செய்தி படிக்க :-Click Here
Monday, March 31, 2014
Sunday, March 30, 2014
ஏகாதிபத்திய நியாயம்
உலகை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதற்கான அடிப்படைகளில் மருந்து உற்பத்தித் துறையும் ஒன்று. இப்போது அந்த நிறுவனங்களின் சார்பில் இந்தியாவுக்கு நெருக்குதல் தர ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.நோயாளிகளுக்குக் கட்டுப்படியாகும் விலையில் மருந்துகளைக் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது. தங்களால் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு இந்திய அரசு அனுமதி தருவதால் ‘அறிவுசார் சொத்துரிமை’ சட்டம் மீறப்படுகிறது, இதற்காக அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் கோரியுள்ளன.இது தொடர்பாக இந்திய அரசை, அமெரிக்கா எச்சரிக்கும் தொனி கடுமையாகவே இருக்கிறது. இந்தியர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகளைத் தயாரித்தால், தங்களின் லாபம் சரிந்துவிடும், அத்துடன் மற்ற ஏழை நாடுகள் இந்த மருந்துகளை இந்தியாவிடமிருந்தே குறைந்த விலைக்கு வாங்கத் தொடங்கினால் தங்கள் நாட்டு நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துவிடும் என்பதும்தான் உண்மையான காரணம்.
மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் கொள்ளை லாபம் ஒன்றில் மட்டுமே அமெரிக்க நிறுவனங்கள் குறியாக இருக்கின்றன. உலக வர்த்தக ஒப்பந்தம் அனுமதிக்கிறது என்பதற்காகப் பிற நாடுகள் தயாரிக்கும் எல்லா மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அனுமதி தரப்படுவதில்லை. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமொன்று தயாரித்த ஒரு மருந்து ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்த மருந்தில் செய்யப்பட்ட சிறிய மாற்றம்தான் என்பதால், காப்புரிமைச் சட்டத்தின் ஒரு ஷரத்து அனுமதிப்பதற்கேற்ப, அதை இந்தியாவில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் 2013-ல் அனுமதி வழங்கியது.காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இதுபோல் ஓரிரு விதிவிலக்குகளைத்தான், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா பயன்படுத்திக்கொண்டது. ஆனால், இந்த விஷயத்தில் பிற நாடுகளும் இந்தியாவைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க மருந்து நிறுவனங்கள் கூக்குரலிடுகின்றன.இந்தத் தருணத்தில் நாம் ஒரு விஷயத்தை நினைவுகூர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கக் குழந்தைகளுக்காகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை, பின்தங்கிய நாடுகளில் இருக்கும் குழந்தைகளிடம் வெள்ளோட்டம் விட்டுப் பரிசோதிப்பதற்காக அனுமதி அளித்தார். இதற்கு ஒத்திசைவாக, இந்தியா தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று 2012-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் மருந்து வெள்ளோட்டத்தால் 4,000 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. ஆனால், அரசாங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி மேற்கண்ட கால இடைவெளியில் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 506 பேர், மரணமடைந்தவர்கள் 89 பேர்.இவை நமக்குத் தெரிவிக்கும் விஷயம் இதுதான். பன்னாட்டு நிறுவனங்களின், முக்கியமாக அமெரிக்க நிறுவனங்களின் சோதனைக் கூட எலிகள்தான் நாம். வெள்ளோட்டத்துக்காக பின்தங்கிய நாடுகளின் ஏழைகளைப் பயன்படுத்திக்கொள்வார்களாம், ஆனால் பலியாடுகளாக்கப்பட்ட அந்த மக்களுக்கு மருந்துகளைக் கொள்ளை விலையில் விற்பார்களாம். இதுதான் ஏகாதிபத்திய நியாயம்.
