Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Tuesday, August 7, 2018

அஞ்சலி

Image may contain: 1 person, smiling, sunglasses and close-up
ஜூன் 3 1924 இல் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆன டாக்டர் கலைஞர் கருணாநிதி  அவர்கள் 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். அவர் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் தன் அஞ்சலியை செலுத்துகிறது

Tuesday, October 31, 2017

அஞ்சலி


 தலைசிறந்த கரிசல் மண் எழுத்தாளர் தோழர் மேலாண்மை செ.பொன்னுச்சாமி மறைவு மிக அதிர்ச்சியான துயரமான செய்தி .கரிசக்காட்டு சம்சாரிகளை கதை மாந்தர்களாக தமிழ் கதை நிலத்தில் படர விட்ட மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU தன் .இதயபூர்வ அஞ்சலியை உரித்தாக்குகிறது 


Image may contain: one or more people and people sitting

Sunday, March 12, 2017

அஞ்சலி


         நமது BSNLEU முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகியான சிவகாசி தோழர் ரசூல் அவர்கள் இன்று 12-03-2017  இயற்கை எய்தினார். அன்னார்  மறைவுக்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த   அஞ்சலியை செலுத்துகிறது. அவர் மறைவால் துயறுரும் அவர் தம்  குடும்பத்தார்க்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

Monday, December 19, 2016

அவசரமாகச் சென்றதேன்

 

என் கண்களுக்குள்ளே
உமது சிரித்த முகம்...
என் செவிகளுக்குள்ளே
உமது குரல்...

காண துடிக்கிறது  நெஞ்சம்..
காணவில்லையே...  மாயமென்ன?
காற்றோடு கலந்தீரோ?...
உற்ற காலமிதுவோ?

ஆருயிர்  நண்பரே...
அன்பை விதைத்து
அவசரமாய் சென்றதேன்?

விடையறியா மீளா துயருடன்...
பிரிவால் வாடும் நண்பர்களுள் ஒருவன்

-          செ. வெங்கடேஷ்

Sunday, December 18, 2016

விடை கொடுத்தோம் அன்பு தோழனுக்கு


சென்னையில் சாலை விபத்தில் காலமான நமது அன்பு தோழர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தோம் நேற்று காலையில் .மாவட்ட செயலருடன் ,கிளை செயலர்கள் முத்துசாமி ,மதி கண்ணன் ,மாரிமுத்து ,சமுத்திரம் அவர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகள்  சந்திரசேகரன் ,ராஜு ,அனவ்ரதம் ,அஷ்ரப்தீன் ,I .முருகன் ,தியாகராஜன் ,காதர் ,வெங்கடசாமி அவர்களும் , இராஜை கிளையின் ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களும், SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார், மாநில  சங்க நிர்வாகி கோவிந்தராஜ், மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ் உட்பட பெரும் எண்ணிக்கையில் மறைந்த தோழருக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செய்தனர் .மாவட்ட சங்கம் ஒரு நல்ல தொழிற்சங்கவாதியை இழந்தது மட்டும் அல்ல ஒரு திறமை மிக்க தொழில் நுட்ப ஊழியரை மாவட்ட நிர்வாகமும் இழந்து  விட்டது .சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நமது தோழருக்கு நமது தமிழ் மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் SNEA மாநில  செயலர் ராஜசேகர்  அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர் .

Friday, December 16, 2016

அஞ்சலி

அஞ்சலி
Image may contain: 2 people
ராஜபாளையம் கிளை செயலராகவும் ,லோக்கல்  கவுனசில் உறுப்பினராகவும் குறுகிய காலத்தில் நமது BSNLEU சங்க வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக இருந்த தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் JTO பயிற்சிக்கு சென்னையில் இருந்தபோது சாலை விபத்தில் காலமானார் .அவர் தம் மறைவால் துயர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நமது சங்க கொடியை இறக்கி அஞ்சலி செலுத்த அனைத்து கிளை செயலர்களையும் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது 


Monday, December 5, 2016

டிசம்பர் 6 Dr . அம்பேத்கர் நினைவு நாள்


அம்பேத்கர் பொன்மொழிகள் க்கான பட முடிவு


அஞ்சலி செலுத்துவோம் அரசியல் சிற்பிக்கு .BSNLEUVR DISTRICT 

Saturday, May 14, 2016

அஞ்சலி

அஞ்சலி
நமது BSNLEU முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகியும் ஒப்பந்த ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட  தலைவருமான தோழர் M .செல்வராஜூ அவர்கள் இன்று உடல் நல குறைவால் காலமானார் .அன்னார்  மறைவுக்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த   அஞ்சலியை செலுத்துகிறது .அவர் மறைவால் துயறுரும் அவர் தம்  குடும்பத்தார்க்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது . 

