01/02/2019 அன்று நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து உறுப்பினர்களிடம் ரூபாய் 200/- வீதம் நன்கொடை வசூல் செய்து அனுப்பும்படி கேட்டு கொண்டு உள்ளது .மாநில சங்கத்தின் நிதி நிலைமை கடுமையாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் அதற்கான பணியை வரும் மார்ச் 15 க்குள் முடித்து மாநில சங்கத்திற்கு அனுப்புமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்
Sunday, February 24, 2019
பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு
இன்று(23/02/2019) விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு T.இராதாகிருஷ்ணன் அவர்களிடம் விருதுநகர் மாவட்டAUAB சார்பாக மெமோரண்டம் வழங்கப்பட்டது இதில் AUAB தலைவர் சம்பத் குமார் கன்வீனர் ரவீந்திரன், BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி, SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார், AIBSNLEA மாவட்ட செயலர் பிச்சைக்கனி BSNLEU .மாவட்ட சங்க நிர்வாகிகள் இன்பராஜ், முனியாண்டி, முத்துச்சாமி, சேதுராம் கிளைச் செயலர் கருப்பசாமி, ஓய்வூதியர் சங்க ஜெயப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
போராட்ட களம் கண்ட தோழர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்
3 நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக நன்றி அறிவிப்பு கூட்டம் AUAB தலைவர் தோழர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .இதில் AUAB கன்வீனர் ரவீந்திரன் ,NFTE மாநில சங்க நிர்வாகி தோழர் ரமேஷ் ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோர் பங்கேற்று 3 நாள் போராட்டடத்தின் தன்மையையும் ,அரசு மற்றும் BSNL நிர்வாகத்தின் போக்கையும் விரிவாக பேசினர் .AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் நன்றி நவின்றார் .
Monday, February 18, 2019
துவங்கியது மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்
விருதுநகர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியது .மாவட்டத்தில் ஒட்டு மொத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் 77.41% பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர் .நமக்கு வாழ்வளிக்கும் நிறுவனத்தை பாதுகாக்க இவ் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைவரையும் AUAB சார்பாக புரட்சிகர நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் . விருதுநகர் ,ராஜபாளையம் ,சிவகாசி ,சாத்தூர் அருப்புக்கோட்டை வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூடப்பட்டு உள்ளன .ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரு அதிகாரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களை மிரட்டுவதாக தகவல்கள் வந்து உள்ளது . வேலை நிறுத்தம் என்று சொன்ன ஊழியரை கூட நீ வேலை செய் என்றும் ,வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் வேலையை காலி பண்ணி விடுவேன் என்றும் ஒப்பந்த ஊழியர்களை அந்த அதிகாரி மிரட்டுவதாக தொடர் தகவல்கள் வந்து உள்ளதை AUAB வன்மையாக கண்டிக்கிறது .
முதல் நாள் வேலை நிறுத்த அறிக்கை
Total Strike Leave Duty
Non Executives 283 234 39 10
Executives 89 54 21 14
---------- ------- ------ ------
372 288 60 24
---------- ------- ------ ------
% 77.41% 16.12% 6.45%
முதல் நாள் வேலை நிறுத்தத்தில் நமது BSNLEU ஊழியர்கள் பங்கேற்பு விபரம்
Total BSNLEU Members Strike Leave Duty
166 149 17 Nil
% 89.75 % 10.24%
இரண்டாம் நாள் வேலை நிறுத்த அறிக்கை
இரண்டாம் நாள் வேலை நிறுத்த அறிக்கை
Total Strike Leave Duty
Non Executives 283 233 38 11
Executives 89 52 22 16
---------- ------- ------ ------
372 285 60 27
---------- ------- ------ ------
மூன்றாம் நாள் வேலை நிறுத்த அறிக்கை
மூன்றாம் நாள் வேலை நிறுத்த அறிக்கை
Total Strike Leave Duty
Non Executives 283 233 38 11
Executives 89 54 20 16
---------- ------- ------ ------
372 287 58 27
---------- ------- ------ ------
6 ஆம் நாள் தெருமுனை பிரச்சாரம் -அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகரில் 16/02/2019 அன்று தெருமுனை பிரச்சார கூட்டம் SNEA மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார் .அவருடன் மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் ,மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி ,கிளை தலைவர் தோழர் உதயகுமார் ,கிளை செயலர் தோழர் சோலை ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,SNEA கிளை செயலர் தோழர் மனோகரன் ,ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில சங்க நிர்வாகி தோழர் செல்வராஜ் , மற்றும் அரசு ஊழியர் சங்க தோழர் ராமராஜ் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர் .
Saturday, February 16, 2019
பேரணி
விருதுநகர் மாவட்ட AUAB சார்பாக பேரணி 15/02/2019 அன்று மாலை முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக துவங்கியது .இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர் .திரளாக பெண் தோழியர்களும் பங்கேற்றனர் .பேரணிக்கு முன்பாக போராட்ட விளக்க கூட்டம் AUAB தலைவர் தோழர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .இதில் கோரிக்கைகளை விளக்கி தோழர் செந்தில்குமார் ,SNEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,AIBSNLEA மாவட்ட செயலர் ,ரவீந்திரன் ,BSNLEU மாவட்ட செயலர் ஆகியோர் பேசினர் .அதன் பின் முறையாக NFTE மற்றும் BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் ரமேஷ் மற்றும் சமுத்திரக்கனி அவரகள் பேரணியை துவக்கி வைத்தனர் .பழைய பேருந்து நிலையம் முன்பாக நிறைவு பெற்ற பேரணி ,அதன் பின் தெருமுனை பிரச்சாரமாக மாற்றப்பட்டு அதில் தோழர்கள் ரவீந்திரன்,சம்பத்குமார், செந்தில்குமார் ,சமுத்திரக்கனி ஆகியோர் உரை நிகழ்த்தினர் .தோழர் மணிகண்டன் நன்றி நவின்றார் .அதன் பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் AUAB கன்வீனர் தோழர் ரவீந்திரன் பேட்டியளித்தார் .
போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் 4 ஆம் நாள் ஸ்ரீவில்லிபுத்தூர்
போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் 4 ஆம் நாளாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 14//02/2019 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது ..இந்த நிகழ்வுகளில் SNEA மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜ் ,ராஜபாளையம் கிளை செயலர் தோழர் தங்கவேல் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளைப்பிள்ளையார் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் வேலுச்சாமி ,கிளை செயலர் தோழர் வெங்கடசாமி ,தோழர் தங்கதுரை ,NFTE சங்கம் சார்பாக தோழர் மோகன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் புளுகாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள் .
Wednesday, February 13, 2019
போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் ---3 ஆம் நாள்
இன்று காலை சாத்தூர் நகரில் போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் தோழர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .இந்த இரு கூட்டங்களிலும் BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் முனியாண்டி ,கிளை செயலர் தோழர் காதர் ஆகியோர் பங்கேற்றனர் . இவர்களுடன் SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,SNEA மாவட்டசங்க நிர்வாகி தோழர் கேசவன் மற்றும் SNEA கிளை செயலர் தோழர் முத்தையா ஆகியோரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர் ..இதில் திரளாக ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்றனர் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...