Showing posts with label FORUM. Show all posts
Showing posts with label FORUM. Show all posts

Thursday, March 16, 2017

FORUM முடிவை அமலாக்க உறுதியுடன் செய்லபடும் விருதுநகர் மாவட்ட சங்கம்

15/03/2017 அன்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU  மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் . வழக்கம் போல் ராஜபாளையம் தோழர்கள் இன்று 220 சிம்களை விற்றும்  3 M N P பெற்றும் முதலிடத்தில் வந்துள்ளனர் இங்கு நமது கிளை செயலர் தோழர் பொன்ராஜ், மாவட்ட சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி ,மூத்த தோழர் தியாகராஜன் ஓய்வூ தியர் சங்க . சிவஞானம்  ஆகியோர் பங்கேற்றனர் இங்கு 2 தரைவழி இணைப்புகளும் 2 பிராட் பேண்ட் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு உள்ளன ..சிவகாசி கட்டளைப்பட்டியில்  100 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு 3 தரை வழி இணைப்புகள் பிராட்பேண்டுடன் பெறப்பட்டு உள்ளன .. இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி,கிளை செயலர் M.கருப்பசாமி ,நாகேந்திரன் ,இருளப்பன் ஆகியோர் பங்கேற்றனர் .W புதுப்பட்டியில் 78 சிமகளும்  , கான்சாபுரம் பகுதியில்  69 சிம்களும் விற்கப்பட்டுள்ளன .M   ரெட்டியாபட்டியில் தனி நபராக தோழர் ராஜேந்திரன் 110 சிம்களை விற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் RR நகரில் 2 தரைவழி இணைப்புகளை  பிராட் பேண்ட் வசதியுடன் பெற்றுள்ளார் .  .Wபுதுப் பட்டி மற்றும் கான்சாபுரத்தில் மாவட்ட செயலர் , சண்முகசுந்தரம் , கோவிந்தராஜ் மற்றும் நமது தோழியர்கள் மேரி , முத்துலெட்சுமி ஆகியோர்  பங்கேற்றனர் , ரோசல்பட்டியில் கிளைச் செயலர்கள் மாரிமுத்து இளமாறன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சந்திரசேகரன் , மாரியப்பா ,வெங்கடப்பன் பங்கேற்ற நிகழ்வில் 10 சிம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
 Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 3 people, people sitting, child and outdoor 
 Image may contain: 2 people

Tuesday, February 21, 2017

சபாஷ் தோழியரே !

சபாஷ் தோழியரே !

நமது GM அலுவலகத்தில் கடந்த 03/03/2016 அன்று பரிவு அடிப்படையில் RM கேடரில் பணி நியமனம் பெற்ற  தோழியர் D.மேரி .அந்த தோழியர் தனது சொந்த கிராமமான W .புதுப்பட்டியில் தனி நபராக நமது BSNL சிம்களை விற்பதற்கு வீடு வீடாக கேன்வாஸ் செய்து இன்று 5 மணி கால அவகாசத்தில் 199 சிம்களை விற்பனை செய்தார் . அவருடைய வயசு 48. இந்த வயதில் அதுவும் பணி நியமனம் பெற்று 1 வருடம் கூட ஆகாத நிலையில் கூட    FORUM எடுத்த முடிவை நான் செய்கிறேன் என்ற அந்த தோழியருக்கு நெஞ்சு  நிறை  பாராட்டுக்கள் .அவருடன் துணை புரிந்த தோழியர் பாண்டிசெல்விக்கும் பாராட்டுக்கள் .மாவட்ட செயலர் ரவீந்திரன் அவர்களும் அவர்களுடன் இந்த பணிக்கு துணை நின்றார் .

FORUM முடிவை அமல்படுத்துதல்

FORUM முடிவை நடைமுறைபடுத்தும்  பணியை நமது தோழர்கள் செவ்வனே தொடங்கி விட்டனர் .17/02/2017 அன்று திருச்சுழியில் தோழர்கள் மதி கண்ணன்  கணேசமூர்த்தி பங்கேற்க நிகழ்வில் 104 சிம்களையும்  20/02/2017 அன்று ராஜபாளையத்தில் நமது தோழர்கள் பொன்ராஜ ,அனவ்ரதம் ,ராதாகிருஷ்ணன் ,வெள்ளை பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் பங்கேற்ற நிகழ்வில்  152 சிம்களையும் ,சிவகாசியில் 54 ம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் குரூப்ஸ் பகுதியில் தோழர் தங்கதுரை பங்கேற்ற நிகழ்வில் 57 ம் விற்பனை செய்துள்ளனர் .இது தவிர்த்து தரைவழி இணைப்புக்களை பெறும் பணியையும் தொடங்கிவிட்டனர் .கிளை பொதுக்குழுவில் எடுத்தமுடிவை அமல்படுத்தும் ராஜபாளையம் ,சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளுக்கு பாராட்டுக்கள் .கிடைத்த  தகவல்கள் அடிப்படையில் இன்னும் அதிக அளவில் ஊழியர்களை பங்கேற்க செய்வதில் அனைத்து கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் முனைப்போடு செயல்பட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . 

