Showing posts with label சிறப்பு செயற்குழு கூட்டம். Show all posts
Showing posts with label சிறப்பு செயற்குழு கூட்டம். Show all posts

Saturday, September 10, 2016

சிறப்பு செயற்குழு கூட்டம்

சிறப்பு செயற்குழு கூட்டம் 
நாள் :- 14/09/2016                         இடம் :-சங்க அலுவலகம் 
நேரம் :- மாலை 300 மணி 
தலைமை :- தோழர் A .சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர்
தியாகிகளுக்கு அஞ்சலி :- தோழர் .அஷ்ரப்தீன் ,மாவட்ட உதவி செயலர் . 
ஆய்படு  பொருள் 
1.ஸ்தல மட்ட பிரச்சனைகள் 
2.அகில இந்திய மாநாட்டு பிரதிநிதி மற்றும் பார்வையாளர் தேர்வு 
3.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
                         சிறப்புரை 
தோழர் .A.பாபு ராதாகிருஷ்ணன் ,மாநில செயலர் ,BSNLEU 
நன்றியுரை :-தோழர் C .சந்திரசேகரன் 
                           மாவட்ட பொருளர் 

Saturday, October 17, 2015

சிறப்பு செயற்குழு கூட்டம்

சிறப்பு செயற்குழு கூட்டம் 
தலைமை :-A சமுத்திரகனி 
இடம் :- மாவட்ட சங்க அலுவலகம் 
நாள் :- 19/10/2015 
நேரம் :- மாலை 4 மணி 
ஆய் படு  பொருள் :-
1.மாவட்ட மாநாட்டு நிதி 
2.ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு 
3. மாறுதல்கள் பற்றி ஓர் ஆய்வு 
4.வொர்க் கமிட்டி ,மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி நியமனம் 
5.  தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
நன்றியுரை :- மாவட்ட பொருளாளர் 

Monday, September 7, 2015

சிறப்பு செயற்குழு கூட்டம்

06-09-2015 அன்று நமது மாவட்ட  சிறப்பு செயற்குழு கூட்டம் வெம்பகோட்டையில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது .மாவட்ட துணை செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்களின் இல்ல விழாவை ஒட்டி நடைபெற்ற இச் செயற்குழுவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தோழர் வெங்கடேஷ் செய்ததற்கு மாவட்ட சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது . குறுகிய கால அவகாசத்தில் நடைபெற்ற செயற்குழுவிற்கு 4 பேர் தவிர அனைவரும் கலந்து கொண்டனர் .தோழர் இளமாறன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பட்டது .மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மேல் விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் நமது சங்க உறுப்பினர்களில் 185 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் .சதவிகத அடிப்படையில் 82% . இது வரை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் நமது உறுப்பினர்கள் பங்கேற்றதில் இது தான் அதிகம் என்பதை மாவட்ட செயற்குழு  கரவொலி  எழுப்பி பாராட்டியது . செப்டம்பர் 12 ஆம் தேதி ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மகாநாடு நடைபெற உள்ளது .அம் மகாநாட்டில் நமது செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும் செயற்குழு முடிவு செய்தது .அதே தினம் ESI அட்டை  வழங்குவதற்கு ஒப்பந்ததாரர் ஏற்பாடு செய்துள்ளதையும் அனைவரும் குடும்பத்தோடு வந்து புகைப்படம் எடுக்க வேண்டும்  என்ற செய்தியையும் அதில் தெரிவித்து உள்ளோம் .ஒப்பந்த ஊழியர் அனைத்திந்திய மகாநாட்டு நிதி வசுலை சாத்தூர்,ராஜபாளையம் கிளைகள் முடித்துவிட்டன .அதே போல் மற்ற கிளைகளும் மாவட்ட மாநாட்டுக்கு முன்பாக முடித்து விட வேண்டும் என மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது .  தோழர் சிவஞானம் நன்றி கூற மாவட்ட செயற்குழு  நிறைவு பெற்றது . 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...