Showing posts with label கிளைக் கூட்டம். Show all posts
Showing posts with label கிளைக் கூட்டம். Show all posts

Tuesday, August 11, 2015

உற்சாகம் ஊட்டிய ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

இன்று (11-08-2015)  ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது . கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 நடைபெற  நிறுத்தத்தின் அவசியத்தையும் அதை வெற்றிகரமாக்க வேண்டிய  கட்டாயத்தையும்   மாவட்ட  உதவி    தலைவர் கண்ணன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் வலியுறுத்தி பேசினர் .பன்னாட்டு கம்பெனிகளின்  வேட்டை களமாக இந்திய தேசத்தை ஆக்கும் மத்திய அரசின் போக்கை  தோழர் மதி கண்ணன் கதைகள் கூறி எடுத்துரைத்தார் .மாவட்ட செயற்குழுவின் முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் . ஸ்தல மட்ட பிரச்சனைகளை கையாள்வதில் மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விளக்கி தோழர் சமுத்திரகனி விளக்கினார் .LCM உறுப்பினர் தோழர் தங்கதுரை ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ஆகியோர் செப்டம்பர் 2 போராட்டத்தை பற்றி பேசினர் . மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் நன்றியுரையோடு மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விரிவாக கூறினார் .பெரும் அளவில் ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .

















Monday, June 30, 2014

சிறப்புமிகு சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம்

சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் 30-06-2014 அன்று சிவகாசி தொலை பேசி நிலைய வளாகத்தில் தோழர்கள் அழகுராஜ் மற்றும் முனீஸ்வரன் கூட்டு தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது . விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழாவை 30-08-2014 அன்று சிவகாசியில் நடத்துவது. சிறப்புரையாக தோழர் V  வெங்கட்ராமன் , மாநில துணை தலைவர் , தோழியர் V  P  இந்திரா , மாநில உதவி செயலர் , தோழர் லக்ஷ்மண பெருமாள் , தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியோரை அழைப்பது என முடிவு எடுக்கப்பட்டது .இதற்கு மாநில செயலரின் ஒப்புதலும் பெறப்பட்டது . மாநில செயற்குழு முடிவுகளையும் , விளக்கி மாவட்ட செயலர் விரிவாக பேசினார் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் ஸ்தல மட்ட பிரச்சனைகளை நாம் கையாண்ட விதம் பற்றி எடுத்துரைத்தார் . பிரச்சனைகளை தோழர் ராஜு ,ராஜையா , செல்வராஜூ ஆகியோர்  எடுத்துரைத்தனர் . தோழர் இன்பராஜ் நன்றி கூற பொதுக்குழு கூட்டம் முடிந்தது .

Saturday, June 29, 2013

கிளைக் கூட்டமும் பணி ஓய்வு பாராட்டும்

          அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு 28-06-2013 வெள்ளிக் கிழமை மாலை கூடியது. பொதுக்குழுவிற்கு கிளைத்தலைவர் தோழர் U.B.உதயகுமார் தலைமையேற்றார். தோழர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார். தோழர் ஜெயக்குமார் பொதுக்குழுவைத் தொடங்கி வைத்து , இன்றைய அஜென்டாவை விளக்கிப் பேசினார்.

          இம்மாதம் ஓய்வுபெறும் நமது கிளைத் தோழர்கள் மங்கையன் மற்றும் குமராண்டி இருவரையும் வாழ்த்தியும், ஒப்பந்த ஊழியர்களின் அருப்புக்கோட்டை கிளைச் செயலராக பொறுப்பேற்ற தோழர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்ற தோழர் முனியசாமி இருவரையும் வாழ்த்தியும், அருப்புக்கோட்டை கிளை மாநாடு நடத்துவது தொடர்பாகவும் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சந்திரசேகரன், தோழர் சோலை, தோழர் சுப்புராம், தோழர் ஜெயகண்ணன், தோழர் அய்யனார் ஆகியோர் பேசினார்கள்.

          இன்றைய சூழலில் நாம் அடைந்த வெற்றகளையும் அதன் பின் இருக்கும் ஒற்றுமை பற்றியும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் இப்படியான சூழலில் வேலைக்கலாச்சாரம் மேம்பட நமது மத்திய சங்க முயற்சிகள் நமது கடமை மற்றும் ஜூலை 16ல் நடக்கவிருக்கும் கருத்தரங்கம் பற்றியும் உத்தர்காண்ட் சேதம் மற்றும் அது தொடர்பான நமது நிலை பற்றியும் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் மதிகண்ணன் எடுத்துரைத்தார்.

          ஓய்வு பெறும் தோழர்களுக்கு கிளைத் தலைவர் உதயகுமார் நினைவுப் பரிசை வழங்கினார். பாராட்டப்பெற்ற தோழர்கள் மங்கையன், குமராண்டி, செந்தில்குமார், முனியசாமி ஆயியோர் ஏற்புரை வழங்கினர். ஜூலை 13 (இரண்டாம் சனிக்கிழமை) மாலை 3 மணி தொடங்கி கிளை மாநாடு நடத்துவதென்றும், மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரனுடன் கலந்து பேசி மாநிலச் சங்க நிர்வாகிகளில் ஒருவரை கிளை மாநாட்டிற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கிளையின் பொருளாளர் தோழர் சோலை அவர்களின் நன்றியுடன் பொதுக்குழு நிறைவுற்றது.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...