இந்தியாவில் 100 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 120 + கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவின் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 100 கோடியைத் தொட்டு விட்டதாக டிராய் தெரிவித்துள்ளது. அதி வேகமாக இந்தியாவில் செல்போன் துறை வளர்ந்து வருவதாகவும், சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் செல்போன் சந்தாதாரர்கள் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது.கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 70 லட்சம் செல்போன் இணைப்புகள் கூடுதலாக சேர்ந்துள்ளன என்று கணக்கு கூறுகிறது. இந்த திடீர் உயர்வுதான் மொத்த எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்த உதவியுள்ளது.
நன்றி :ஒன் இந்தியா செய்திகள்