Showing posts with label வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வாழ்த்துகள். Show all posts

Monday, June 27, 2016

வாழ்த்துகள்

கடந்த வாரம் அருப்புக்கோட்டையில் நகர எல்லைக்குள் AIRTEL நிறுவனம் நமது கேபிள் இருக்கும் ரூட்டில் ‘சைடு போர்’ போட்டு ஆப்டிகல் பைபர் கேபில் பதிப்பதற்காக ரோட்டைத் துளைக்கத் தொடங்கினர். தகவல் தெரிந்ததும் திருமிகு ஜான்சன் சாமுவேல் அவர்களும், திருமிகு சரவணன் அவர்களும் நமது ஊழியர்களுடன் சென்று வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இன்றும் (27.06.2016) AIRTEL நிறுவனம் பணியில் ஈடுபட முயற்சித்தபோது, வேலையை நிறுத்த வைத்ததுடன், கோட்டப் பொறியாளர் திருமிகு சரவணன், இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி திருமிகு ஜான்சன் சாமுவேல், துணைக்கோட்டப் பொறியாளர் திருமிகு சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் TTA தோழர்கள் மதிகண்ணன், அஷ்ரஃப்தீன், இராஜேந்திரன், வெங்கடேஷ், TM தோழர்கள் தியாகராஜன், காசிராஜ், அழகர், முனியசாமி, சத்தியவரதன் ஆகியோர் திரளாகச் சென்று அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். AIRTEL நிறுவனத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். நமது நியாயமான கோரிக்கையினைப் புரிந்து கொண்ட நகர காவல் நிலைய ஆய்வாளர் இயந்திரங்கள் மூலம் வேலை செய்வதை நிறுத்தி உள்ளார். அவருக்கு நமது நன்றி.
BSNL நமது நிறுவனம். முன்னரே புதைக்கப்பட்டுள்ள BSNL CABLEகள் நமக்கு வருமானம் தரக்கூடிய சொத்து. இதனைப் புரிந்து கொண்டு கைகோர்த்த அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த நன்றியும்.
இந்த ஒற்றுமைதான்
இன்றைய நிலையில் தேவையாக இருக்கிறது.
BSNL நமது நிறுவனம். BSNL நிறுவனத்தையும் BSNLன் சொத்துக்களையும் காப்பது
நமது கடமை.

Saturday, August 15, 2015

சுதந்திர தினம்

அனைவருக்கும் புரட்சிகர சுதந்திர தின வாழ்த்துகள்

Friday, March 6, 2015

சர்வதேச மகளிர் தினம் - பார்வையும் பகிர்வும்

 

                    தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.
                    ஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.
                    அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.
                    பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன.
                    1908 ஆம் ஆண்டு சுமார் 15,000 பெண்கள் தங்களுக்கு வேலைக்குத் தகுந்த சிறப்பான சம்பளம், குறைந்த நேரப் பணி மற்றும் வாக்குரிமை கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் போராட்டம் என்பதைவிட சோஷியலிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருந்தது. 1913 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
                    1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. அதில் ஜெர்மனி சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் ‘மகளிர் அலுவலக’த் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரது யோசனை. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக இவரது யோசனையை வரவேற்றனர்.
                    1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது. சுமார் ஒரு மில்லியன் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாகத் திரண்டு பிரசாரத்திலும் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக மார்ச் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏற்பட்ட ‘முக்கோண தீ விபத்து’ 140 உழைக்கும் மகளிரின் உயிரைப் பறித்தது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்தக் கொடும் சம்பவம் பெண்களின் உழைக்கும் சூழலைப் பற்றிய மோசமான நிலையை உலகுக்கு அறிவித்தது. இதே ஆண்டில் உழைக்கும் மகளிர் Bread and Roses என்ற போராட்டமும் நடத்தினர். இதில் பங்கு பெற்ற மகளிர் We want Bread but we want roses, too என்று எழுதப்பட்ட கொடிகளை தாங்கி ஊர்வலம் சென்றனர்.
                    1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்களை வாழ்த்துவதுடன் நில்லாமல் அவர்களின் உரிமைப் போராட்டத்தில் வர்க்க உணர்வுடன் கைகோர்க்க BSNLEU அறைகூவி அழைக்கிறது.

Wednesday, March 26, 2014

இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு புதன்கிழமை தொடங்குகிறது. 3,179 மையங்களில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 26-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
          தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் மாணவ-மாணவிகள் மனஇறுக்கத்தைப் போக்கி விடைகளை திட்டமிட்டு நல்ல முறையில் எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் (9.15 மணி முதல் 9.25 மணி வரை) வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11,552 பள்ளி களைச் சேர்ந்த 10,38,876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 5,30,462. மாணவிகள் 5,08,414 பேர்.

பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றிபெற்று உலமயத்தின் அடுத்த போட்டிக்கு ஆயத்தமாக மாவட்ட சங்கம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Saturday, January 25, 2014

குடியரசு தின வாழ்த்துக்கள்

          அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் மத்தியில் அமைதி, நட்பு, சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று, நாம் அனைவரும் இந்த குடியரசு விழாவில் விழாவில் உறுதிமொழி எடுத்து கொள்வோம் என அனைவர்க்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

Friday, January 17, 2014

புத்தாண்டில் புது வரவு -பெரு வரவு

         15-01-2014 மாலை நிலவரப்படி 200க்கும் மேற்பட்ட தோழர்கள் BSNLEU சங்கத்தில் இணைந்துள்ளனர். இதில் 175க்கும் மேலான தோழர்கள் NFTE தலைமையை புறக்கணித்து(மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட) நம்மிடம் இணைந்தவர்கள் என்பதை சென்னை தொலைபேசி மாநில சங்கம் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Tuesday, December 31, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Reach For The Stars!!
விருதுநகர் பி எஸ் என் எல் மாவட்ட சங்கத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பணி ஓய்வு



        இன்று (31-12-2013) பணி  ஓய்வு பெறும் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க விருதுநகர் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .

Thursday, November 7, 2013

நவம்பர் புரட்சிதின நல்வாழ்த்துக்கள்


          உலகைக் குலுக்கிய நவம்பர் புரட்சி நடந்தேறிய நாள் இன்று. உலகில் முதன் முதலாய் மனிதனை மனிதன் சுரண்டாத சோசலிச அமைப்பை அமைப்பதற்கு கால்கோள் நடத்திய நாள் இன்று.எல்லோரும் எல்லாமும் பெறுகிற சோசலிச சமுதாயத்தை அமைத்திட இந்நாளில் சூளுரைப்போம்.
          அனைவருக்கும் நவம்பர் புரட்சிதின நல்வாழ்த்துக்களை விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம்  உரித்தாக்குகிறது.

Tuesday, October 15, 2013

பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்,



          மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம். தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வாழ்த்துவோம் !

Friday, October 11, 2013

தசரா நல்வாழ்த்துக்கள்

அனைவர்க்கும் BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கத்தின் தசரா நல்வாழ்த்துக்கள் 

Monday, September 30, 2013

14th பிஎஸ்என்எல் நிறுவன தினம்

14th  பிஎஸ்என்எல் நிறுவன தினம் 
                                         
நமது நிறுவனம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் முடிவடையும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் நமது நிறுவனத்தை பலவீனப்டுத்தும் சூழலில் நமது BSNLEU சங்கம் தொடர்ந்து அனைவரையும்  ஒற்றுமைப்படுத்தி  ஒரு சமரசமற்ற போராட்ட பாதையில்   சென்றதால்       நம் நிறுவனத்திற்கு வரவேண்டிய BWA spectrum தொகை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன .ஒரு கடினமான நிதி நெருக்கடி சூழலில்   இத் தொகை வருவது நமது நிறுவனம் மேலும் பலவீனபடுவதை தடுக்கும் . நல்ல சம்பளம் ,நல்ல பதவி உயர்வு   ஆகியவற்றை தந்த இன் நிறுவனத்தை மேம்படுத்த நம் பணி கலாச்சாரத்தை மாற்றி,சேவையை மேம்படுத்தி  நமது நிறுவனத்தை லாபகரமாக மாற்றிட சபதமேற்போம் ! நமது நிறுவனம்   உதயமான   நன் நாளில் .  

Wednesday, August 14, 2013

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்


          இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த உன்னத தியாகிகளை நினைவு கூர்ந்து, இந்திய நாட்டின் திருக்கோயில்களான பொதுத்துறை நிறுவனங்களை   காக்க  நடக்கும் போராட்டங்களிலும் பங்கேற்று,இந்திய திருநாட்டை  மேற்கத்திய நாடுகளின் அடிமையாய் ஆக்கும் அரசின் போக்கை எதிர்த்து தொழிலாளி மற்றும் விவசாயிகளுடன் இணைந்து ஒரு சமரசமற்ற போராட்ட களத்தை உருவாக்க  சபதமேற்போம்  இந்த   சுதந்திர திருநாளில்!

Saturday, April 27, 2013

மே தின வாழ்த்துக்கள்

உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் அறை கூவல் 
21 ஆம் நூற்றாண்டின் அடிமைகள் நாம் அல்லர்  
அனைவர்க்கும் BSNLEU மாவட்ட சங்கத்தின் புரட்சிகர மே தின நல் வாழ்த்துக்கள் 
WFTUவின் அறை கூவலின் தமிழாக்கம் படிக்க CLICK HERE

Tuesday, April 16, 2013

நன்றி

          
          6  வது சரிபார்ப்பு தேர்தலுக்காக கடந்த 2 மாத காலமாக ஒரு கடுமையான உழைப்பை தந்த அனைத்து கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ,மற்றும் கிளை சங்க முன்னணி தோழர்கள் ,தோழியர்கள் அனைவருக்கும் நமது BSNLEU மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...