இன்று( 31/07/2016)விருதுநகர் BSNLEU சங்கத்தின் முதல் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் A .கண்ணன் அவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்த அனைவரும் 1 நிமிடம் மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் .பின்னர் மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மேல் விவாதம் நடைபெற்றது .கீழ் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன .
1.செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை விளக்கி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஊழியர்களை சந்திப்பது .அந்த அடிப்படையில் 19/08/2016 அன்று காலை 10 மணிக்கு ராஜபாளையம் ,அன்று 11.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ,20/08/2016 அன்று காலை 10 மணிக்கு சிவகாசி ,அன்று காலை 1130 மணிக்கு சாத்தூர் 22/08/2016 அன்று காலை 10 மணிக்கு அருப்புக்கோட்டை 1200 மணிக்கு விருதுநகரில் நுழைவாயில் கூட்டங்களாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது .
2.தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவை 31/08/2016 அன்று ஒரு விரிவடைந்த செயற்குழுவாக நடத்துவது என்றும் அதை போராட்ட விளக்க கூட்டமாக மாவட்டம் தழுவிய அளவில் நடத்துவது .
3.அகில இந்திய மாநாட்டு நிதி வசூல் இயக்கத்தை வரும் 01/08/2016 முதல் 20/08/2016 வரை நடத்துவது என்றும் வரும் 31/08/2016 க்குள் .நிதி திரட்டும் இயக்கத்தை முடித்துவிடவேண்டும்.
Quota :-
1,விருதுநகர் ---------------------------60,000
2.ஸ்ரீவில்லிபுத்தூர் -------------------20,000
3.ராஜபாளையம் ----------------------10,000
4.அருப்புக்கோட்டை ----------------20,000
5.சாத்தூர் ----------------------------------10,000
4.லோக்கல் கவுன்சில் உறுப்பினர்களாக தோழர்கள் .S ரவீந்திரன்,Office Superintendent A.சமுத்திரக்கனி ,TT A.கண்ணன் ,JE,A.S.அஸ்ரப்தீன் ,JE,M.முத்துசாமி,JE,N.ராதாகிருஷ்ணன் ,TT ,M.S.இளமாறன்,Office associate ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
5.ஒர்க் கமிட்டிக்கு தோழர்கள் R.ஜெயக்குமார் ,JE,U.B.உதயகுமார் , Office Superintendent,கலையரசன் ,TT ஆகியோரும் ,welfare கமிட்டிக்கு தோழர் C .சந்திரசேகரன் அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
6.FORUM சார்பாக நடைபெற உள்ள ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி ஆகியவற்றை சிறப்பாக செய்வதிற்கு அனைத்து கிளைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
7. வரும் 8,9 தேதிகளில் நடைபெற உள்ள மேளாவில் நமது தோழர்கள் பெரும் எடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது .
8.மாவட்ட சங்க வைப்பு நிதியில் எந்த காரணம் கொண்டும் வர இருக்கும் காலங்களில் பணம் செலவு செய்ய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9.மாவட்ட உதவி செயலர்கள் மற்றும் மாவட்ட பொருளாளருக்கு வேலை பகிர்வு அடிப்படையில் கீழ் கண்ட கிளைகளில் நடைபெறும் பொதுக்குழு கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .
1.தங்கதுரை -ராஜை ,திருவில்லிபுத்தூர் ,சிவகாசி
2.ஜெயக்குமார் -விருதை ,அருப்புக்கோட்டை ,சாத்தூர்
3.வெங்கடப்பன் -விருதை ,சிவகாசி ,சாத்தூர்
4.அஸ்ரப் தீன் -அருப்புக்கோட்டை ,சாத்தூர் ,ஸ்ரீவில்லிபுத்தூர்
5.சந்திரசேகரன் -அருப்புக்கோட்டை,விருதுநகர் ,ராஜை