Saturday, November 26, 2016

பிடல் காட்ரோ மறைவு


கியூபாவின் நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ இன்று காலமானார்

1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார்.

காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம்.

ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தவர் என்கிறார்கள்.

கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார்.

அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள்.

இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார்.

ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர சகோதரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர்.

ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக் குடும்பமும் பகிர்ந்துக்கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.

ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி தன்னுடைய படிப்பை தொடங்கினார். சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.

ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார்.

பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாகப் பரிமாணம் பெற்றார்.

கியூபாவின்ச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.

49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.

சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும்.

இதைவிட ரஸ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஸ்யாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

இவர், ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில் இயங்கி கொண்டிருந்தன.

ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் வருடமே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது.

காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதேவேளை பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில்வரலாறு என்னை விடுதலை செய்யும்’ (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும்.

மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக

உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதைந்தது
புரட்சியின்
கடைசி மொழிபெயர்ப்பு.
பிடல்...மறைவு.
காஸ்ட்ரோ காலடி தொடர்வோம்.
#மணிமுடி#

பிடல்கா ஸ்ட்ரோவின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...