Tuesday, February 27, 2018
Sunday, February 11, 2018
Wednesday, February 7, 2018
தோழியர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் GM அலுவலக கிளை கூட்டம்
தோழியர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் GM அலுவலக கிளை கூட்டம் இன்று கிளை தலைவர் தோழர் சிங்காரவேலு தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து வரவேற்புரை நிகழ்த்த ,தோழர்கள் ஜெயக்குமார் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் சந்திர சேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர் .நிறைவுரையாக மாவட்ட செயலர் ரவீந்திரன் பேசினார் .பணி நிறைவு பெறும் தோழியர்கள் காளி மற்றும் முத்தம்மாள் அவர்கள் கிளை சங்கத்தால் கவுரவிக்கப்பட்டனர். நன்றியரை தோழர் மாரியப்பா நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது .
வள்ளல்களாய் மாறிய ராஜபாளையம் கிளை தோழர்கள்
மறைந்த தோழர் முத்துராமலிங்கம் நினைவாக 9 வது விருதுநகர் மாவட்ட மாநாட்டை ராஜபாளையம் மண்ணில் நடத்தவேண்டும் என்ற மாவட்ட சங்கத்தின் முடிவை ஏற்று கொண்ட ராஜபாளையம் கிளையின் பொது குழு கூட்டம் 06/02/2018 அன்று அதன் தலைவர் தோழர் R தியாகராஜன் தலைமையில் மிக அற்புதமாய் நடைபெற்றது . ஏராளமான தோழர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் R ஜெயகுமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் A சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் G வெள்ளை பிள்ளையார் ,அமைப்பு செயலர்கள் தோழர்கள் முருகன் ,அனவரதம் ,ராதாகிருஷ்ணன் ,ஒப்பந்த ஊழியர் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுசாமி ஆகியோர் பங்கேற்றனர் .மாவட்ட மாநாட்டு நிதியாக ஊழியர்கள் தங்கள் பங்களிப்பை சொல்ல வேண்டும் என்ற வேண்டுகோள் வந்த பின் ஒரு 5 நிமிட மௌனத்தை உடைத்து எறிந்து தோழர் பிச்சை அவர்கள் தனது பங்களிப்பாக ரூபாய் 5000 என்று சொன்னவுடன் 22 தோழர்கள் உடனடியாக தங்கள் பங்களிப்பை உற்சாகத்துடன் அறிவித்தனர் . கடையேழு வள்ளல்களை பற்றி கதை படித்த நமக்கு கண்ணெதிரில் 22 வள்ளல்களை பார்த்த நெகிழ்ச்சியை வார்த்தையால் வர்ணிக்க இயலாது .
தோழர் R தியாகராஜன் Rs .10,000
தோழர் N ,ராதாகிருஷ்ணன் Rs .10,000
தோழர் P .பிச்சை Rs 5,000
தோழர் R ராஜகோபால் Rs 5,000
தோழர் Tஅனவ்ரதம் Rs 5,000
தோழர் G வெள்ளை பிள்ளையார் Rs .5000
தோழர் K Rரவிச்சந்திரன் Rs 5000
தோழர் P .பொன்னுச்சாமி Rs 5000
தோழர் C .பொன்ராஜ் Rs 5000
தோழர் A மாரிமுத்து Rs 5000
தோழர் N ராமசந்திரன் Rs 5000
தோழர் N C கணேஷ் போஸ் Rs 5000
தோழர் G சுப்பையா Rs 5000
தோழர் G.காளிதாஸ் Rs 5000
தோழர் A .திருப்பதி Rs 5000
தோழர் N பிரபு Rs 5000
தோழர் I .முருகன் Rs 5011
தோழர் B .ரவிராஜா Rs 4000
தோழர் I.முருகேசன் Rs 2001
தோழியர் R செல்வாதேவி Rs 5000
தோழர் N அழகர்சாமி Rs 5000
தோழர் T .ராமர் .Rs 2000
நமது சங்கத்தின் மீது உள்ள நம்பிக்கையை ,பற்றை அந்ததோழர்கள் வெளிப்படுத்தியமைக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
வரவேற்பு குழு செயல் தலைவராக தோழர் வெள்ளை பிள்ளையாரும் ,வரவேற்பு குழு செயலராக தோழர் பொன்ராஜ் அவர்களும் ,பொருளார்ஆக தோழர் அனவரதம் அவர்களும் உதவி பொருளாளராக தோழர் முருகனும் தேர்நதெடுக்க பட்டனர் .
ஓடிப்போனவரின் ஒப்பாரி ராகம்
7 சரிபார்ப்பு தேர்தலில் 6 இல் வெற்றி பெற்று இரட்டை ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாபெரும் சங்கம் நமது BSNLEU .ஊழியர்கள் ,அதிகாரிகள் அனைவரையும் ஒற்றுமை சங்கிலியால் இணைத்து இந்த நிறுவனத்தை காப்பதற்கு தொடர்ந்து செயல்படும் சங்கம் நமது சங்கம் .நமது சங்கத்தில் immunity வசதியை அனுபவித்து கொண்டே நமது சங்கத்திற்கு எதிராக தொடர்ந்து உளவாளி பணி செய்ததை தனது கடமையாக கொண்ட இந்த நபர் தன் மீது நடவடிக்கை வந்துவிடும் என்று அஞ்சி தனது தாய் சங்கத்தில் இணைந்து விட்டார் .எதற்கு தெரியுமா ? தான் ட்ரான்ஸ்பர் செல்லாமல் தப்பிப்பதற்கு ! தில் இருந்தால் ஓடிப்போன சங்கத்தில் மாவட்ட பொறுப்பு ஏற்காமல் இருந்து பார்க்கட்டும்? இந்த நபர் தப்பிப்பதற்கு பாவம் அந்த சங்கத்தின் அப்பாவி யாரோ பலியாடாவது நிச்சயம். துட்டு கொடுத்து பதவி வாங்கும் இவர்களால் எப்படி ஊழியர்களை பாதுகாக்க முடியும்? எத்தனை கரங்கள் வந்தாலும் அது இணைத்து வந்தாலும், இணையாது வந்தாலும் இந்த ஆதவனை (BSNLEU) மறைக்க எவனாலும் முடியாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் இது போன்ற நபர்களால் நமது மாவட்டத்தில் ஒற்றுமை சிதையும் போக்கு இருப்பதை புரிந்து கொண்டவர்கள் புரிந்தால் சரி.
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை” - கலைமாமணி முத்துக்கூத்தன்.
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை” - கலைமாமணி முத்துக்கூத்தன்.
விமர்சனம் என்பது ஒரு வழி பாதை அல்ல .
Monday, February 5, 2018
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...