ஜூலை 27 ஆம் தேதி போராட்டத்தை வெற்றி பெற வைக்க விருதுநகர் மாவட்ட சங்கம் ,SNEA மாவட்ட சங்கத்துடன் இணைந்து மாவட்டம் தழுவிய சுற்றுப்பயணத்தை கடந்த 22,24 மாற்று 25 தேதிகளில் நடத்தியது . மாவட்ட செயலருடன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,அதன் மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜ் ,மாவட்ட தலைவர் தோழர் சரவணன் ,BSNLEU மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் உதவி செயலர் வெங்கடப்பன் ஆகியோர் பங்கேற்றனர் .ராஜபாளையத்தில் துவங்கி ,விருதுநகர் மாவட்ட அலுவலகத்தில் முடிவுற்ற நிகழ்வில் 6 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது .சாத்தூரில் மாவட்ட சங்க நிர்வாகி காதர் ,ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் தங்கதுரை மற்றும் வெங்கடசாமி ,ராஜையில் ராதாகிருஷ்ணன் ,முருகன்,அனவ்ரதம் ,சிவகாசியில் முத்துசாமி ,ராஜு ,ராஜாராம் மனோகரன் ,குருசாமி ,சண்முகவேலு ,முனியாண்டி ,அருப்புக்கோட்டையில் தோழர்கள் அஷ்ரப் தீன் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .















