அன்புத் தோழர்களுக்கு நமக்கான இணைய தளங்களில் ESS - ERP - Login இணைக்கப்பட்டுள்ளது. myhr தளத்தைப் பயன்படுத்தியதுபோல் இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Showing posts with label கிளைச் செயலர்களுக்கு.... Show all posts
Showing posts with label கிளைச் செயலர்களுக்கு.... Show all posts
Monday, February 2, 2015
Friday, September 19, 2014
உறுதியான போராட்டத்தால் உத்தரவாதமான வேலை
தொலைத் தொடர்புத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 140 தொழிலாளர்களை வேலூர் மாவட்ட நிர்வாகம் 1.8.2014 முதல் பணி நீக்கம் செய்தது. அதாவது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால் கொத்தடிமைகள் என்றும் அவர்களின் வயிற்றில் அடிக்கவும் தயங்கமாட்டோம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் செயல்பட்டது.தாக்குண்டால் மண் புழுவும் துள்ளி எழும். நாங்கள் சாக்கடை புழுக்களல்ல. சரித்திரத்தின் சக்கரங்கள்' எனக்கூறி வேலை நீக்கம் செய்யப்பட்ட அன்றைய தினத்தில் இருந்து 7 நாட்கள் வேலூரில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர் ஒப்பந்த தொழிலாளர்கள்.நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆதரவு போராட்டம் நடத்தினர். அப்போதும் அசைவு இல்லை. நிரந்தர தொழிலாளர்களும் ஆதரவு கரம் நீட்டினர். ஆனால், நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனையை ஊழியர் சங்கம் கையில் எடுக்கக்கூடாது எனவும் கடிதம் கொடுத்து மிரட்டிப் பார்த்தது..பிஎஸ்என்எல் நிர்வாகம் கொடுத்த கடிதத்தை நிராகரித்த பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், டிஎன்டிசிடபுள்யு சங்கமும் திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்துவோம் என்று அறிவித்தது.அதன்படி செப். 15 அன்று சென்னை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சி. செல்லப்பா, உதவி செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், டிஎன்டிசிடபுள்யு மாநிலத் தலைவர் எம். முருகையா, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார் ஆகியோர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து ஏராளமான ஊழியர்கள் வந்திருந்தனர். இப்போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், ஏஐபிஎஸ்என்எல்இஏ அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகலத் ராய், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் புனிதா உதயகுமார், கோவிந்தராஜ், காசி,கோபிநாதன்,சி.கே. நரசிம்மன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே வந்தது. இதனையடுத்து, 3ம் நாள் போராட்டத்திற்கு பிறகு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பிஎஸ்என்எல் முதன்மைபொது மேலாளர் ஜி.வி.ரெட்டியுடன் நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநிலநிர்வாகம் வேலூர் மாவட்டத்தில் பணியில் இருந்துநீக்கப்பட்டதில் 85 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிக்கு எடுத்துக்கொண்டது. மீதமுள்ள தொழிலாளர்களையும் மிக விரைவில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிக்கு எடுத்துக்கொள்ளவும் உறுதியளித்தது.இத்தோடு, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீராக ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனையை கையாளப்படும் என்றும் நிர்வாகம் உறுதி கொடுத்தது.இந்த மகத்தான வெற்றிக்கு ஊழியர் சங்கங்களின் துணையும் சரியான நேரத்தில் போராட்டத்தை சரியாக நடத்தியது தான் காரணம். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சி. செல்லப்பா நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
நன்றி :- தீக்கதிர்
நன்றி :- தீக்கதிர்
Saturday, September 6, 2014
Thursday, September 4, 2014
அருப்புகோட்டை அனர்த்தம்
அருப்புகோட்டை பகுதியில் எழுத்தர் கேடரில் சுழல் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட பொது மேலாளரிடம் பல முறை மாவட்ட சங்கம் பேசியுள்ளது .மாநில தலைமை பொது மேலாளர் எந்த மாறுதல் உத்தரவையும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைமுறை படுத்த கூடாது என கூறியுள்ளதால் உங்கள் "Grievance " என்ன என்பதை கூறுங்கள்..அதை நடைமுறைப்படுத்துகிறேன் என்று கூறிய மாவட்ட பொது மேலாளர் அவர்கள் தற்போது 1 மாத அவகாசம் கேட்டுள்ளார் .நேற்று நடைபெற்ற பேட்டியின் போது கீழ்க்கண்ட கருத்துக்களை நாம் கூறியுள்ளோம் .
