1.70 லட்ச BSNL ஊழியர்களின் குடும்பங்களின் எதிர்காலம் இருட்டில் உள்ளது. அரசாங்கம் BSNL நிறுவனத்தை அழிக்க நினைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் BSNL நிறுவனம் சமதளத்தில் போட்டி போடுவதை அரசு விரும்பவில்லை. எனவே BSNLக்கு 4G அலைக்கற்றை வழங்க அரசு மறுக்கிறது. தனது காலியிடங்களை பயன்படுத்துவதன் மூலம் BSNL தனது வருவயை அதிகரிக்க அரசு அனுமதிக்க மறுக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெற்றிருக்கும் போதும், BSNL நிறுவனத்திற்கு மட்டும் வங்கிகளிடம் இருந்து கடன்பெற அரசு அனுமதிப்பதில்லை. வரும் காலத்தில் BSNL ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை பெற முடியாமல் செய்வதன் மூலம் அந்த ஊழியர்களின் குடும்பத்தை பட்டினி போட அரசு விரும்புகிறது. BSNL ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்க விரும்புகிறது. ஊழியர்களின் மனதில் அச்சத்தை உருவாக்குவதற்கான அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை விருப்ப ஓய்வு பெறச்செய்து வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவை வளர்ப்பதற்கு தேவையான அனைத்தையும் அரசு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனமான BSNLஐ விட்டு விட்டு இந்திய ரயில்வே துறை ரிலையன்ஸ் ஜியோவின் இணைப்புகளை வாங்கி உள்ளது. என்ன அவமானகரமான நிகழ்ச்சி? இந்த முடிவிற்கு பின்னால் யார் உள்ளார்கள்? நாம் இந்த அநீதிகளை அனுமதிக்கக் கூடாது. வாருங்கள் தோழர்களே, BSNLஐ அழிப்பதற்காக அரசாங்கம் எடுத்து வரும் சதிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடுவோம். இந்திய நாட்டு மக்கள் தான் இந்த பெருமை மிகு BSNL நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள். அவர்கள் தான் நம் முதலாளிகள். எனவே BSNLஐ காப்பதற்காக அவர்களின் ஆதரவை கோரும் வகையில் நாம் அவர்களிடம் செல்வோம். எப்போதும் இறுதி வெற்றி மக்களுக்கே. அதற்காக 15.02.2019 அன்று குடும்பத்துடன் பேரணி நடத்திட அறைகூவல் விடுக்கின்றது. இந்த பேரணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நமது BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநில சங்கங்கள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். நமது குடும்பங்களில் உள்ள அனைவரையும் 15.02.2019 அன்று தெருவிற்கு கொண்டு வர தயங்கக் கூடாது என BSNL ஊழியர் சங்கம் ஒவ்வொரு தொழிலாளியையும் கேட்டுக் கொள்கிறது-
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment