Showing posts with label கிளைமாநாடு. Show all posts
Showing posts with label கிளைமாநாடு. Show all posts

Thursday, September 10, 2015

அருப்புகோட்டை TNTCWU கிளையின் மகாநாடு

                அருப்புகோட்டை TNTCWU கிளையின் மாநாடு தோழர் சோலை தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் பெத்தணன் அஞ்சலி  தீர்மானம் வாசிக்க தியாகிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளை செயலர் தோழர் .செந்தில்குமார் சமர்ப்பித்த செயல்பாட்டு அறிக்கை மற்றும் தோழர். ராமசந்திரன்  சமர்ப்பித்த நிதியறிக்கை ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. 
                விவாத அரங்கில் தோழர்கள் அஷ்ரப்தீன், கண்ணன் கிளையை இன்னும் செழுமை படுத்த வேண்டிய விசயங்களையும் பகிர்ந்தனர். BSNLEU மாவட்ட செயலர் தனது உரையில் அருப்புகோட்டை கிளை சங்கம்  கடந்த செப்-2 வேலைநிறுத்தத்தில் 100% பங்கேற்றமைக்கும், அருப்புகோட்டை வட்டத்தில்  கேபிள் பழுதுகளைச் சரிசெய்வதில் நமது ஒப்பந்த ஊழியர்கள் சிறப்பான பங்களிப்பதற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். வர உள்ள மாவட்ட மற்றும் அனைத்திந்திய மாநாட்டு வேலைகளை  விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.
                மாநாட்டில் பெண் ஊழியர்கள். உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கிளை மாநாட்டில் தலைவராக தோழர் பெரியசாமி, செயலராக தோழர் செந்தில் பொருளாளராக தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளர் தோழர் ராமச்சந்திரன் (ராஜிவ் நகர்) நன்றி கூறினார். மாநாட்டிற்கான சிற்றுண்டிச் செலவை LCM, உறுப்பினர் தோழர் ஜெயக்குமார் ஏற்றுக் கொண்டார்.















Wednesday, January 1, 2014

BSNLEU சாத்தூர் கிளையின் புதிய நிர்வாகிகள்

BSNLEU - SATTUR

28-12-2013 அன்று சாத்தூரில் நடைபெற்ற கிளை மாநாட்டில்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்

தலைவர்                        : தோழர் E.கனகாம்பரம், TSO
உப தலைவர்                   : தோழர் R.வெங்கடாசலபதி, STS

செயலர்                         : தோழர் H.காதர் மொகைதீன், TM
துணைச் செயலர்கள்           : தோழர் N.கணபதிராமன், STS
                                    தோழர் N.கருப்பசாமி, STM

பொருளாளர்                    : தோழர் T.கலையரசன், TM
உதவி பொருளாளர்            : தோழர் J.ஜெயஜோதி, TOA

அமைப்புச் செயலர்கள்         : தோழர் M.ஜெயசந்திரன், TM
                                    தோழர் S.தனலட்சுமி, STS

தணிக்கையாளராக தோழர் S.குருநாதன் நியமிக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்

Sunday, October 20, 2013

ஒப்பந்த ஊழியர்களின் ராஜபாளையம் கிளை மாநாடு

          ஒப்பந்த ஊழியர்களின் ராஜபாளையம் கிளை மாநாடு 20-102-2013 அன்று தோழர் அனவரதம் மற்றும் கணேசன் அவர்களின் கூட்டு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர்   வேல்சாமி  அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க , மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் கிளை மகாநாட்டை முறையாக தொடக்கி வைத்து உரை ஆற்றினார் .அமைப்பை பலப்படுத்துவது , சம்பள பிரச்னை , போனஸ் பிரச்னை , EPF/ESI  பிரச்சனைகளை எதிர்கொள்வதை பற்றி விரிவாக பேசினார் . ராஜை BSNLEU கிளை செயலர் தோழர் த .முத்துராமலிங்கம் அவர்கள் ஸ்தல மட்டங்களில் நமது  ஒத்துழைப்பை பற்றி பேசினார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசும் போது ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை  தீர்ப்பதற்கு BSNLEU மாவட்ட சங்கம் தன முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும் , ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காத போது  நிர்வாகமே சம்பளம் வழங்கிய நிகழ்வுக்கு மாநிலத்திலேயே நமது    மாவட்ட சங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பதை  நினைவு கூர்ந்தார்.நாகர்கோயில் ஒப்பந்த ஊழியர் மாநில மகாநாட்டில்  பெரும் திரளாய் கலந்து கொண்ட தோழர்களுக்கு பாராட்டை  தெரிவித்தார் . இணைந்த கிளையாய்    இருந்த ராஜபாளையம் கிளை , தனி தனி கிளைகளாய் பிரிக்கப்பட்டது . 








ராஜபாளையம் கிளைக்கு தோழர்கள் அனவரதம் , அழகர்சாமி , கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் தங்கதுரை , பாண்டியன்,மாயாண்டி  ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.புதிய செயலர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...