1.அருப்புகோட்டையில் எழுத்தர் கேடரில் சுழல் மாற்றம் செய்யும் போது சுழல் மாற்றல் நடைபெறாத அனைத்து ஊர்களிலும் அதை நடைமுறைப்படுத்த நமது சங்கம் ஒத்து கொண்டது .
2.அதை அமல்படுத்த தாமதமாகும் பட்சத்தில் நமது சங்க "Grievance " ஐ அமல்படுத்தப்படும்போது NFTE சங்கத்தின் "Grievance " இருந்தால் அதையும் செட்டில் செய்ய நாம் ஒத்து கொண்டோம் .
3.சென்ற ஆண்டு ஒரு ஊழியர்க்கு மாவட்ட நிர்வாகத்தால் போடப்பட்ட மாறுதல் உத்தரவு இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதை பொது மேலாளரிடம் சுட்டி காட்டிய போது அதை அமல்படுத்தாத அருப்புகோட்டை கோட்ட பொறியாளரிடம் விளக்கம் கேட்டு உடனடியாக கடிதம் எழுத உத்தரவு இட்டுள்ளார் .
4. CSC அருப்புகோட்டையில் ஒரு ஊழியர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஒரே சீட்டை பார்க்க கூடிய விசயத்தை பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
5.DE லெவலில் முடியக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தட்டி கழித்து மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு அனுப்புகின்ற DE ,அருப்புகோட்டை அவர்களின் போக்கை பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
Thursday, July 24, 2014
போராட்டம்
புவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது. நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஜ்கோட் மத்திய செயற்குழு பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது .அந்த அடிப்படையில் தற்போது போராட்ட அறைகூவல் விடப்பட்டுள்ளது .
26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம்
25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி
15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி
பிரச்சனைகள் தீராவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் வரும் டிசம்பர் மாதம் நடத்த உள்ளது .
Monday, July 21, 2014
மத்திய செயலக முடிவுகள்
1.பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் இணைப்பை பொறுத்தவரை,எம்டிஎன்எல் நிறுவனத்தின் பங்குகள் விலக்கபட்ட பிரச்னை , அந்த நிறுவனத்தின் கடன் சுமை , மற்றும் HR பிரச்னை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் இணைப்பை ஏற்று கொள்ள முடியாது .
2. நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்காக கூட்டு போராட்ட குழு சார்பாக நடைபெற 07-08-2014 அன்று நடைபெற உள்ள ஆர்பாட்டத்தை பேட்ஜ் அணிந்து மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் மிகுந்த சக்தியுடன் நடத்த வேண்டும் . JAC அமைப்பை மாநில மற்றும் மாவட்ட அளவில் உருவாக்கி அனைத்து NON EXECUTIVE சங்கங்களை அதில் இணைத்து வலிமைப்படுத்தவேண்டும் .
3. புதிய தாராளமய கொள்கை மற்றும் வகுப்பு நல்லிணக்கம் மற்றும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு சில மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களிலும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றதை மத்திய செயலக கூட்டம் பாராட்டியது . இம் முயற்சி மாவட்ட மட்டங்களிலும் தொடரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது .
4. ஸ்டோர் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை விஷயமாக மாநில செயலர்கள் மாவட்ட செயலர்களிடம் விபரங்களை சேகரித்து அதை மாநில தலைமை பொது மேலாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அதன் நகலை மத்திய சங்கத்திடம் சமர்பிக்க வேண்டும்.
5. நமது அனைத்திந்திய மகாநாடு வரும் நவம்பர் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . அனுமதிக்கப்பட்ட சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே மகாநாட்டில் அனுமதிக்கப்படுவர் .
6. ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின் படி பி எஸ் என் எல் காசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர் சம்மேளனம் உருவாக்கப்படாத மாநிலங்களில் உடனடியாக அதை உருவாக்க வேண்டும் .
7. அக்டோபர் 3 ஆம் தேதி சர்வதேச நடவடிக்கை தினத்தை வேலையின்மை எதிர்ப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் .
8. டிசம்பர் 11 ஆம் தேதி தொழிலாளி வர்க்கத்தின் தலைவர் தோழர் K.G. போஸ்.அவர்களின் நினைவு நாளை பொருத்தமான முறையில் அனுஷ்டிக்க வேண்டும் .
9. ஏப்ரல் 7,8 தேதிகளில் டெல்லியில் K .G .போஸ் நினைவு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற தொழிற்சங்க வகுப்பு மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது என அதில் பங்கேற்ற அனைவரும் கூறியதை மத்திய செயலக கூட்டம் நினைவு கூர்ந்த்து .
ஒரு நல்ல செய்தி
நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையான TSM சேவையை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்பதை கார்போரேட் அலுவலகம் ஏற்று கொண்டு உத்தரவை வெளியிட்டு விட்டது .இவ் உத்தரவு படி சர்வீஸ் புக் மற்றும் HRMS இல் TSM சேவை பதிவு செய்யப்படும்.பணி ஓய்வு பெறும் போது பென்ஷன் கணக்கிடுவதில் TSM சேவையில் 50% எடுத்து கொள்ளப்படும் .உத்தரவு படிக்க :-Click Here
Monday, July 14, 2014
ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை
கேபிள் மற்றும் ஹவுஸ் கீபிங் பகுதியில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் பட்டுவாடா ஆகாமல் உள்ளதை இன்று நமது சங்கம் துணை பொது மேலாளர் அவர்களை சந்தித்து கடுமையாக சுட்டி காட்டியது . மாநில மட்டத்தில் வரும் உத்தரவுகளை ஒப்பந்தகாரர்கள் மதிப்பது இல்லை .உரிய தேதியில் அவர்கள் சம்பளத்தை வழங்க மறுக்கும் போது மாவட்ட நிர்வாகமே சம்பளத்தை பட்டுவாடா செய்யவேண்டும் என நாம் கூறியபிறகு மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சம்பளத்தை வழங்க நிர்பந்தம் செய்த பிறகு இன்று மாலை கேபிள் பகுதிக்கு மட்டும் சம்பளம் பட்டுவாடா அதுவும் ரூபாய் 1000/- குறைவாக ஆகி உள்ளது .இவ் விஷயம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹவுஸ் கீபிங் பகுதியில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாளை சம்பளம் பட்டுவாடா ஆக வில்லையெனில் 16-07-2014 அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
Monday, June 30, 2014
சிறப்புமிகு சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம்
சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் 30-06-2014 அன்று சிவகாசி தொலை பேசி நிலைய வளாகத்தில் தோழர்கள் அழகுராஜ் மற்றும் முனீஸ்வரன் கூட்டு தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது . விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவை 30-08-2014 அன்று சிவகாசியில் நடத்துவது. சிறப்புரையாக தோழர் V வெங்கட்ராமன் , மாநில துணை தலைவர் , தோழியர் V P இந்திரா , மாநில உதவி செயலர் , தோழர் லக்ஷ்மண பெருமாள் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியோரை அழைப்பது என முடிவு எடுக்கப்பட்டது .இதற்கு மாநில செயலரின் ஒப்புதலும் பெறப்பட்டது . மாநில செயற்குழு முடிவுகளையும் , விளக்கி மாவட்ட செயலர் விரிவாக பேசினார் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் ஸ்தல மட்ட பிரச்சனைகளை நாம் கையாண்ட விதம் பற்றி எடுத்துரைத்தார் . பிரச்சனைகளை தோழர் ராஜு ,ராஜையா , செல்வராஜூ ஆகியோர் எடுத்துரைத்தனர் . தோழர் இன்பராஜ் நன்றி கூற பொதுக்குழு கூட்டம் முடிந்தது .
