Wednesday, November 30, 2016

அல்லம்பட்டி

தொடரும் களவு 
பலியாகும் எலிகள் !
தப்பி ஓடும் பெருச்சாளிகள் !
பெருச்சாளிகள் ! க்கான பட முடிவு
இது தான் அல்லம்பட்டி 
உரிய விசாரணையை மாவட்ட நிர்வாகம் செய்யுமா ?
களை எடுக்குமா ?களவை தடுக்குமா ?

Saturday, November 26, 2016

15 ஆவது CITU அனைத்திந்திய மாநாடு

citu all india conference க்கான பட முடிவு
15 ஆவது CITU அனைத்திந்திய மாநாடு ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரியில் இன்று உற்சாகமாக துவங்கியது .5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மகாநாட்டை CITU சங்கத்தின் அனைத்திந்திய தலைவர் தோழர் A .K பத்மநாபன் கொடியேற்றி துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார் .நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் இம் மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார் .

பிடல் காட்ரோ மறைவு


கியூபாவின் நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ இன்று காலமானார்

1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார்.

காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம்.

ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தவர் என்கிறார்கள்.

கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார்.

அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள்.

இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார்.

ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர சகோதரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர்.

ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக் குடும்பமும் பகிர்ந்துக்கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.

ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி தன்னுடைய படிப்பை தொடங்கினார். சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.

ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார்.

பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாகப் பரிமாணம் பெற்றார்.

கியூபாவின்ச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.

49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.

சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும்.

இதைவிட ரஸ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஸ்யாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

இவர், ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில் இயங்கி கொண்டிருந்தன.

ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் வருடமே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது.

காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதேவேளை பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில்வரலாறு என்னை விடுதலை செய்யும்’ (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும்.

மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக

உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதைந்தது
புரட்சியின்
கடைசி மொழிபெயர்ப்பு.
பிடல்...மறைவு.
காஸ்ட்ரோ காலடி தொடர்வோம்.
#மணிமுடி#

பிடல்கா ஸ்ட்ரோவின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது.

துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக அனைத்து சங்கங்களின் தர்ணா- 25.11.2016

துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக அனைத்து சங்கங்களின் தர்ணா- 25.11.2016 அன்று விருதுநகர் GM அலுவலகம் முன்பாக NFTE மாவட்ட செயலர் தோழர் D.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார் .கோரிக்கைகளை விளக்கி SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜ் ,மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் ,AIBSNLEA சங்க மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ,AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் பார்த்தசாரதி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி , மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார் ,கண்ணன் ,அஷ்ரப்தீன் ,இளமாறன் , முத்துசாமி ,NFTE சங்கத்தின் தோழர் பவுன்ராஜ் உட்பட பலர் பேசினர் .BSNLEU மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் முறையாக நன்றி கூறி தர்ணாவை நிறைவு செய்தார் .

Wednesday, November 23, 2016

25.11.2016 அனைத்து சங்கங்களின் தர்ணாவை வெற்றிகரமாக்குவோம்!!

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here 

புலிகளிடம் சிக்கிய எலி

ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் SDE (குரூப்ஸ்) ஸ்ரீவில்லிப்புத்தூர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று (23.11.2016) ஸ்ரீவில்லிபுத்தூர் தொலைபேசி நிலையத்தில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரக்கனி அவரகள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான தோழர்கள் பங்கேற்றனர். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையானால் நமது மாவட்ட சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்.

Monday, November 21, 2016

JE Outsider Result

JE Outsider result பார்க்க :-Click Here

ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் ?