<நன்றி :- தி ஹிந்து >
Saturday, March 29, 2014
மாவட்ட செயற்குழு
29-03-2014 அன்று முதல் மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மறைந்த இடதுசாரி சிந்தனையாளர் தோழர் சிவசங்கரன் மற்றும் நெய்வேலியில் தொழில் பாதுகாப்பு படையால் சுட்டு கொல்லப்பட்ட ஒப்பந்த ஊழியர் ராஜ்குமார் மறைவிற்கு அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆய்படு பொருளாக வர உள்ள சொசைட்டி தேர்தல்,மக்களவை தேர்தலில் நமது பங்களிப்பு, லாங் ஸ்டே மாறுதல் ஆகியவை விவாதிக்கப்பட்டன.மாவட்ட மகாநாட்டு கணக்கு வழக்கு அருப்புகோட்டை கிளை செயலாளர் தோழர் ஜெயகுமார் அவர்களால் சமர்பிக்கப்பட்டது. கூடுதல் செலவை ஈடுகட்ட அருப்புகோட்டை கிளைக்கு மாவட்ட சங்கத்தால் ரூபாய் 7000/- வழங்கப்பட்டது.விவாதத்தில் அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நல்ல ஆலோசனைகளை வழங்கினர்.மக்களவை தேர்தலில் போட்டியிடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலர் தோழர் சாமுவேல் ராஜ் அவர்கள் நமது செயற்குழுவில் கலந்து கொண்டு பொது துறையை பாதுகாக்க தேர்தலில் நம்முடைய பங்களிப்பு எங்ஙனம் இருக்க வேண்டும் என விரிவாக விளக்கினார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பில் நமது சங்கம் ஒரு அங்கம் என்பதால் நமது சங்கம் சார்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புக்கு ரூபாய் 75,000/- நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டது.31-08-14 அன்று ஓய்வு பெறும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்கள் பணி ஓய்வு நாள் அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சிவகாசியில் நடத்த செயற்குழுவில் முடிவு எடுக்கபட்டது .மதியம் 2 மணி அளவில் மாவட்ட பொது மேலாளர் அவர்களை மாவட்ட சங்கம் பேட்டி கண்டது.5 pair கேபிள் பற்றாக்குறை ,மதுரை ரோடு பகுதியில் 200 pair போட வேண்டிய அவசியம் , கேபிள் டாஸ்க் போர்ஸ் உருவாக்க வேண்டிய அவசியம் , அருப்புகோட்டை க்ரூப்ஸ் பகுதிக்கு JTO போடவேண்டிய அவசியம் , சிவகாசி நெட் வொர்க் பகுதியில் டீஸல் பற்றாகுறை , சிவகாசி எக்ஸ்டெர்னல் பகுதிக்கு கூடுதல் SDE நியமனம் ஆகியவை விவாதிக்கப் பட்டன .தேர்தல் நிதியாக அனைத்து கிளைகளுக்கும் தலா ரூபாய் 8000/- நிர்ணயம் செய்யப்பட்டது .GM அலுவலக கிளைக்கு மட்டும் ரூபாய் 14,000/- நிர்ணயம் செய்யப்பட்டது. செயற்குழுவை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R .முனியசாமி , ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் M .அய்யாசாமி ஆகியோர் பேசினர். தோழர் வெங்கடப்பன் நன்றியுரை கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது .
Thursday, March 27, 2014
Wednesday, March 26, 2014
இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு புதன்கிழமை தொடங்குகிறது. 3,179 மையங்களில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 26-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் மாணவ-மாணவிகள் மனஇறுக்கத்தைப் போக்கி விடைகளை திட்டமிட்டு நல்ல முறையில் எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் (9.15 மணி முதல் 9.25 மணி வரை) வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11,552 பள்ளி களைச் சேர்ந்த 10,38,876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 5,30,462. மாணவிகள் 5,08,414 பேர்.
பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றிபெற்று உலமயத்தின் அடுத்த போட்டிக்கு ஆயத்தமாக மாவட்ட சங்கம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்
தி.க.சி. என அனைவராலும் அறியப்படும் இலக்கியத் திறனாய்வாளர் தி.க. சிவசங்கரன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 89.
சிறிது நாள்கள் உடல்நலமின்றி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.க.சி.யின் உயிர் இரவு 10.30 மணிக்கு பிரிந்தது.
மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும், முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியாகவும் விளங்கிய இவர், திருநெல்வேலியில் 1925ஆம் ஆண்டு மார்ச் 30-ல் கணபதியப்பன், பர்வதம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது 11ஆவது வயது முதலே "தன்னை செதுக்கிய சிற்பி மகாகவி பாரதி' என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நினைவுகூர்ந்தவர்.
1941 ஜூன் மாதம் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்தார். 1945 முதல் 1964ஆம் ஆண்டு வரை வங்கி ஊழியராகவும், தொழிற்சங்கவாதியாகவும் தமிழகத்திலும், கேரளத்திலும் இவர் பெற்ற அனுபவங்களை ஒரு நாவலாக சித்தரிக்க வேண்டும் என்பதே இவரது பேராசை. அது நிறைவேறாமலேயே போனது.