Sunday, May 4, 2014
மாவட்ட செயற்குழு
வருகின்ற 13-05-2014 செவ்வாய் கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகாசியில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆய்படு பொருள் :-
1. ஸ்தல மட்ட பிரச்சனைகள்
2.அனைத்திந்திய மாநாட்டு சார்பாளர் தேர்வு
3. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற .
Monday, April 21, 2014
கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு
அன்பார்ந்த தோழர்களே !
நாம் நடத்திய பல்வேறு செயற்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் மே மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் கேரள மாநிலத்துக்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக ஒரு குடும்ப சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கொச்சின் ,அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி ,குருவாயூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல தனி நபர் கட்டணமாக ரூபாய் 1000/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .தங்கும் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 50/- தனியாக கட்டவேண்டும் .குழந்தைகளுக்கு என்று அரை கட்டணம் கிடையாது .14-05-2014 அன்று இரவு ஒரு சிறப்பு பேச்சாளரின் உரை வீச்சு நடைபெறும் .மாவட்ட சங்கம் சார்பாக போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும் ஏற்பாடு உண்டு .அனைத்து கிளை செயலர்களும் வரும் மே 1 தேதிக்குள் ஒவ்வொரு கிளையிலும் எத்துனை பேர் கலந்து கொள்கிறனர் என்ற விபரத்தை மாவட்ட சங்கத்திடம் கூறி விட வேண்டும் . வரும் நபர்களுக்கான தொகையை மே 5 தேதிக்குள் செலுத்திவிடவேண்டும் .
Tuesday, March 25, 2014
பி எஸ் என் எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விரிவடைந்த செயற்குழுவில் உருவாக்கப்பட்ட பி எஸ் என் எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, விருதுநகர் மாவட்ட அமைப்பு 25-03-2014 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மறு சீரமைக்கப் பட்டுள்ளது .கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
மாவட்ட தலைவர் :- தோழியர் பகவதி ,STSO ,ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தலைவர்கள்:- 1.தோழியர் .ஜான்சிராணி ,STSO ,சிவகாசி
2. தோழியர் .R .சுசீலா ,TSO ,விருதுநகர்
3.தோழியர் செல்வாதேவி ,ராஜை
4.தோழியர் .கீதா ,STSO ,
கன்வீனர் :- தோழியர் .N .மங்கையர்க்கரசி ,STS ,VR
உதவி கன்வீனர்கள் :- 1.தோழியர் ஆலிஸ் ,STS . A P K
2.தோழியர் G .தனலட்சுமி ,TSO ,VR
3.தோழியர் த .பாண்டியம்மாள் ,VR
4.தோழியர் R .ஜோதி
பொருளாளர் :- தோழியர் .S .பாண்டிசெல்வி ,VR
உதவி பொருளாளர் :- தோழியர் ச.தனலட்சுமி ,TSO .STU
முடிவுகள் :-
1. 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துவது .
2.மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு விரிவடைந்த செயற்குழுவை நடத்துவது .
3.நிரந்தர ஊழிய்ரகளிடம் மாதம் ரூபாய் 20/- சந்தாவாகவும் ,ஒப்பந்த ஊழியர்களிடம் ரூபாய் 10/- சந்தாவாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது .
4.அதிகாரிகள் உட்பட அனைவரையும் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவில் இணைக்க நிர்வாகிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது .
Monday, March 24, 2014
மாவட்ட செயற்குழு
வருகின்ற 29-03-2014 சனிக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்ட சங்க அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆய்படு பொருள் :-
1. மாவட்ட மாநாட்டு கணக்கு ஒப்படைப்பது 2. சென்னை சொசைட்டி தேர்தல்
3. ராஜ்கோட் மத்திய செயற்குழு முடிவுகளை செயல்படுத்துவது .
4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற .
Saturday, February 22, 2014
பொதுச் செயலர்களுக்குக் கடிதம்
ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி தீர்வுகாணப்படாத நீண்டகாலப் பிரச்சனைகளுக்கான ஒருங்கிணைந்த போராட்டத்தை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து Non-Executive தொழிற்சங்கப் பொதுச் செயலர்களுக்கும் நமது பொதுச் செயலர் கடிதம் எழுதி உள்ளார்.
