தோழர் மாரிமுத்து தலைமை உரை
மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு மாவட்ட செயலர் உரை
தோழர் அய்யாசாமி வாழ்த்துரை
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் ஒரு பகுதி
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் மற்றோர் பகுதி
தோழர் இளமாறனின் வரவேற்புரை
தோழர் S .P .முருகேசனின் ஏற்புரை
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் மற்றோர் பகுதி
மாவட்ட செயலர் உரை
மாவட்ட செயலர் உரை
தோழர் பெருமாள்சாமி முருகேசனை கௌரவித்தல்
மூத்த கணக்கு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரை
தோழர் S.P.முருகேசன் STM அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்க பொதுக்குழு கூட்டம் 29-11-2013 அன்று கிளை தலைவர் தோழர் Aமாரிமுத்து தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கிளை செயலர் தோழர்.M.Sஇளமாறன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நல்கினார். தந்தி பிரிவில் பணியாற்றி சிறப்பான சேவை செய்து ,நமது BSNLEU சங்கத்தின் ஒரு விசுவாசமான ஒரு தோழனாக 30-11-2013 அன்று பணி ஓய்வு பெறும் தோழர் முருகேசனை பாராட்டி மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் அவர்கள் பேசும் போது இன்றைய கடின சூழ்நிலையில் கூட நமது சங்கம் பல்வேறு சாதனைகளை செய்து வருவதை உதாரணங்களுடன் சுட்டி காட்டினார்.தோழர் முருகேசனை பாராட்டி தோழர்கள் அய்யாசாமி,பெருமாள்சாமி,மூத்த கணக்கு அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ,தோழர் K.R .K அவர்கள் பேசினர் .தோழர் சித்திரவேல் முருகேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்த,மாவட்டசெயலர் தோழர் ரவீந்திரன் சந்தனமாலை அணிவிக்க ,தோழியர் தனலட்சுமி அவர்கள் கிளை சங்கம் சார்பாக நினைவு பரிசை வழங்கினார்.தோழர் முருகேசன் ஏற்புரை நிகழ்த்தினார்.தோழர் சித்திரவேல் நன்றியுரை கூற கிளை கூட்டம் இனிதே நிறைவடைந்தது .
No comments:
Post a Comment