Showing posts with label சிறப்பு மாவட்ட செயற்குழு. Show all posts
Showing posts with label சிறப்பு மாவட்ட செயற்குழு. Show all posts

Thursday, April 28, 2016

எழுச்சிமிகு தேர்தல் சிறப்பு கூட்டம்

           விருதுநகர் மாவட்ட சங்கம் சார்பாக 125 வது அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தோழர் சிவபெருமான் மற்றும் தோழியர் கீதா அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழா மற்றும் எழுச்சிமிகு தேர்தல் சிறப்பு கூட்டம் 27/04/2016 அன்று சிவகாசியில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் தேசிய கொடியை தோழியர் கீதா அவர்களும் நமது BSNLEU சங்க கொடியை தோழர் சிவபெருமானும், ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை அதன் கிளை செயலர் தோழர் ராமர் அவர்களும் விண்ணதிரும கோஷங்களுடன் ஏற்றினர்.

          மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க, மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்க உரை நிகழ்த்தினார்.


          சிறப்புரையாக நமது  மாநில தலைவரும் ,அனைத்திந்திய உதவி செயலருமான தோழர் செல்லப்பா சிறப்புரை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் NFTE சங்கம் BSNL ஊழியர்களுக்கு செய்த துரோகங்களையும், நமது சங்கம் தொடர்ந்து போராட்டம்   நடத்தியதின் விளைவாக இன்று வரை 1% பங்குகளை கூட விற்கமுடியாமல் 100% பொது துறையாக BSNL திகழ்கிறது என்பதையும், VRS மற்றும்  CRS திட்டங்களை  முறியடித்த சாதனையும், சென்ற  ஊதிய மாற்றத்தின் போது 30% ஊதிய உயர்வுக்கு நாம் 2 நாட்கள்  போராடிய போது, நமது போராட்டத்தை முறியடிக்க நிர்வாகத்தோடு கை கோர்த்து கொடுப்பதை கொடு நங்கள் வாங்கி கொள்கிறோம் என்று பிச்சைக்காரர்கள் ஆன அவலத்தையும், புன்னகையுடன் சேவை என்ற இயக்கத்தில் தங்களுடைய பங்களிப்பை செய்யாது அலட்சியப்படுத்திய செயலையும்,  சமீபத்திய  PLI உடன்பாட்டில் 2 இலக்க போனுசை ஒத்து கொண்ட கேவலத்தையும் சுட்டி காட்டினார்.


          நமது சங்கத்தோடு இணைந்து SNATTA, BSNLMS இணைந்து செயல்படுவதையும், பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை போன்ற இடங்களில் சேவா மாவட்ட அமைப்புகள்  நம்முடன்  இணைந்து   செயல்படுவதை வரவேற்று பேசினார். இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்ட சேவா சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் V.பரமேஸ்வரன், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் குருசாமி, தோழர் கேசவன் ஆகியோர் பங்கேற்றனர்.


          மாவட்டம் முழுவதும் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதன் பின் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் கீதா அவர்கள் மாவட்ட சங்கத்தால் கெளரவிக்கப்பட்டனர்.  இக் கூட்டத்திற்கான மண்டப செலவு மற்றும் காலை மற்றும் மதிய உணவு செலவை தோழர் சிவபெருமான் ஏற்று கொண்டதை அரங்கமே ஒட்டு  மொத்த கரவொலி எழுப்பி அவரை பாராட்டியது. நமது சங்கத்தின் மீது கொண்ட அளவறிய பற்றுதல் கொண்டு அளப்பரிய உதவி செய்த சிவபெருமான் - கீதா தம்பதியரை மாவட்ட சங்கம் தன நெஞ்சார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. அவர்களது பணி நிறைவு காலம் சிறக்க ஒட்டு மொத்த மாவட்ட சங்கம் தன் இதயபூர்வ வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறது.


          தோழர் சிவபெருமான் அனைத்திந்திய ,மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாய் வீதம் நன்கொடையை நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பாவிடம் வழங்கினார். நிகழ்வில் நமது முன்னாள் உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்கள் தனது JTO பதவி உயர்வை முன்னிட்டு அனைத்திந்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாய் வீதம் நன்கொடையை நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பாவிடம் வழங்கினார். அதே போல் நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சிவஞானம்  தனது பணி நிறைவை ஒட்டி அனைத்திந்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 500/- ரூபாய் வீதம் நன்கொடையை வழங்கினார். அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.




