வீடு வீடாக ரிஸ்ட் வாட்ச் கொடுத்த கேவலத்தையும் மீறி நாம் வெற்றி பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது என கூறி மாவட்ட செயலர் அனைவருக்கும் அதற்காக் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் .தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு செயற்குழுவில் சொல்லிய உடன் ரூபாய் 7500/- வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் பேசும் போது மாவட்டத்தில் வளர்ச்சி பணிக்கு மாவட்ட நிர்வாகம் எந்த விதத்திலும் உதவாத போக்கை கடைபிடிப்பதை உதாரணங்களுடன் எடுத்து உரைத்தார்.தோழர் செல்வராஜ்,TTA அவர்களின்  பணி ஓய்வை பாராட்டி தோழர்கள் முத்துசாமி ,வெங்கடேஷ்,சிவஞா னம்  ,வெள்ளை பிள்ளையார் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர் தோழர்  வேல்சாமி ஆகியோர் பேசினர் .ஏற்புரையில் பேசிய தோழர் செல்வராஜ் சங்கத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டிய அவசியத்தை மிக அழகாக ஒரு குட்டி கதை கூறி விளக்கினார் .தோழர் செல்வராஜ் அவர்களுக்கு தோழர் ரவீந்திரன் மாவட்ட சங்கம் சார்பாக பொன்னாடை போர்த்தி கவ்ரவித்தார் .நினைவு பரிசை மாவட்ட தலைவர்  தோழர் சமுத்திரகனி அவர்கள் வழங்கினார் .ஓய்வூதியர்  சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி தோழர் செல்வராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவ்ரவித்து மக்களவை தேர்தல் பணி குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்தார் .கிளை பொருளாளர் தோழர் I .முருகன் நன்றி கூற பொது குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...