1941ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் வ.ரா.வின் பாணியில் நடைச் சித்திரங்கள் எழுதப் பழகி, பிறகு கதாசிரியராக மாறினார். கவிஞர், நாடகாசிரியர், சினிமா விமர்சகர், இலக்கிய விமர்சகர், பத்திரிகையாளர், திறனாய்வாளர், இலக்கியச் செயற்பாட்டாளர் என பல்வேறு தளங்களில் பரிணமித்தவர்.
இவரது "விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்' என்ற நூலுக்காக 2000-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இலக்கிய விருது, பாரதிய இலக்கிய விருது, லில்லி தேவசகாயம் இலக்கிய அறக்கட்டளை விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இன்றளவும் திறனாய்வாளர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் பிரேம்சந்த், முல்கராஜ் ஆனந்த், சஜ்ஜாத் ஜாகிர் ஆகியோரால் தொடங்கப்பட்டு, நேரு, சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் வரவேற்று வளர்த்த முதன்மையானவர்களில் ஒருவர்.
72 ஆண்டு கால இலக்கிய அனுபவத்தைக் கொண்டிருந்தார். கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிரம்பியவர்கள்கூட தி.க.சியை உணர்வுபூர்வமாக நேசித்து வந்ததே இவரது ஆளுமையின் தனித்த வெளிப்பாடுக்கு கிடைத்த சான்றாக உள்ளது. இவரது இலக்கியப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட படைப்பாளிகளே இன்றைய தலைமுறை எழுத்தாளர்களாக தமிழிலக்கிய உலகில் ஜொலித்துக் கொண்டுள்ளனர். இவருக்கு கணபதி, வண்ணதாசன், சேது என்ற மகன்களும், ஜெயலட்சுமி, பருவதகுமாரி, கௌரி என்ற மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 97916 17421.
இளம் தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்திற்கு உந்து சக்தியாக இருந்து பலரையும் எழுத்தாளர்களாக்கிய தோழரின் மறைவிற்கு நமது மாவட்டச் சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது.
Tuesday, March 25, 2014
இந்தியாவிற்கு ஹிட்லர் தேவையா
வாரணாசியில் அரவிந்த் கேஜ்ரிவால் மீது முட்டை, மை வீச்சு.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது முட்டைகள் மற்றும் மை வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியிலும், குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வாரணாசி மக்கள் விரும்பினால், அந்தத் தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.இந்நிலையில், வாரணாசியில் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், அந்தத் தொகுதி மக்களின் கருத்துகளை நேரில் கேட்பதற்காக தமது கட்சித் தலைவர்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வாரணாசி வந்தார்.கங்கை நதியில் நீராடிய கேஜ்ரிவால், காசி விஸ்வநாதர் மற்றும் கால பைரவர் கோயிலுக்குச் சென்றார். அப்போது நூற்றுகணக்கான பாஜகவினர் திரண்டு கேஜ்ரிவாலை எதிர்த்து “துரோகி” என்று கோஷமிட்டனர்.விஸ்வநாதர் கோயிலில் இருந்து மக்கள் மத்தியில் நடந்து வந்த கேஜ்ரிவால் மீது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும் மை-யையும் வீசினர். இதனைத் தொடர்ந்து, அங்கு "மோடி... மோடி" என்ற கோஷங்கள் அங்கு எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், ஆர்பாட்டம் மேற்கொண்ட கும்பலை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்த முயன்றதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.பலத்த பாதுகாப்புடன் விஸ்வநாதர் கோயிலில் இருந்து வெளியேறிய கேஜ்ரிவால், பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்து விட்டார். தொடர்ந்து எதிர்ப்பு கோஷம் ஒலித்த போதிலும், அங்கிருந்து புன்னகையுடன் வெளியேறினார்.இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய் சிங் மற்றும் முன்னாள் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி ஆகியோருடன் வேனில் இருந்தபடி பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். ஜனநாயக நாட்டில் எதிர்த்து போட்டியிடுவதை ஜீரணிக்க முடியாத இவர்கள் இந்தியாவின் ஹிட்லர்கள் .
< நன்றி : தி ஹிந்து >
இந்திய சில்லரை வர்த்தகத்தில் களமிறங்கும் முதல் அன்னிய நிறுவனம்!!
இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனத்திற்கு இடம் இல்லை என மக்கள் போராட்டம் செய்து வரும் நிலையில், இந்தியாவின் டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிரென்டு நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோ நிறுவனம் இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக டெஸ்கோ நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 14 மில்லயன் டாலர் அதாவது 850 கோடி ரூபாய் இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தின் மதிப்பு 500 பில்லியன் மதிப்புடையது.
<நன்றி :- ஒன் இந்தியா >
பி எஸ் என் எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விரிவடைந்த செயற்குழுவில் உருவாக்கப்பட்ட பி எஸ் என் எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, விருதுநகர் மாவட்ட அமைப்பு 25-03-2014 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மறு சீரமைக்கப் பட்டுள்ளது .கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
மாவட்ட தலைவர் :- தோழியர் பகவதி ,STSO ,ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தலைவர்கள்:- 1.தோழியர் .ஜான்சிராணி ,STSO ,சிவகாசி
2. தோழியர் .R .சுசீலா ,TSO ,விருதுநகர்
3.தோழியர் செல்வாதேவி ,ராஜை
4.தோழியர் .கீதா ,STSO ,
கன்வீனர் :- தோழியர் .N .மங்கையர்க்கரசி ,STS ,VR
உதவி கன்வீனர்கள் :- 1.தோழியர் ஆலிஸ் ,STS . A P K
2.தோழியர் G .தனலட்சுமி ,TSO ,VR
3.தோழியர் த .பாண்டியம்மாள் ,VR
4.தோழியர் R .ஜோதி
பொருளாளர் :- தோழியர் .S .பாண்டிசெல்வி ,VR
உதவி பொருளாளர் :- தோழியர் ச.தனலட்சுமி ,TSO .STU
முடிவுகள் :-
1. 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துவது .
2.மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு விரிவடைந்த செயற்குழுவை நடத்துவது .
3.நிரந்தர ஊழிய்ரகளிடம் மாதம் ரூபாய் 20/- சந்தாவாகவும் ,ஒப்பந்த ஊழியர்களிடம் ரூபாய் 10/- சந்தாவாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது .
4.அதிகாரிகள் உட்பட அனைவரையும் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவில் இணைக்க நிர்வாகிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது .
Monday, March 24, 2014
மாவட்ட செயற்குழு
வருகின்ற 29-03-2014 சனிக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்ட சங்க அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆய்படு பொருள் :-
1. மாவட்ட மாநாட்டு கணக்கு ஒப்படைப்பது 2. சென்னை சொசைட்டி தேர்தல்
3. ராஜ்கோட் மத்திய செயற்குழு முடிவுகளை செயல்படுத்துவது .
4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற .
Friday, March 21, 2014
வெற்றி நாயகனுக்கு வயது 14
வெற்றி நாயகனுக்கு வயது 14
On 22nd of March 2014, BSNL Employees Union will be completing 13 years. Formed on 22nd March 2001 at the National Convention of Telecom Employees at Visakhapatnam, called by the progressive unions in the newly formed BSNL, BSNLEU during the last 13 years have grown to become as the biggest union. It was the only recognised and representative union in BSNL since the second Membership Verification in 2004 to 2013, till it took initiative for grant of recognition to a second union also.
During the last 13 years of its existence, BSNLEU has been able to achieve two wage agreements for the employees, a new Promotion Policy as also many other achievements. It has taken the lead fight against disinvestment and privatisation and stopped the government from selling its share. It has taken initiative in forming the Joint Action Committee/Forum of the Associations/Unions of Executives and Non-Executives which has organised many struggles and strikes to save BSNL and improve its services as also on the demands of the workers. The workers have rallied around BSNLEU due to its sincere and committed functioning. It took initiative in forming the organisations for the Pensioners (AIBDPA) and Casual, Contract Workers (BSNLCCWF) and jointly fought for settling their issues. BSNLEU has also done its due role amongst the PSU Unions. Now it has also taken initiative to form the Joint Action Committee of Non-Executive Unions/Associations for focusing and organising struggles for settling the urgent demands.
Another achievement of the union is the purchase of a new union office building at New Delhi at Shadipur area. The building has been purchased and was inaugurated on the BSNLEU Day, 22nd March 2012. The purchase could be made only due to the whole hearted support of the members throughout the country. The purchase was made by the balance amount in the union accounts and a loan of Rs. 1.5 crore from the bank. CHQ has called for further donations and we are sure that the members will donate generously again to repay the loan. By purchasing the building within 2 years of taking the decision in the Thiruvananthapuram All India Conference, CHQ has been able to fulfill the long cherished dream of the BSNL workers.