மாவட்ட நிர்வாகமே !
ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் ?
அலெர்ட் நிறுவனமா ? SDE (குரூப்ஸ் ) ஸ்ரீவில்லிப்புத்தூரா ?
ஸ்ரீவில்லிபுத்தூர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் 2 ஒப்பந்த ஊழியர்கள் போடுவதற்கு மாவட்ட பொது மேலாளர் ஒப்புதல் கொடுத்தவுடன் அலெர்ட் நிறுவனம் 2 தொழிலார்களை நியமித்தது .உடனடியாக யாரோ பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று SDOT ஸ்ரீவில்லிபுத்தூர் உடனடியாக நியமனத்தை நிறுத்தி விட்டார் .அதன் பின் அதே நிறுவனம் மீண்டும் 2 பேரை நியமித்தது .அவர்கள் இரண்டு பேரும்  பணிக்கு வந்தவுடன்  அவர்களை நாளை முதல் வாருங்கள் என்று சொல்லிவிட்டார் அந்த   SDOT ஸ்ரீவில்லிபுத்தூர். அன்று மாலையே அலெர்ட் நிறுவனம் மீண்டும் புதிதாக 2 ஊழியர்களை நியமித்து கடிதம் எழுதியுள்ளது .முதல் இரண்டு நியமனங்களை ரத்து செய்தது ஏன் என்ற கேள்விக்கு அந்த நிறுவனம் SDE (குரூப்ஸ் ) ஸ்ரீவில்லிபுத்தூர் கடுமையாக நிர்பந்தம் செய்கிறார் என்று கூறியது .இன்னொரு அதிகாரி வட்டத்தில் இவர் தலையிட வேண்டிய அவசியம் என்ன ? மற்றும் ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் ஒப்பந்ததாரர் மீது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ? ஒப்பந்ததாரர் மீண்டும் மீண்டும் நியமனம் செய்ததின் அவசியம் என்ன ?

1.ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம்  செய்த SDE(குரூப்ஸ்) ஸ்ரீவில்லிபுத்தூர் மீது மாவட்ட நிர்வாகமே உரிய நடவடிக்கை எடு 
2. அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக மீண்டும் மீண்டும் ஊழியர் நியமனத்தில் குளறுபடி செய்த அலெர்ட் நிறுவனம் மீது நடவடிக்கை எடு 
3.முதலில்   வந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக 2 ஊழியர்களை நியமனம் செய்ய SDOT, ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு அறிவுரை வழங்கிடு .
உடனடியாக தலையிடாவிட்டால் மாவட்ட சங்கம் SDE குரூப்ஸ் ,ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு எதிராக  மாபெரும் ஆர்ப்பாட்டதை 23/11/2016 அன்று  நடத்தும் . அடுத்த கட்ட போராட்டமாக பெரும் திரள்  முறையீட்டு போராட்டம் GM அலுவலகம் முன் நடைபெறும் .
                    BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் 

Saturday, November 19, 2016

முற்றுகை போராட்ட காட்சிகள்

நேற்று தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்ட காட்சிகள்
நிர்வாக வாக்குறுதியை மீறி 11 ஒப்பந்தத் தொழிலாளர் நீக்கம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் எதிர்ப்பு - போராட்டம்
தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 11 ஒப்பந்தத் தொழிலாளர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரியும் ஊழியர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (நவ. 18) நடைபெற்றது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப 2009ம் ஆண்டு மே மாதம் முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி இபிஎப், இஎஸ்ஐ விதிகளை கறாராக அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக் கைகளும் முன்வைக்கப்பட்டன.பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் இணைந்து சென்னையில் தலைமை பொது மேலாளர் அலுவலக வாயிலில் இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்தின.மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாநில தலைவர் எம்.முருகையா, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார், ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஊழியர் சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு பழைய நிறுவனத்திடம் ஒப்பந்தம் முடிந்தவுடன் புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மாறும்.ஆனால் பழைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் தொடர்ந்து வேலை செய்து வருவார்கள். இதுதான் பல்லாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.இந்நிலையில் கடந்த செப்டம் பர் மாதம் 30ம் தேதியுடன் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் பெங் களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந் தம் எடுத்திருந்தது. தொலைத் தொடர்புத் துறை நிர்வாகம், ஊழியர் சங்கத்திடம் அந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருப்பார்கள் என உறுதி அளித்தது.
ஆனால் புதிய ஒப்பந்த நிறுவனம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா, ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் உள் ளிட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டது என்று செல்லப்பா தெரிவித்தார்.இதுகுறித்து ஊழியர் சங்கம் சார்பில், நிர்வாகத்திற்கு 3 முறை கடிதம் அளித்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிர்வாகம் தீர்வு காணவில்லை என்றால் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் போராட்டம் நடைபெறும் என்றார்.
                             நன்றி :- தீக்கதிர் 

