Showing posts with label TNTCWU. Show all posts
Showing posts with label TNTCWU. Show all posts

Thursday, May 31, 2018

7 வது ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

        விருதுநகர் மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு கடந்த 12/05/2018 அன்று சிவகாசியில் அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் M .கருப்பசாமி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தேசிய கொடியை மூத்த தோழியர் மாரியம்மாள் ஏற்றி வைக்க, TNTCWU  சங்க கொடியை தோழியர் ஜோதி விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றி வைத்தார் .அஞ்சலி தீர்மானத்தை தோழர் சபரி   வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மீது விவாதம் நடைபெற்று திருத்தங்களுடன் ஏற்று கொள்ளப்பட்டது .மாநில செயலர் தோழர் வினோத்குமார் எழுச்சியுரை நிகழ்த்தினார். தோழர் வேலுச்சாமி சமர்ப்பித்த  நிதி நிலை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் M .S இளமாறன், N.ராமசந்திரன், வேல்ச்சாமி ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாளர் ஆக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .இந்த மாநாட்டில் BSNLEU சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,அதன் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் மாவட்டம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட TNTCWU சங்க தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டது ஒரு சிறப்பு மிக்க பதிவு ஆகும் .
Image may contain: 1 person, tree, sky, plant, crowd, outdoor and nature
Image may contain: 4 people, people sitting
Image may contain: 6 people, people standing, wedding, tree, crowd and outdoor
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 11 people, people sitting, crowd and outdoor
Image may contain: 9 people, people sitting and outdoor
Image may contain: 13 people, including Ravi Indran and RDeivam, people standing
Image may contain: 8 people, people standing, crowd, tree and outdoor
Image may contain: 3 people, including Vinod Kumar, people sitting
Image may contain: one or more people
 Image may contain: 11 people, including Ravi Indran, people smiling, people standing
Image may contain: 4 people, including Ravi Indran and Chellappa Chandrasekar, people sitting
Image may contain: 4 people, including Vinod Kumar, people standing

Image may contain: 3 people


Friday, April 6, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு நமது பகுதியில் 2018 ஏப்ரல் 1 முதல் ரூபாய் 20 உயர்ந்துள்ளது. புதிய ஊதியம் 350+20=370 ஆக இருக்கும்.

Wednesday, September 6, 2017

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க கிளை மாநாடு - அருப்புக்கோட்டை

TNTCWU – அருப்புக்கோட்டை
7 ஆவது கிளை மாநாடு
09.09.2017 – சனிக்கிழமை – மாலை 5.00 மணி
தலைமை          : தோழர் பெரியசாமி, கிளைத்தலைவர்
அஞ்சலி            : தோழர் A.சோலை, கிளை உதவிச் செயலர், BSNLEU
வரவேற்புரை      : தோழர் R.செந்தில்குமார், கிளைச் செயலர்
தொடக்கவுரை     : தோழர் R.ராமச்சந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
வாழ்த்துரை    : திருமிகு அஷ்ரஃபதீன், BSNLEU, ADS
    தோழர் இளமாறன், மாவட்டத் தலைவர்
                  தோழர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர், JCTU
நோக்கஉரை   : தோழர் இரவீந்திரன், மாவட்டச் செயலர்
    தோழர் எம். வேலுச்சாமி, மாநில அமைப்புச் செயலர்
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
அருப்புக்கோட்டை கிளை

Saturday, November 7, 2015

TNTCWU மாவட்ட மாநாடு

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்
விருதுநகர் மாவட்டம்
(TNTCWU – Virudhunagar District)
ஆறாவது மாவட்ட மாநாடு

நாள்       : 14-11-2015 சனிக் கிழமை
நேரம்      : காலை 10 மணி
இடம்      : விருதுநகர்

தலைமை                    : தோழர் எம்.செல்வராஜ், மாவட்டத் தலைவர்
கொடியேற்றம்               : தோழர் மாரியம்மாள், ராஜபாளையம்
தியாகிகளுக்கு அஞ்சலி    : தோழர் K.பெத்தனன், அருப்புக்கோட்டை
வரவேற்புரை                : தோழர் பாண்டியராஜ், கிளைச் செயலர்