Thursday, March 20, 2014
மத்திய சங்க செய்திகள்
சென்னையில் 21-03-2014 அன்று நடைபெற உள்ள FNTO சங்கத்தின் அனைத்திந்திய மகாநாட்டின் பொது அரங்கில் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் வாழ்த்துரையாற்ற உள்ளார். FNTO மாநாடு வெற்றி பெற நமது மத்திய சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது.
01-01-2007க்கு பின் பணி நியமனம் பெற்ற ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனையை தீர்க்க கோரி JAC கடிதம் எழுதி உள்ளது. Click Here
கார்போரேட் அலுவலகம் பல்வேறு மாநிலங்களுக்கு நலநிதியம் இறுதி மானியத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு வெளியிட்டு உள்ளது. Click Here
குஷ்வந்த் சிங் காலமானார்
பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99.உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களுள் ஒருவரான குஷ்வந்த் சிங்கின் எழுத்தில் நையாண்டித்தனமும் அழுத்தமான கருத்துகளும் பொதிந்திருக்கும்.யோஜனா என்ற பத்திரிகையை நிறுவியவர். தி இல்லுஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா, தி நேஷனல் ஹெரால்டு, தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.ட்ரெயின் டூ பாகிஸ்தான், ஐ ஷேல் நாட் ஹியர் தி நைட்டிங்கேல், டெல்லி உள்ளிட்ட இவரது படைப்புகள் காலம் கடந்து பேசுபவை.குஷ்வந்த் சிங் தனது 95-வது வயதில் 'தி சன்செட் கிளப்' என்ற நாவலை எழுதினார். இவரது சுயசரிதையை 2002-ல் பெங்குவின் புக்ஸ் வெளியிட்டது.1980-ல் இருந்து 1986 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1974-ல் இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. ஆனால், அவ்விருதை 1984-ல் அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார். பொற்கோயிலில் நுழைந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராகவே விருதை திருப்பித் தந்தார். பின்னர், 2007-ல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
< தி ஹிந்து >
பிரமாண்டமான உண்ணாவிரத போராட்டம்
முறைகேடான மாறுதல் உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று 20/03/2014 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் விருதுநகர் GM அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மிகவும் எழுச்சியான முறையில் ஒட்டு மொத்த ஊழியர்களும் கலந்து கொண்ட பிரமாண்டமான போராட்டமாக இது திகழ்ந்தது. மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டங்களிலேயே இந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு வித்தியாசமான பதிவாக பதிவானது. தனி நபரையோ, தனிப்பட்ட சங்கத்தையோ எதிர்த்து போராடாது மாவட்ட நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்தும்,முதன்மை சங்கத்தை கலந்து ஆலோசிக்காது போடபட்ட முறைகேடான மாறுதல் உத்தரவை மாற்றி அமைக்க கோரியும் நடைபெற்ற போராட்டம். நமது மாநில செயலர் தோழர் S.செல்லப்பா, மாநில உதவி செயலர் தோழர் முருகையா ஆகியோரின் தலையீட்டின் அடிப்படையில் மாநில நிர்வாகத்தோடு பேசி, மாநில நிர்வாகம் நமது பொது மேலாளரிடம் பேசி மாறுதல் உத்தரவு மாற்றப்பட்டு, DGM (ADMN) அவர்கள் நமது போராட்ட குழுவிடம் தெரிவித்தபின் நமது உண்ணாவிரத போராட்டம் மாவட்ட பொருளாளர் வெங்கடப்பன் நன்றி கூற முடித்து கொள்ளப்பட்டது. பெரும் திரளாக பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், அணி திரட்டிய கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், தீர்வுக்கு வழிகாட்டிய மாநில செயலர் தோழர் செல்லப்பா, மாநில உதவி செயலர் தோழர் முருகையா ஆகியோர்க்கும், வாழ்த்துரை வழங்கிய திரு. ராதாகிருஷ்ணன், AIBSNLEA, தோழர் அய்யாசாமி, AIBDPA, தோழர் பெருமாள்சாமி ஆகியோருக்கும் மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறது. அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளை பேச வாய்ப்பு அளித்து பயிற்சி பட்டறையாக உண்ணாவிரத போராட்டத்தை மாற்றியது சிறப்பு அம்சமாய் திகழ்ந்தது.