Wednesday, November 9, 2016

சிம் விற்பனையில் BSNLEU விற்கு மீண்டும் ஒரு மணிமகுடம்

 
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நமது BSNLEU ஊழியர்கள் மார்க்கெட்டிங் டீம் முடன் இணைந்து முதல் கட்ட ரோடு ஷோ வை 08/11/2016 அன்று நடத்தினர் அருப்புக்கோட்டையில் தொடங்கி ராஜபாளையம் வரை ஒரு உற்சாகதோடு நமது தோழர்கள் பங்கேற்றனர் .சாத்தூர் நகரில் மாவட்ட செயலர் ரவீந்திரன் நமது சேல்ஸ் டீம் ஊழியர்கள் தோழர் .தங்கராஜ் மற்றும் தோழர் . ஜெயராம் ,SDE (MKTG ) ஆகியோருடன் இணைந்து பங்கேற்றார் .அங்கு 166 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அருப்புக்கோட்டையில் நமது கிளை தலைவர் தோழர் உதயகுமார் ,கிளை செயலர் தோழர் மதி கண்ணன் ,தோழர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றத்தில் நமது முன்னணி தோழர் ராஜேந்திரன் பங்கேற்றார் .அருப்புக்கோட்டையில் 154 சிம்கள் சேல்ஸ் செய்யப்பட்டன .காரியப்பட்டியில் நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கணேசமூர்த்தி பங்கேற்ற நிகழ்வில் 30 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .விருதுநகர் MGR சிலை அருகில் நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழியர் மங்கையற்கரசி ,தோழியர்  தனலட்சுமி ,தோழியர் பாண்டியம்மாள் மற்றும் மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடப்பன் பங்கேற்ற நிகழ்வில் 54 சிம்களும் ,நமது SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,தோழர் மாரியப்பா ,மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் ,GM அலுவலக கிளை செயலர் இளமாறன் பங்கேற்ற பாண்டியன் நகரில் 34 சிம்கள் விற்பனைசெய்யப்பட்டன .சிவகாசியில் நமது தோழர்கள் பங்கேற்ற நிகழ்வில் ஒரு சாதனை அளவாக 517 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அதே போல் ராஜபாளையத்தில் தோழர்கள் பொன்ராஜ் ,தியாகராஜன் ,வெள்ளை பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,பொன்னுச்சாமி ,ராதாகிருஷ்ணன் ,I .முருகன் ,ஓய்வூதியர் சங்க நமது தோழர் சிவஞானம் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் 280 சிம்களும் ,மம்சாபுரத்தில் தோழர் ராமசந்திரன் 11 சிம்களையும் விற்பனை செய்துள்ளார் .ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 1250 சிம்கள் விற்பனை செய்யப்பட்டது BSNLEU சங்கத்திற்கு மீண்டும் ஒரு மணி மகுடம் .

 
 
             AC இருந்து விற்பதை  விட தூசியில்  ,வெயிலில் ,மழையில்  இருந்து சாதனை விற்பனை செய்த நமது தோழர்களுக்கு நமது நெஞ்சு நிறை நன்றி .

