Showing posts with label மாநிலம். Show all posts
Showing posts with label மாநிலம். Show all posts

Thursday, November 27, 2014

வேலை நிறுத்தம்...

          2014 நவம்பர் 27 வேலை நிறுத்தம்... தமிழகத்தில் 75% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.

Monday, September 15, 2014

15-09-2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்


நாளை (16/09/2014) உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக நமது மாவட்டத்தில் இருந்து பெருந்திரளான தோழர்கள் இன்று புறப்பட்டுள்ளனர்.

Wednesday, December 11, 2013

ஒப்பந்த ஊழியர் கையெழுத்து இயக்கம்

          ஒப்பந்த ஊழியர்களின் தமிழ் மாநில சங்க அறைகூவலின்படி K .G .போஸ் அவர்களின் நினைவு தினமான இன்று ஒப்பந்த ஊழியர்கள் வாங்கிய கையெழுத்து படிவத்தின் ஒரு நகல் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க அனைவரும் சென்றபோது  துணைப்பொது மேலாளர் திரு .சுந்தரராஜன் அவர்கள் மனுவை வாங்க மறுத்து விட்டது வருந்தத்தக்க நிகழ்வாகும். இதை  நமது சங்க நிர்வாகிகள் அனைவரும் வன்மையாக கண்டித்து உள்ளனர்.ஒப்பந்த ஊழியர்கள் என்றால் கிள்ளு கீரையாக அவர் நினைப்பதை எதிர்த்து நமது மாவட்ட சங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.
நமது இயக்க புகைப்படம் கீழே
               ஊர்வல துவக்கம் 
ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர்  தோழர் முனியசாமி உரை 
 ஊர்வல முகப்பு 
 பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் ரவீந்திரன் 
 கலந்து கொண்ட பெண் ஊழியர்கள் 
ஆர்ப்பாட்டத்தின்  ஒரு பகுதி 

 திரளான திரண்டு வந்த தோழர்கள் 
வாங்க மறுத்த துணை பொது மேலாளருடன் விவாதம் 


Wednesday, December 4, 2013

Friday, May 17, 2013

கோவையில் வெற்றி விழா

         சரிபார்ப்பு தேர்தலில் தொடர்ந்து 5ஆவது  முறையாக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த BSNLEU சங்கத்தின் மாநிலம் தழுவிய வெற்றி விழா 04-06-2013 அன்று கோயம்புத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.நமது மாவட்டத் தோழர்கள்,தோழியர்கள் அனைவரும் பெருந்திரளாய்க் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

Thursday, March 14, 2013

மாநில சங்க நிர்வாகிகள் சுற்று பயணம்

           நடைபெற உள்ள 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் 50% வாக்குகளுக்கு மேல் பெற்று BSNL நிறுவனத்தின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கமாய் ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கபடவுள்ள சங்கம் நமது BSNL ஊழியர் சங்கம் என்பது யாவரும் அறிந்ததே. தமிழ் மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளனர்.


Friday, November 30, 2012

தருமபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரனம்....






உலகத்தீரே காதல் செய்வீர் என்றான் பாரதி.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

இந்தக் காதலினால், பித்தம் தலைக்கேறிய ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.

நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச்சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.

இந்த வெறியாட்டத்தை வர்க்க அரசியலை முன்னிறுத்துவதாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, பாட்டளி மக்கள் கட்சி என பெயர்வைத்துக் கொண்டாலும், (முன்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும்) வன்னியர் சங்சம்தான் நடத்தியது என எல்லா வெகுஜன ஊடகங்களும் அறிவிக்கின்றன. உண்மை அறியும் குழுக்களும் அறிவிக்கின்றன.

இந்த வெறியாட்டத்தை 2012 நவம்பர் 29ம் நாள் நடைபெற்ற மாநில செயற்குழு கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரனத்திற்காக ரூபாய் 1,00,000 அளிப்பதென முடிவு செய்துள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து ரூபாய் மூவாயிரத்தை நாமும் நிவாரனத்திற்கான நிதிக்காகப் பகிர்ந்து கொள்வோம்.

நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். நிவாரனங்கள் தீர்வு அல்ல. மீண்டு வருவதற்கான உதவிதான். தீர்வு என்பது தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்படியான சாதி வெறியாட்டங்களுக்கு எதிராக நாம் நமது பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதற்கு உறுதியேற்பதிலும் அதனைச் செயல்படுத்திலுமே இருக்கிறது. உறுதியேற்போம். செயல்படுத்துவோம்.

Friday, November 16, 2012

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

விருதுநகர் மாவட்டத்தில் 100 விழுக்காடு உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வைத்த ஒரே கிளையான சாத்தூர் கிளை - செயலருக்கும், உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தின் காரணமாக சாத்தூர் CSC மூடப்பட்டது. சாத்தூர் CSC தொலைபேசி நிலைய வளாகத்திற்கு உள்ளே இருப்பதால் சாத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தின் பிரதான வாசல் மூடப்பட்டு இன்று வேலைநிறுத்தம் என எழுதி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தின் காரணமாக மூடப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள்
தூத்துக்குடி SSA       : திருச்செந்தூர்
நாகர் கோயில் SSA    : நாகர் கோயில் 2 மையங்கள்
  கன்னியா குமரி
                          நெய்யூர்
                          கரிங்கால்
நீலகிரி SSA           : அனைத்து மையங்களும்
மதுரை       : மதுரை மத்திய தந்தி அலுவல அனைத்து மையங்களும்
                 TVS நகர்
                 உயர் நீதி மன்ற மையம்
விருதுநகர் SSA        : சாத்தூர்

கடலூர் மற்றும் தர்மபுரி SSAக்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100% வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வாழ்த்துகள்.
பிற SSAக்களிலும் பெரும்பாண்மையான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
எந்தச் சூழ்நிலையிலும், வர்க்க உணர்வோடு தோளோடு தோள் நிற்கும் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

தமிழகத்தில் வேலைநிறுத்தம்

விருதுநகர் – 55.74%
மொத்தம்       : 287
வேலை நிறுத்தம்     : 160
விடுப்பு         :  71
பணி            :  56

கடலூர் – 71.92%
மொத்தம்       : 261
வேலை நிறுத்தம்     : 187
விடுப்பு         :  36
பணி            :  38
ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

தர்மபுரி – 96.5%
மொத்தம்       : 320
வேலை நிறுத்தம்     : 309

நீலகிரி – ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

            நாகர்கோயில் மாவட்டத்தில் SEWA உறுப்பினர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாகர்கோயில் தொலைபேசி நிலையத்தின் முன்னால் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். AIBSNLEA உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
        சூழலைப் பயன்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டு நடத்திய நாகர்கோயில் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...