Tuesday, October 20, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

19/10/2015 அன்று மாலை விருதுநகர் மாவட்ட சிறப்பு  செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர்  தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கீழ் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன .
1. மாவட்ட மாநாட்டு நிதியை அனைத்து கிளைகளும் 2016 ஜனவரி மாதம் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க  வேண்டும் .
2. அடுத்த செயற்குழு கூட்டம் சாத்தூர் இல் 26/11/2015 அன்று நடைபெறும் .
3.தோழர் C வெங்கடேஷ் அவர்கள் JTO பதவி உயர்வு பெற்று பயிற்சிக்கு சென்று விட்டதால் அவர் வகித்த வொர்க் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு தோழர்  A சண்முககுமார் ,TTA அவர்களை நியமிப்பது என்றும் அவர் வகித்த மாவட்ட உதவி செயலர் பதவிக்கு ராஜபாளையம் தோழர் தியாகராஜன் ,STS அவர்களை தேர்வு செய்ய மாவட்ட செயற்குழு ஏகமனதாக முடிவு  செய்தது .
4. காலியாக கூடிய இடங்களுக்கு உபரியாக இருக்க கூடிய இடங்களில் இருந்து stay அடிப்படையில் மாறுதல்கள் போட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது .
5. நமது சங்கம் சார்பாக ரோடு ஷோ நடத்துவது அதில் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் அருப்புகோட்டையில் வரும் 23/10/2015 அன்று நடத்துவது .




 


Sunday, March 22, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

     BSNLEU அமைப்பு தினமான இன்று திருவில்லிபுத்தூர் நகரில் நமது பி எஸ்  என் எல்  ஊழியர் சங்கத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகளும் இச் செயற்குழுவில் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் . அருப்புகோட்டை மற்றும் விருதுநகர் பகுதியை சேர்ந்த ஒரு சிலரை  தவிர அனைத்து கிளை  சங்க நிர்வாகிகளும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் செயற்குழுவில் பங்கேற்றனர் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சமர்ப்பித்த அறிக்கையின் மீது அனைவரும் விவாதத்தில் பங்கேற்றனர் சிறப்புரையாக நமது மாநில உதவி செயலரும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர் முருகையா கலந்து கொண்டார் . கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக செய்து புதிய இலக்கான 30,000/- கையெழுத்துக்களை பொது மக்களிடம் பெற்று வரும் 28-03-15 குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க அவர் வலியுறுத்தினார் .ஒப்பந்த ஊழியர் சங்க சந்தா வசூலை வரும் 25-03-2015 குள் முடித்து மாநில மட்டத்துக்கு அனுப்ப வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .
செயற்குழு முடிவுகள் 
1.தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட மகாநாட்டு நிதி யாக ரூபாய் 20,000/ ஐ கிளை வாரியாக கீழ்கண்டவாறு வசூல் செய்து மாவட்ட சங்கத்திடம் வரும் ஏப்ரல்  மாதம் 20 ம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும் .
1. GM (O ) கிளை , விருதுநகர் -------- 3000
2. SDOP கிளை ,விருதுநகர்------------- 3000
3. SDOP  கிளை சிவகாசி ---------------- 3000
4.OCB  கிளை , சிவகாசி ----------------- 3000
5.சாத்தூர் கிளை --------------------------- 2000
6.அருப்புகோட்டை கிளை ----------- 2000
7. ராஜபாளையம் கிளை -------------- 2000
8.ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை ------------ 2000  
2. ஒப்பந்த ஊழியர் மாவட்ட மகாநாட்டை வரும் ஜூலை மாதம் நடத்துவது .அதற்கு முன்பாக அச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுவை விரைவில் நடத்துவது .
3. ஒப்பந்த ஊழியர் சம்பள  பிரச்சனைக்கு Labour Enforcement officer அவர்களுக்கு innovative நிறுவனம் Labour Enforcement officer  க்கு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றாததை நினைவூட்டி கடிதம் எழுதுவது .
4. மாவட்ட சங்க நிதியாக வரும் ஜூன் மாதம் உறுப்பினர்கள் அனைவரிடமும் ரூபாய் 100/- வசூல் செய்வது .
5.ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாட்டை குடும்ப விழாவாக வரும் மே மாதம் நடத்துவது  . 
6. லாங் ஸ்டே மாறுதலில் மாறுதல் கொள்கை அடிப்படையில் நிர்வாகம் அமல்படுத்த வலியுறுத்தி நமது சங்கம்  உறுதியாக இருப்பது .
7. 4 வருடம் பணி முடித்த அனைத்து கேடருக்கும் செக்சன்  மாறுதல்களை  வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அமல்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்துவது . 
8. கிளை கூட்டங்கள் நடத்தாத கிளைகள் உடனடியாக கிளை பொது குழுவை கூட்டுவது .
9. அனைத்து  கிளைகளிலும் நாளை சங்க கொடியை ஏற்றி  கொண்டாடுவது .
                     செயற்குழுவை சிறப்பாக நடத்திட உதவிகரமாகஇருந்த  ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை தோழர்கள் தோழர் சமுத்திரம் மற்றும் தங்கதுரை தலைமையை  மாவட்ட சங்கம் முழு மனதாக பாராட்டுகிறது .







Tuesday, March 17, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

வரும் 22-03-2015 அன்று சிறப்பு மாவட்ட செயற்குழு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மாலை 2.30 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .மாநில உதவி செயலர் தோழர் M முருகையா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார் .
ஆய்படு பொருள்  
1.லாங்  ஸ்டே மாறுதல் 
2. கையெழுத்து  இயக்கம் புதிய இலக்கு 
3.ஒப்பந்த ஊழியர் சந்தா வசூல் 
4.கிளை மாநாடுகள் 
5. செக்சன் மாறுதல்கள் 
6. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...