Tuesday, August 2, 2016

FORUM

விருதுநகர் மாவட்ட FORUM கூட்டம் 01/08/2016 அன்று நடைபெற்றது .SNEA மாவட்ட செயலர் திரு.செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் A .நாராயணன் , SNEA மாவட்ட சங்க நிர்வாகி திரு .G.செல்வராஜ் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன்  ஆகியோர் பங்கேற்ற அக் கூட்டத்தில் வர இருக்கின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி BSNL மற்றும் MTNL நிறுவனத்தில் ஒரு தனியார் நிறுவனத்தை கேந்திர கூட்டாளியாக கொண்டு வந்து ,நிர்வாகத்திலும் தனியாரை அனுமதிக்க ஒப்புதல் கொடுத்துள்ள நிதி ஆயோக் முடிவை கண்டித்து மாவட்டம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விருதுநகரில் நமது BSNL திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது    என்ற அடிப்படையில்  நடைபெறும் பேரணிக்கு அனைவரையும் பங்கு கொள்ள வைப்பது என்ற முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன .கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் இந்த இரு இயக்கங்களையும் வெற்றிகரமாக்க அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திரட்டுமாறு தோழமையுடன் கேட்டு  கொள்கிறோம் .
                                   ஆர்ப்பாட்டம் 
03/08/2016                                  GM அலுவலகம்

தலைமை :- தோழர் .A.நாராயணன் ,மாவட்ட தலைவர் ,AIBSNLEA 
கோரிக்கைகளை விளக்கி :-
1. திரு .செந்தில்குமார் ,மாவட்ட செயலர் ,SNEA 
2.தோழர் .S.ரவீந்திரன் ,மாவட்ட செயலர்,BSNLEU 
3.தோழர் .V.பரமேஸ்வரன் ,மாவட்ட செயலர் ,சேவா (R )
4.தோழர் .கோபிநாத் ,மாவட்ட செயலர் ,SNATTA
5. தோழர் கேசவன் ,மாவட்ட உதவி செயலர் ,சேவா (R)

Friday, July 15, 2016

FORUM தலைவர்கள் மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருடன் சந்திப்பு

FORUM தலைவர்கள் மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருடன் சந்திக்கும் புகைப்படங்கள் பார்க்க :-Click Here

Friday, December 11, 2015

"புன்னகையுடன் சேவை

10-12-2015 அன்று நடைபெற்ற FORUM கூட்டத்தில் ஒரு 100 நாள் திட்டமாக "புன்னகையுடன் சேவை" என்று நமது சேவையை விரிவு படுத்திட ,செழுமை படித்திட வரும் 01-01-2016 முதல் இயக்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது .
அதன் படி

1)செல்லுலார் சேவை ,லேன்ட் லைன் சேவை ,அகன்ற அலை கற்றை சேவையை அதிகப்படுத்த தீவிரமாக மார்க்கெட்டிங் பணிகளை செய்வது .

2)பழுதில்லா சேவையை உத்திரவாதப்படுதுவது .
3) MNP யை பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்துவது .
4)சரண்டர் செய்த லேன்ட் லைன் மற்றும் பிராட் பேண்ட் இணைப்புகளை மீண்டும் பெறுவது .


Thursday, April 16, 2015

FORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள்

விருதுநகர் மாவட்ட FORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள் இன்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது .ராஜபாளையத்தில் நடை பெற்ற கூட்டதிற்கு NFTE மாவட்ட தலைவர் தோழர் தளவாய் பாண்டியனும் BSNLEU கிளை தலைவர் தோழர் அனவரதம் அவர்களும் கூட்டு தலைமை தாங்க FORUM தலைவரும் ,NFTE சங்க மாவட்ட செயலருமான தோழர் R சக்கணன் , FORUM கன்வீனரும் BSNLEU மாவட்ட செயலருமான தோழர் S ரவீந்திரன் , SNEA சங்கத்தின் மாநில துணை தலைவர் தோழர் கோவிந்தராஜன் , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T ராதாகிருஷ்ணன் ,சேவா BSNL மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மைனர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் .வர உள்ள போராட்டத்தை 100% வெற்றியாக்க வேண்டிய அவசியத்தையும் போராட்டத்தின் முக்கியத்தையும் அனைவரும் விரிவாக பேசினர் . ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கூட்டதிற்கு NFTE கிளை செயலர் தோழர் கூடலிங்கம் தலைமை தாங்கினார் .








Thursday, December 11, 2014

Forum ஆர்ப்பாட்டம்

கோரிக்கை தின ஆர்ப்பாட்ட புகைப்பட தொகுப்பு 
ராஜபாளையம் 
விருதுநகர் 


அருப்புக்கோட்டை



சிவகாசி 







ஸ்ரீவில்லிபுத்தூர் 




Saturday, February 22, 2014

தொலைத் தொடர்பு துறையின் கூடுதல் செயலருடனான சந்திப்பு

          இம்மாதம் 18ஆம் நாள் நமது பொதுச்செயலர் தோழர் அபிமன்யு மற்றும் AIBSNLEA பொதுச்செயலர் திரு பிரகலாத் ராய் இருவரும் தொலைத் தொடர்பு துறையின் கூடுதல் செயலர் திருமதி ரீட்டா டியோட்டியா அவர்களை BSNL - MTNL ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக சந்தித்தார்கள். பிரதம மந்திரிக்கு Forum சமர்ப்பித்த நினைவுக் குறிப்பின் (memorandum) உள்ளடக்கத்தை இரண்டு தலைவர்களும் விரிவாக எடுத்துரைத்தார்கள். பெரும் பொருளாதார கடன் நெருக்கடியில் இருக்கக்கூடிய MTNL உடன் BSNL இணைக்கப்படக்கூடாது என்ற ஊழியர்களின் மனநிலையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். தலைவர்களின் கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என கூடுதல் செயலர் உறுதியளித்துள்ளார்.
(குறிப்பு: விஷயத்தின் அவசரம் கருதி FORUMன் பிற தலைவர்கள் டெல்லியில் இல்லாத சூழலில் தலைவர்கள் இருவரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்)

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...