Wednesday, March 19, 2014
உண்ணாவிரத போராட்டம்
மாவட்ட நிர்வாகத்தின் பிடிவாதம் தொடர்வதால் திட்டமிட்டபடி நமது உண்ணாவிரத போராட்டம் நாளை காலை 1000 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் GM அலுவலகம் முன் நடைபெறும். அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
தொடரும் கொடுமைகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வந்த கே.பி.ஆர்.மில்லில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் இறங்கி, மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர 9 பேர் ஆபத்தான முறையில் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அத்தொழிற்சாலையின் தனி அலுவலர் ரமணன், ஆலை மேலாளர் ரங்கராஜன் மற்றும் சுத்திகரிப்பு நிலைய மேலாளர் நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஷவாயுவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்கள்….
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. விஷவாயு தாக்கி கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட இறப்புகளின் விபரம் :
தூத்துக்குடியில், கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர்.
அதற்கு அடுத்த மாதமான ஏப்ரலில் சென்னை பெரும்பாக்கத்தில் கழிவறைத்தொட்டியை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்.
இதே மாதத்தில், ஆயிரம் விளக்கு பகுதியில் உணவகம் ஒன்றின் 40 அடி கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர் பலியானார்.
2013, ஏப்ரல் 27ஆம் தேதி, திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சலையில் பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் இருவர் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர்.
கடந்தாண்டு மே மாதம் 28 ஆம் தேதி தஞ்சாவூரில் வடக்கு வாசல் பகுதியில் ஆழ்துளைகிணறு உள்ளே இறங்கிய 2 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தனர்.
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், கழிவு நீர் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் துப்புரவு தொழிலாளர்கள் 10 பேர் மரணமடைந்தனர்.
இதே ஆண்டு செப்டம்பர், 7 ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது திருக்கழுகுன்றம் வடிகால் வாரியத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி புழல் அருகே வீட்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவேங்கடபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட 2தொழிலாளர்கள் விஷவாயு தாக்குதலுக்கு பலியாகினர்.
நவம்பர் 7ஆம் தேதி சென்னை அம்பத்தூர் பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு பணியின் போது விஷவாயு தாக்கியதில் ஆந்திராவை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த ஆண்டு (2014) பிப்ரவரி 16ஆம் தேதி திருவொற்றியூரில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் உயிரிழந்தார்.
பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கியதால், விஷவாயு தாக்கியதில் 21 ஆம் நூற்றாண்டு தொடங்கியது முதல், கடந்த 15 ஆண்டுகளில் 800 பேர் உயிரிழந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
தரவுகள் : Puthiyathalaimurai TV
The Hindu
New Indian Express
போதும் இந்தத் தொல்லை என பொங்கி வரும் கூட்டம், நிலை மாறும் வழி காணும் வகை செய்திட வேண்டும். நாம் நமது ஜனநாயகக் கடமையாற்ற உள்ள நேரத்தில் அடித்தள, பாட்டாளி மக்களுக்கான சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படுவோம். நமக்காகத் திட்டமிட வேண்டும். அதை நாம்தான் திட்டமிட வேண்டும்.
Tuesday, March 18, 2014
என்.எல்.சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
நெய்வேலி என்.எல்.சி.யில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மனைவிக்கு நிரந்திர பணி வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி : http://www.puthiyathalaimurai.tv
பொருளாதார பலன்களைக் காட்டி தற்போதைய போராட்டத்தை வேண்டுமானால் நிறுத்திவிடலாம். ஆனால் அது பிரச்சனைக்கான தீர்வாக முடியாது. இனி இதுபோல் நடக்காமல் இருப்பதற்கான முயற்சியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கவனம் செலுத்துவதுடன் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
Monday, March 17, 2014
பாராளுமன்ற தேர்தல்