ஆண்டறிக்கை சமர்ப்பித்தல் : இரா. முனியசாமி, மாவட்டச் செயலாளர்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல் : இரா. மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர்

தொடக்கவுரை  : தோழர் இரா. முனியசாமி, மாவட்டச் செயலாளர், TNTCWU
சிறப்புரை        : தோழர் C.வினோத் குமார், மாநிலச் செயலர், TNTCWU
                    தோழர் M.முருகையா, அ.இ. துணைத் தலைவர் BSNLCCWF
                    தோழர் C.பழனிச்சாமி, அ.இ. துணைத் செயலர் BSNLCCWF
                    தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர், BSNLEU
                    தோழர் மகாலட்சுமி, மாநிலச் செயலர், CITU

வாழ்த்துரை           : தோழர் M.வேல்ச்சாமி, மாநில அமைப்புச் செயலர், TNTCWU
                          தோழர் A.சமுத்திரக்கனி, மாவட்டத் தலைவர், BSNLEU
                          தோழர் M.S.இளமாறன், கிளைச்செயலர், BSNLEU, விருதுநகர். GM (O)
                          தோழர் K.சிங்காரவேலு, கிளைச்செயலர், BSNLEU, விருதுநகர், Extl.
                          தோழர் M.அய்யாச்சாமி, ஓய்வூதியர் சங்கம்
                       
அமைப்பு நிலை விவாதம், பொருளாய்வுக் குழு, புதிய நிர்வாகிகள் தேர்வு

நன்றியுரை : புதிய மாவட்டச் செயலர்
அனைவரையும் வருக வருக என்று வரவேற்கும்

TNTCWU – Virudhunagar District

Thursday, September 10, 2015

அருப்புகோட்டை TNTCWU கிளையின் மகாநாடு

                அருப்புகோட்டை TNTCWU கிளையின் மாநாடு தோழர் சோலை தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் பெத்தணன் அஞ்சலி  தீர்மானம் வாசிக்க தியாகிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளை செயலர் தோழர் .செந்தில்குமார் சமர்ப்பித்த செயல்பாட்டு அறிக்கை மற்றும் தோழர். ராமசந்திரன்  சமர்ப்பித்த நிதியறிக்கை ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. 
                விவாத அரங்கில் தோழர்கள் அஷ்ரப்தீன், கண்ணன் கிளையை இன்னும் செழுமை படுத்த வேண்டிய விசயங்களையும் பகிர்ந்தனர். BSNLEU மாவட்ட செயலர் தனது உரையில் அருப்புகோட்டை கிளை சங்கம்  கடந்த செப்-2 வேலைநிறுத்தத்தில் 100% பங்கேற்றமைக்கும், அருப்புகோட்டை வட்டத்தில்  கேபிள் பழுதுகளைச் சரிசெய்வதில் நமது ஒப்பந்த ஊழியர்கள் சிறப்பான பங்களிப்பதற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். வர உள்ள மாவட்ட மற்றும் அனைத்திந்திய மாநாட்டு வேலைகளை  விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.
                மாநாட்டில் பெண் ஊழியர்கள். உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கிளை மாநாட்டில் தலைவராக தோழர் பெரியசாமி, செயலராக தோழர் செந்தில் பொருளாளராக தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளர் தோழர் ராமச்சந்திரன் (ராஜிவ் நகர்) நன்றி கூறினார். மாநாட்டிற்கான சிற்றுண்டிச் செலவை LCM, உறுப்பினர் தோழர் ஜெயக்குமார் ஏற்றுக் கொண்டார்.