Saturday, January 2, 2016

அஞ்சலி

ஏ.பி.பரதன் | கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்(92) இன்று இரவு (சனிக்கிழமை) டெல்லியில் காலமானார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளராகவும், ஏஐடியூசி தலைவராகவும் இருந்தவர் ஏ.பி.பரதன்.அவரது மறைவிற்கு விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .

Wednesday, April 8, 2015

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

அஞ்சலி 


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(8.4.2015) காலமானார்.யாருடைய சாயலும் இல்லாமல் தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்டு, எழுத்துலகில் புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே எழுதுவதை நிறுத்தி கொண்டிருந்த ஜெயகாந்தன், கடந்த பல மாதங்களாகவே உடல்குன்றியிருந்து வந்து, சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் இன்று பிரிந்தது. தமிழ் இலக்கிய உலகம் ஒரு ஜாம்பவானை இழந்தது .

Wednesday, February 25, 2015

தியாகத்தின் திரு உருவம் மறைந்தது....வீரவணக்கம் தோழரே..Red salute.


          ஒரு நுற்றாண்டு காலம் சமூகத்தை ஆதர்ஷிக்க ஒருவரால் இயலுமா, இயலும் என்பதை இந்த உலகிற்கு தன் வாழ்கையின் மூலம் நிறுவி சென்றுள்ளார் ஒருவர். சுதந்திர போராட்ட தியாகி, இளம் கம்யூனிஸ்ட்டாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இறுதிவரை அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தோழர் ஐ.மாயாண்டி பாரதி மதுரையில் நேற்று (24-02-2015) காலமானார். அவருக்கு வயது 98. தனது 15வது வயதில் இருந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடர்ந்து மதுரை, வேலூர், சென்னை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற சிறைகளிலேயே தனது இளமைக்காலத்தை கழித்துள்ளார். ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்பதாகவே அவரது வாழக்கை இருந்தது என்பதை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை பெருமையாக கருதுவோம். தன் மரணம் வரை மதுரையில் தொடர்ந்து கூட்டங்களில் பேசி தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் சுதந்திர போரின் அவசியம் இந்த நாட்டில் வந்து விட்டது என்பதை அவர் உரக்க அறிவித்து விட்டுத்தான் விடைபெற்றுள்ளார்.
(புகைப்படம் : முத்துக்கிருஷ்ணன்)

Tuesday, December 23, 2014

அஞ்சலி


இயக்குனர் இமயம் திரு K .பாலசந்தர் இன்று காலமானார் .மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியற்றை கருப்பொருளாக கொண்டு படம் இயக்கிய பாலச்சந்தர், இந்திய திரைப்படத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டவராவார்.பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, உள்பட பல்வேறு விருதுகளை பாலச்சந்தர் பெற்றுள்ளார்.அவர் மறைவிற்கு பி எஸ் என் எல் விருதுநகர் மாவட்ட சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது .

Wednesday, October 1, 2014

செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

        
           விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அ.சேகர் 30-09-2014 அன்று காலை 11 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார் ,அன்னாருக்கு இன்று (01-10-2014) நடைபெற்ற இறுதி அஞ்சலி கூட்டத்தில் அவர் தம் உடலுக்கு நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது .நமது மாவட்ட சங்கம் சார்பாக சமுத்திரகனி ,ரவீந்திரன், முத்துசாமி,கண்ணன் ,ஜெயக்குமார் ,சோலை ,அஷ்ரப்தீன் ,சந்திரசேகரன் ,இளமாறன், சிவஞானம் ,தங்கதுரை ,காதர் மொய்தீன் ,ஜெயச்சந்திரன் ,கருப்பசாமி மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர் .

