Monday, August 29, 2016
Sunday, August 28, 2016
PLI கமிட்டிக் கூட்டமும் இதர செய்திகளும்…
PLI கமிட்டிக் கூட்டமும் இதர செய்திகளும்…மாநில சங்க சுற்றறிக்கை எண் 124 படிக்க :-Click Here
Thursday, August 25, 2016
ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க மாநிலம் கொல்கொத்தாவில் நமது BSNLEU அலுவலகம் திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்













Tuesday, August 23, 2016
செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள்
தொடரந்து 3 வது நாளாக செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் பற்றி விளக்க கூட்டங்களை அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் மாவட்ட சங்கம் நடத்தியது .அருப்புக்கோட்டையில் கிளை தலைவர் உதயகுமார் தலைமைவகிக்க கிளை செயலர் தோழர் மதி கண்ணன் முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மற்றும் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் உரை நிகழ்த்தினர் .மாவட்ட சங்க நிர்வாகியும்,கிளை பொருளருமான தோழர் அஷ்ரப் தீன் நன்றி கூறி முடித்து வைத்தார் .மாவட்ட உதவி செயலர்கள் தோழர் ஜெயக்குமார் ,வெங்கடப்பன் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி ,கிளை செயலர் தோழர் செந்தில் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகிகள் சோலை மற்றும் சிங்காரவேலு ஆகியோரும் கலந்து கொண்டனர் .



விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தை தோழர் சந்திரசேகரன் தலைமை வகிக்க தோழர் இளமாறன் முன்னிலை வகிக்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் வேலை நிறுத்த விளக்க உரைநிகழ்த்தினார்.AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் மற்றும் CITU தோழர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். . .




2016 ஆகஸ்ட் 24ல் கிளைகள்தோறும் ஆர்ப்பாட்டம்
திரிணாமுல் காங்கிரஸ்
குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து கிளைகள்தோறும் ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க மாநிலம் கல்கத்தா மத்திய தந்தி அலுவலகத்தில் செயல்பட்டுவரும்
BSNL ஊழியர் சங்க அலுவலம் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டது. அலுவலக
உபகரணங்கள், மின்விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன் அலுவலகத்தில்
பணிபுரியும் BSNLEU தோழர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது
BSNL சொத்துக்களை நாசப்படுத்தும் தாக்குதலாகவும் இருக்கிறது. ஆனால், ஆச்சர்யப்படும்
விதமாக மேற்கு வங்க முதன்மைப் பொது மேலாளர் இந்த வன்முறையாளர்கள்மீது தாக்குதல் தொடர்பாக
எந்த FIRம் தாக்கல் செய்யவில்லை.
திரிணாமுல் குண்டர்களுக்கு மேற்கு வங்க முதன்மைப் பொது மேலாளர் மறைமுகமாக
ஆதரவளிக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயம் BSNLன் முதன்மை
மேலாண்மை இயக்குநரின் (CMD) கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் தகுந்த நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளால். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இப்படியான
சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் இந்த வன் செயலைக் கண்டித்து 24.08.2016ல்
ஆர்ப்பாட்டம் நடத்தும்படி மத்திய சங்கம் வழிகாட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில்
24.08.2016 அன்று
கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்
Sunday, August 21, 2016
BSNL, Microsoft Corporation partner for enterprise business
courtasy:-
செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள்
மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் 19/08/2016 அன்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளில் எழுச்சியுடன் நடைபெற்றன .ராஜையில் தோழர் அனவ்ரதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட உதவி செயலர்கள் வெங்கடப்பன் ,ஜெயக்குமார்,தங்கதுரை ,மாவட்ட சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் ,மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் ரவீந்திரன் ஆகியோர் செப்டம்பர் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை விரிவாக கூறினர் .கிளை செயலர் முத்துராமலிங்கம் நன்றி கூறி நிறைவு செய்தார்








ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கூட்டத்தை தோழர் வெங்கடசாமி தலைமை தாங்கி நடத்தினார் .தோழர் சமுத்திரம் கிளை செயலர் நன்றி கூறி நிறைவு செய்தார் .


20/08/2016 அன்று சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்தை தோழர் அழகுராஜ் தலைமை வகிக்க தோழர்கள் முத்துசாமி மற்றும் கருப்பசாமி அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் ,ஷண்முகவேலு ,முனியாண்டி ,மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட பொருளர் சந்திரசேகரன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி , SNEA சங்க தோழர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்








Wednesday, August 17, 2016
ஆர்ப்பாட்டம்
BSNLEU, BSNLMS மற்றும் SNATTAஆகிய சங்கங்கள் இணைந்து 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17.08.2016 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகளில் சில









Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...