18/10/2013 உடன்பாடு தொடர்பாக
Non-Executive ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக 18.10.2013 அன்று ஏற்பட்ட உடன்பாட்டின் முடிவுகளை செயல்படுத்தக் கோரி மத்திய சங்கம் (17/02/2014) மனிதவள இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளது.
டெலிகாம் மெக்கானிக் தேர்வும் கல்வித் தகுதியும்
டெலிகாம் மெக்கானிக் LDCE தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி என்றிருப்பதை ஒருமுறை தளர்த்திக் கொள்ளக்கோரி மத்திய சங்கம் (17/02/2014) மனிதவள இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளது.
Friday, February 7, 2014
மாவட்ட செயற்குழு
வருகின்ற 25-02-2014 செவ்வாய்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் அருப்புகோட்டையில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.
ஆய்படு பொருள் :-
1. ஆண்டறிக்கை /நிதி நிலை அறிக்கை சமர்பித்தல்
2.மாவட்ட மாநாடு தயாரிப்பு பணிகள்
3.கிளைகள் அனைத்தும் நன்கொடை வசூலை இறுதி செய்து கணக்கை ஒப்படைப்பது .4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
ஆய்படு பொருள் :-
1. ஆண்டறிக்கை /நிதி நிலை அறிக்கை சமர்பித்தல்
2.மாவட்ட மாநாடு தயாரிப்பு பணிகள்
3.கிளைகள் அனைத்தும் நன்கொடை வசூலை இறுதி செய்து கணக்கை ஒப்படைப்பது .4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
Thursday, November 14, 2013
கிளைச் செயலர்களுக்கு...
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு பணியாளர் விசயங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகளின் பிரதிகளை கொடுக்க வேண்டும் என கார்போரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது .உத்தரவு பார்க்க :- Click Here
Tuesday, November 12, 2013
Sunday, October 20, 2013
ஒப்பந்த ஊழியர்களின் ராஜபாளையம் கிளை மாநாடு
ஒப்பந்த ஊழியர்களின் ராஜபாளையம் கிளை மாநாடு 20-102-2013 அன்று தோழர் அனவரதம் மற்றும் கணேசன் அவர்களின் கூட்டு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர் வேல்சாமி அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க , மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் கிளை மகாநாட்டை முறையாக தொடக்கி வைத்து உரை ஆற்றினார் .அமைப்பை பலப்படுத்துவது , சம்பள பிரச்னை , போனஸ் பிரச்னை , EPF/ESI பிரச்சனைகளை எதிர்கொள்வதை பற்றி விரிவாக பேசினார் . ராஜை BSNLEU கிளை செயலர் தோழர் த .முத்துராமலிங்கம் அவர்கள் ஸ்தல மட்டங்களில் நமது ஒத்துழைப்பை பற்றி பேசினார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசும் போது ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு BSNLEU மாவட்ட சங்கம் தன முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும் , ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காத போது நிர்வாகமே சம்பளம் வழங்கிய நிகழ்வுக்கு மாநிலத்திலேயே நமது மாவட்ட சங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பதை நினைவு கூர்ந்தார்.நாகர்கோயில் ஒப்பந்த ஊழியர் மாநில மகாநாட்டில் பெரும் திரளாய் கலந்து கொண்ட தோழர்களுக்கு பாராட்டை தெரிவித்தார் . இணைந்த கிளையாய் இருந்த ராஜபாளையம் கிளை , தனி தனி கிளைகளாய் பிரிக்கப்பட்டது .
ராஜபாளையம் கிளைக்கு தோழர்கள் அனவரதம் , அழகர்சாமி , கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் தங்கதுரை , பாண்டியன்,மாயாண்டி ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.புதிய செயலர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
ராஜபாளையம் கிளைக்கு தோழர்கள் அனவரதம் , அழகர்சாமி , கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் தங்கதுரை , பாண்டியன்,மாயாண்டி ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.புதிய செயலர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...