Wednesday, May 21, 2014

கண்ணீர் அஞ்சலி

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்


         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93. உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த அவர்  திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுபினர்களில் ஒருவரான இவர் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார்.1962 முதல் 1965 வரை புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல் 1980 வரை நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவு இடதுசாரி இயக்கங்களுக்கு பேரிழப்பாகும். அவர் தம் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . 

Thursday, May 1, 2014

அஞ்சலி

            பர்சூரி ஸ்வாதி.| கோப்புப் படம்.
            சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  கொடியவர்களின் குண்டுவெடிப்பில் பலியான பெங்களூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணி புரிந்த குமாரி பர்சூரி ஸ்வாதி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன ஆழ்ந்த  அஞ்சலியை உரித்தாக்குகிறது 

Monday, December 30, 2013

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இன்று காலமானார். அவருக்கு வயது 75 பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்த சென்றிருந்த போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் என தகவல்கள் தெரிவிகின்றன.இயற்கை வேளாண்  விஞ்ஞானிக்கு அஞ்சலி செலுத்துவோம் .

Saturday, December 28, 2013

அஞ்சலி,

மூத்த P & T தொழிற்சங்க தலைவர், தோழர் T.S.ராஜன் இன்று காலமானார்.தோழர் T.S.ராஜன் முன்னாள் தமிழ் மாநில செயலாளர் ஆகவும் AITTEU CLASS III(T3) சங்க துணை பொது செயலாளர் ஆகவும் பணியாற்றியவர் .. அவர் தமிழ்நாடு பி & டி தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தியது மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் அவர் முக்கிய பங்கை வகித்தவர் . தோழர் T.S.ராஜன் அவர்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு தந்த அர்ப்பணிப்பும் அவரின் எளிமையும் அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும் . அவர் தியாகத்தின் அடையாள சின்னமாகவும் தொழிற்சங்க இயக்கத்திற்கு பல தலைவர்களை கொண்டு வந்த வந்த மிக பெரிய தலைவராக திகழ்ந்தவர்.அவருக்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன்  செங்கொடியை தாழ்த்தி அவர்க்கு அஞ்சலி செலுத்துகிறது .
மாநில சங்க இரங்கல் செய்தி படிக்க :-Click Here

Friday, December 6, 2013

அஞ்சலி



          மனித மாண்பு, சுயமரியாதை, அநீதிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் மீது ஈர்ப்பு செலுத்திய ஒரே தலைவராக விளங்கிய மண்டேலா அவர்களின் மறைவிற்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கிறது.

Friday, October 25, 2013

காற்றில் கலந்தார் மன்னா டே!


          இந்திய திரையுலகில் பின்னணிப் பாடகராக கொடிகட்டிப் பறந்த மன்னா டே 1919-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பாரம்பரிய மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபோத் சந்திரா டே.சிறு வயது முதலே இசை ஆர்வம் மிகுந்த இவர் தனது மாமாவும் பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளருமான கிருஷ்ண சந்திரா டே மூலமாக மும்பைக்கு அழைத்துவரப்பட்டார்.தனது வெண்கலக் குரல் மூலம் மக்களின் மனங்களை மயக்கும் வகையில் பாடல்கள் பாடியதால் 'மன்னா டே' என அழைக்கப்பட்டார். காதல் ததும்ப இவர் பாடிய இனிய கீதங்கள் என்றென்றும் காலத்தால் அழியாதவை. கடந்த ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து திரைத்துறையில் பாடி வந்த மன்னா டே தனது சுயசரிதத்தை 2005-ம் ஆண்டு "உயிருள்ள நினைவுகள்'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டார். மன்னா டே-வின் மரண செய்தி கேட்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது.

Monday, October 7, 2013

செவ்வணக்கம்

அஞ்சலி 

தோழர் .D.Purkayastha, உதவி பொது செயலாளர், BSNLEU, கவுகாத்தி மருத்துவமனையில் 06-10-2013 0645 மணி அளவில் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது .அவருக்கு வயது 55 ஆகும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாய் நமது சங்க கொடியை  3 நாட்கள் இறக்கி அரை கம்பத்தில் பறக்கவிட்டு  செவ்வணக்கம் செலுத்துவோம் !     

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...