நமது விருதுநகர் பாராளுமன்ற தொகுதி இடதுசாரி வேட்பாளர் ஆக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலர் தோழர் சாமுவேல்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடு 15-03-2014 அன்று கிளை தலைவர் தோழர் .L .தங்கதுரை தலைமையில் தொலை பேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது . தோழர் .பாண்டி அவர்கள் சங்க கொடியை ஏற்றி வைக்க அஞ்சலி தீர்மானத்தை தோழர் தங்கவேலு வாசிக்க கிளை செயலர் தோழர் வெங்கடசாமி வரவேற்பு உரை நிகழ்த்த மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மகாநாட்டை முறையாக தொடக்கி வைத்தார் .வெற்றிகரமாக நடைபெற்ற மாவட்ட மகாநாட்டின் மணம் மாறாத சூழ்நிலையில் நாம் மாவட்டத்தில் நடத்தவுள்ள இயக்கங்களின் முக்கியத்துவம் பற்றியும் , வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய பங்களிப்பை பற்றியும் ,ஊழியர் பிரச்சனைகளை கையாள்வதில் கிளை சங்கத்தின் முயற்சி அதிகப்படுத்தவேண்டிய கட்டாயத்தையும் மாவட்ட செயலர் எடுத்துரைத்தார் .சிறப்புரையாக பேசிய மாநில அமைப்பு செயலர் தோழர் செலவின் சத்யராஜ் ஒன்றாக இருந்த தபால் மற்றும் தொலை பேசி துறை பிரிக்கப்பட்டு அதன் பின் தொலைபேசி துறை கம்பெனி ஆக மாற்றிய அரசின் தனியார் மய முயற்சியை சரின் கமிட்டி , மற்றும் சாம் பித்ரோடா கமிட்டி பரிந்துரைகளை உதாரணம் காட்டி பேசினார் . ராஜ்காட் மத்திய செயற்குழுவின் முடிவுகளை அமலாக்க வேண்டிய அவசியத்தை சுட்டி காட்டினார் . மாவட்ட தலைவர் சமுத்திரகனி அவர்கள் பேசும் போது ஸ்தல மட்ட பிரச்சனைகளை தீர்க்க நாம் நடத்த உள்ள போராட்டங்களை வலிமையுடன் நடத்த வேண்டிய அவசியத்தை கூறினார் . தோழர் அய்யாசாமி ,AIBDPA , தோழர் முனியசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்கம் , தோழர் C .வெங்கடேஷ் ,மாவட்ட உதவி செயலர் வாழ்த்துரை வழங்கினர் .மாவட்ட உதவி செயலர் இளைய தோழர் அஷ்ரப்தீன் , TTA அவர்கள் தன் கன்னி உரையை நிகழ்த்தினார் . கிளையின் மூத்த தோழர் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மகாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது .தோழரை வாழ்த்தி தோழர்கள் ரவீந்திரன்,புளுகாண்டி , தங்கதுரை ,அய்யாசாமி ,பெருமாள்சாமி ,ஜெயபாண்டியன் , சிவஞானம் ஆகியோர் பேசினர் ..நிர்வாகிகளாக தோழர்கள் கந்தசாமி, சமுத்திரம் ,ராஜாராம் ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டனர்
இரங்கல்
விருதுநகர் NFTE மாவட்டச்சங்கத்தின் உதவி செயலர் சிவகாசித்தோழர். ஜாபர் சாதிக் சேட் நேற்று 16/03/2014 இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . அவர் தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Thursday, March 13, 2014
ஆர்ப்பாட்டம்
முறைகேடான மாறுதல் உத்தரவு
பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் நகருக்கு விருப்ப மாறுதல்களுக்கு 5 ஊழியர்கள் பதிவு செய்து காத்து கொண்டுள்ள சூழலில் ராஜபாளையம் நகருக்கு விருப்ப மாறுதலுக்கு விண்ணப்பமே கொடுக்காத ஊழியருக்கு முறைகேடாக மாறுதல் உத்தரவை பிறப்பித்து அதை சுட்டி காட்டியும் தவறை புரிந்து கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து... ... 17-03-2014 அன்று கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்
20-03-2014 அன்று மாபெரும் ‘உண்ணாவிரதம்’
"GM அலுவலகம் முன்பாக"
BSNL-ல் உள்ள ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உதயம்
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
Wednesday, March 12, 2014
கருத்தரங்கம்
உத்தர பிரதேச (மேற்கு ) மாநில சங்கம் ராஜ்கோட் மத்திய செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில் மாநில அளவில் ஒரு கருத்தரங்கத்தை நடத்தி உள்ளது.
புகைப்பட தொகுப்பு பார்க்க : Click Here
JAC
அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் முக்கியமான மற்றும் எரியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நீடித்த போராட்டத்தை நடத்துவதற்கு பிஎஸ்என்எல்லின் அதிகாரிகள் அல்லாத நிர்வாகிகள் சங்கங்கள் மற்றும் அசோசியேசன்ஸ் அனைத்தும் ஒரே மேடையில் இணைந்து கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்வரும் தோழர்கள் ஒருமனதாக கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : தோழர் .சந்தேஷ்வர் சிங், GS, NFTE
கன்வீனர் : தோழர் P அபிமன்யு , G S, BSNLEU இணை கன்வீனர்கள் :1.தோழர் ஜெயப்ரகாஷ் , GS, FNTO
2.தோழர் பவன் மீனா, GS, SNATTA
பொருளாளர்: தோழர் R .C .பாண்டே GS, BTEU
அனைத்து தொழிற்சங்கங்களின் செயலாளர்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் ஆக இருப்பார்கள்.