Friday, October 31, 2014

ஆர்ப்பாட்டம்

     கேபிள் பகுதியில் டெண்டர் எடுத்துள்ள INNOVATIVE  நிறுவனம் கடந்த 4 மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு 20 தேதிக்கு மேல் சம்பளம் போடுவதையும் , EPF மற்றும் ESI சலுகைகளை வழங்காமலும் மற்றும் போனஸ் வழங்க மறுப்பதையும்  எதிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் கொடுத்தும் , மாநில தலைமை   பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் ஒரு முன்னேற்றமும் இல்லாததால்  INNOVATIVE நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்ய வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் கவனயிருப்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநில சங்கத்திடம் ஆலோசனை செய்து அடுத்த கட்ட போராட்டம் நவம்பர் மாதம் 17 தேதி  நடைபெறும் .விருதுநகரில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தை தோழர் சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் போராட்டத்திற்கான அவசியத்தை விளக்கி பேசினார் .தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட பொருளர் மாரிமுத்து நன்றி நவின்றார் .
             அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கிருஷ்ணசாமி மற்றும் தோழர் பெத்தணன் இருவரும் கூட்டுத் தலைமையேற்றனர். போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி தோழர் சோலை, தோழர் அஸ்ரப்தீன் ஆகியோர் பேசினர். தோழர் ஜெயக்குமார் கோஷங்களை முன்வைத்தார். தோழர் செந்தில்குமார் நன்றியுரை கூறினார்.
            இராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் அனவரதன் தலைமை தாங்கினார். தோழர் முத்துராமலிங்கம் மற்றும் தோழர் வேல்ச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்கள். தோழர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
          மாவட்டம் முழுவதும் மொத்தம் 72 ஒப்பந்த ஊழியர்களும் 85 BSNLEU உறுப்பினர்களுமாக மொத்தம்157பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 









Friday, September 19, 2014

உறுதியான போராட்டத்தால் உத்தரவாதமான வேலை

தொலைத் தொடர்புத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 140 தொழிலாளர்களை வேலூர் மாவட்ட நிர்வாகம் 1.8.2014 முதல் பணி நீக்கம் செய்தது. அதாவது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால் கொத்தடிமைகள் என்றும் அவர்களின் வயிற்றில் அடிக்கவும் தயங்கமாட்டோம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் செயல்பட்டது.தாக்குண்டால் மண் புழுவும் துள்ளி எழும். நாங்கள் சாக்கடை புழுக்களல்ல. சரித்திரத்தின் சக்கரங்கள்' எனக்கூறி வேலை நீக்கம் செய்யப்பட்ட அன்றைய தினத்தில் இருந்து 7 நாட்கள் வேலூரில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர் ஒப்பந்த தொழிலாளர்கள்.நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆதரவு போராட்டம் நடத்தினர். அப்போதும் அசைவு இல்லை. நிரந்தர தொழிலாளர்களும் ஆதரவு கரம் நீட்டினர். ஆனால், நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனையை ஊழியர் சங்கம் கையில் எடுக்கக்கூடாது எனவும் கடிதம் கொடுத்து மிரட்டிப் பார்த்தது..பிஎஸ்என்எல் நிர்வாகம் கொடுத்த கடிதத்தை நிராகரித்த பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், டிஎன்டிசிடபுள்யு சங்கமும் திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்துவோம் என்று அறிவித்தது.அதன்படி செப். 15 அன்று சென்னை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சி. செல்லப்பா, உதவி செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், டிஎன்டிசிடபுள்யு மாநிலத் தலைவர் எம். முருகையா, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார் ஆகியோர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து ஏராளமான ஊழியர்கள் வந்திருந்தனர். இப்போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், ஏஐபிஎஸ்என்எல்இஏ அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகலத் ராய், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் புனிதா உதயகுமார், கோவிந்தராஜ், காசி,கோபிநாதன்,சி.கே. நரசிம்மன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே வந்தது. இதனையடுத்து, 3ம் நாள் போராட்டத்திற்கு பிறகு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பிஎஸ்என்எல் முதன்மைபொது மேலாளர் ஜி.வி.ரெட்டியுடன் நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநிலநிர்வாகம் வேலூர் மாவட்டத்தில் பணியில் இருந்துநீக்கப்பட்டதில் 85 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிக்கு எடுத்துக்கொண்டது. மீதமுள்ள தொழிலாளர்களையும் மிக விரைவில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிக்கு எடுத்துக்கொள்ளவும் உறுதியளித்தது.இத்தோடு, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீராக ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனையை கையாளப்படும் என்றும் நிர்வாகம் உறுதி கொடுத்தது.இந்த மகத்தான வெற்றிக்கு ஊழியர் சங்கங்களின் துணையும் சரியான நேரத்தில் போராட்டத்தை சரியாக நடத்தியது தான் காரணம். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சி. செல்லப்பா நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
                நன்றி :- தீக்கதிர் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...