Monday, November 7, 2016

தைரியம் இருந்தால் சொல்லு யார் அந்த இடை தரகர்

ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும்  தன் நியாயமான பிரச்சனைகள் தீர்விற்கு போராட்ட உரிமை இருக்கிறது .ஆனால் தவறான பிரச்சாரம் செய்தால் அதற்கான பதிலை சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது .ஒரு ஊழியர் ஒரு வேலையும் செய்யமாட்டார் என்று நாம் சொல்லவிலலை .அந்த அதிகாரி தான் சொன்னார் .அப்படிப்பட்ட ஒருவர் தன முறையான டெனுரை (வந்து 6 மாதம் தான் ஆகிறது )முடிக்காமல் ஒரு தொலை பேசி நிலையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அந்த தொலைபேசி நிலைய ஊழியர் சிவகாசி அவுட்டோர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார் .அதே போல் ஒரு ஊழியர் விருதுநகர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அவரும் அவர் பணி செய்யும் பகுதியில் டெனுரை முடிக்கவில்லை .மேற்குறிய மாறுதல்களை போடவேண்டும் என்று போராட்டமாம் . இதே வாயால் இவர்கள் RM /TM  கேடர் GM அலுவலக மாற்றலில் மட்டும் இவர் 4 வருடம் முடிக்கவில்லை அவர் முடிக்கவில்லை என்று ஆலாபனை செய்துள்ளனர் .இவர்களுக்கு வேண்டியபடி மாறுதல்கள் போட  வேண்டுமானால் மாறுதல் விதிகளில் மாறுதல் செய்தால் தான் முடியும் .அதே போல் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு immunity கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இல்லை .ஆனால் தொலை தூர மாறுதல்கள் போட்ட பின்பு ஜூன் மாதம் முதல் விருப்பம் இல்லாமல் யாரையும் மாற்றல் செய்யமுடியாது என்று விதி தெளிவாக கூறுகிறது . பதிலுக்கு எந்த ஊழியரையும்  நியமனம் செய்யாமல்  தொலைபேசி நிலையங்களை (வீரசோழன் மற்றும் பரளச்சி )மூடி விட வேண்டுமாம் இவர்களுக்கு .BSNL வளர்ச்சிக்கு இவர்களால் ஆன கைங்கரியம் இது தான் .அதோடு நமது BSNLEU சங்கத்திற்கு வால்பிடிக்கும் நிர்வாகம் என்று வேறு கதைக்கிறார்கள் .ராஜபாளையம் தொடங்கி ,அருப்புக்கோட்டை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பிரச்சனைகளில் ஒரு எழுச்சிமிகு போராட்டம் நடத்தி ஜெயம் கொண்ட சங்கம் நமது சங்கம் .நமக்கு வால் பிடிக்கும் என்று இவர்கள் சொல்லும் அந்த அதிகாரிகள் முன்பாக களம் கண்ட சங்கம் நமது சங்கம் .இவர்களோ  அரசியல் வாதிகளை வைத்து அதிகாரிகள் மேல் புகார் கொடுத்து ஆதாயம் தேட  அலைந்தவர்கள் .அந்த அரசியல்வாதி இவர்களுக்கே  அல்வா கொடுத்தது தனி கதை .புரோக்கர் வேலை பார்க்கிறது BSNLEU சங்கம் அல்ல .தில் இருந்தால் கூறு யார் என்று  . விதிக்கு புறம்பான இவர்கள் மாறுதல்களை எல்லாம் நமது சங்கமும் ஒத்து கொண்டும் கூட ,சாத்தூர் பகுதியில் சேல்ஸ் பகுதிக்கு ஒரு ஊழியர் நியமிக்க பட வேண்டும் என்ற நமது சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையை நிர்வாகம ஏற்று கொள்ள கூடாது என்று இவர்கள் தடை போட்டால் நாம் வேடிக்கை பார்க்கணுமாம் .. இலாகாவின் விதிகள் இவர்கள் தான் என்பது பழைய காலம் .போராட்டத்தில் புடம் போட்ட தங்கம் நமது இயக்கம் .எதையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறது .

                                     நேர்மை என்றும் வெல்லும் .
நிர்வாகம் நடு நிலை  தவறினால் நமது போராட்டம் எப்படி இருக்கும் என்று நமது வலிமையை உணர்த்துவோம் .

துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் இதர செய்திகள்

சுற்றறிக்கை எண்:138 படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...