இப்போதே ஆரம்பிச்சு…
ஆண்டிபட்டி-தேனி தேசிய நெடுஞ்
சாலையில், சக்கம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு முன்னர்
நான்கு வாகனங்கள் நின்றது மக்கள் கூட்டம்.ஏதோ விபத்து ஏற்பட்டு
விட்டதா என்று பார்வையிட சென்றபோது,சுமார் 40 வயது மதிக்கதக்க நபர்
படுத்து கிடந்தார்.
ஏதோ வாகனத்தில் அடிபட்டு
விட்டார் என்று நினைக்கும் போது,அருகில் இருந்தவர் 108 ஆம்புலன்ஸ்
போன் போடுங்கள் என்றார்.அப்போது எனது
கைபேசியை எடுத்து 108 நம்பருக்கு போன் போடும் போது
கால் சென்டர் இனைப்பு கிடைத்தது.
விபரம் கூறும் போது,அருகில்
இருந்தவர்கள் தண்ணி அடித்து விட்டு
படுத்து இருக்கிறான் என்றார்கள்.உடனே நான் கால்
சென்டர் பெண்ணிடம் மன்னித்து விடுங்கள் தவறுதலாக போன் பண்ணிவிட்டேன் என்று
கூறி இனைப்பை துண்டித்து விட்டேன்.
அதன்பிறகு அருகில் இருந்தவர்களிடம் ஏம்பா
மெயின்ரோட்டில் விழுந்து கிடக்கிறானே தூக்கி அருகில் படுக்க
வைக்கலாமே என்றேன். அதற்கு அவர்கள்
இவன் தண்ணியும்,கஞ்சாவும் சேர்ந்து போட்ட மப்புல இருக்கான்
பாரு என்றார்கள்.அருகில் காவல் நிலைய
பெண்மணி பைக்கில் வந்தார். என்ன என்று
கேட்டார் தண்ணி அடிச்ச மப்புல
மறியல்ல இருக்கான் என்று ஒருவர் கூறியவுடன்
அந்த காவல் பெண்மணியும் அதே
வேகத்தில் சென்றார்.
அதன் பின்பும் அருகில்
இருந்தவர்களிடம் வப்பா தூக்கி ஒரத்தில்
படுக்க வைக்கலாம் என்று கூறியபோது யாரும்
வரவில்லை.அவன் போதை தெளிச்ச
உடனே போய் விடுவான் என்றார்கள்.உடனே நான் ஏலே
கம்பு எடுடா,
ரெண்டு வெழுத்து வெழுத்தலாம்
என்றேன், பார்க்கலாம் - உடனே கண்ணை திறந்தான், அடுத்து நைசா எழுந்து
ஒரத்திலே போய் படுத்துக் கொண்டான்.
அப்போது தான் எங்க
ஆத்தா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது ஆடுற மாட்டை
ஆடி கறக்கனும்,பாடுற மாட்டை பாடி
கறக்கனும் என்பது.
குறிப்பாக அவன் படுத்து இருக்கும்
சாலை தேனி-மதுரை தேசிய
நெடுஞ்சாலை, அதிலும் அதிக அளவில் வாகனம்
செல்லும் சாலை இதில் ஒருவன்
படுத்து இருக்கான் அவனை கண்டுகொள்ளாமல் இருப்பது
தான் வேதனை.
இப்படியானவர்கள் அட்டுழியம் என்றைக்குத்தான் ஒழியுமோ தெரியவில்லை. இனி தேர்தல் நேரத்தில்
என்னவெல்லாம் இவங்களால நடக்கப்போகுதோ தெரியவில்லை.
தேர்தல் கமிஷன் கவனத்திற்கு
பிளாஸ்டிக் தடைசெஞ்சாங்க, விளம்பரத்தை தடைசெஞ்சங்க, எதை, ஏதையோ தடைசெஞ்சாங்க,
தேர்தல் நேரத்தில் இந்த டாஸ்மாக் கடையை
தடைவிதித்த நீங்க நல்லா இருப்பீங்க.
- ஆண்டிப்பட்டி பாண்டி
நன்றி : http://blog.dinamani.com/?p=3749
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...