Tuesday, January 29, 2013

விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் கருத்தரங்கம்

நிகழ்ச்சி நிரல்
நாள் :- 08-02-2013
இடம் :-அருணாசலம் வள்ளியம்மாள்  திருமண மண்டபம் 
(தேரடி அருகில் ) ஸ்ரீவில்லிபுத்தூர் 

தலைமை :- தோழர் A .சமுத்திரகனி,
மாவட்ட தலைவர், BSNLEU 

சங்கக் கொடி ஏற்றம் :- தோழர்.K. .புளுகாண்டிமாவட்ட துணை தலைவர் 

வரவேற்புரை :- தோழர் L .தங்கதுரைகிளை செயலர், SVR 

அஞ்சலி :- தோழர் M .முத்துசாமிமாவட்ட உதவி செயலர் 

துவக்க உரை :- S .ரவீந்திரன்மாவட்ட செயலர் BSNLEU 

வாழ்த்துரை :-  தோழியர் P .இந்திராஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு 

                தோழர் M .பெருமாள்சாமிமாவட்ட உதவி செயலர் 

திரு. T. ராதாகிருஷ்ணன், AIBSNLEA 
S. செல்வராஜ், SNEA (I )

சிறப்புரை :- S .செல்லப்பாமாநிலச்செயலர்  
சேவை கருத்தரங்கம் 

தொடங்கி வைப்பவர் :- தோழர் .A .கண்ணன், TTA 

பங்கேற்போர் :- திரு. B.V.பாலசுப்ரமணியா, ITS பொது மேலாளர், BSNL 

திரு. ராதாகிருஷ்ணன், DGM 

திரு .தனுஷ்கோடி, AGM (ADMN ) 

திரு பாண்டியன், DGM (Fin )

திரு S. ஆள்வார்சாமி, CAO (FIN )

திரு I .சுந்தரராஜ், DE (Mtce )

தோழர் .வெங்கடேஷ், TTA 

நன்றியுரை :- S .வெங்கடப்பன் ,மாவட்ட பொருளர்
திருவில்லி புத்தூர் கிளை  மாநாடு 

துவக்க உரை :- C.பழனிசாமி, மாநில உதவி  செயலர், BSNLEU 

வாழ்த்துரை :- திரு P .கோவிந்தராஜன், SDOT, SVR

I.R. கணேசன், CITU, SVR 

ஆண்டறிக்கைவரவு செலவுஅமைப்பு நிலைதீர்மானம்புதிய நிர்வாகிகள் தேர்வு 

நன்றியுரை :- G .வெங்கடசாமிகிளை பொருளர்

இவண் :-
அனைவரும் வாரீர்

சந்திப்பு

இன்று நமது அனைத்து இந்திய தலைவர் தோழர் .நம்பூதிரி அவர்கள் மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் தோழர் .பாசுதேவ் ஆச்சார்யா அவர்களுடன் உத்தர பிரதேச மாநில தலைமை செயலர் மற்றும் மாண்புமிகு  உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு .அகிலேஷ் யாதவ் அவர்களை சந்தித்து காசியாபாத் மாவட்ட செயலர் தோழர் சுகேந்தர் பால் சிங்கை  கொலை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலி  உறுத்தினர். நம் தலைவர்கள் கூறியதை கவனமுடன் கேட்ட உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு .அகிலேஷ் யாதவ் உரிய நடவடிக்கை கொலை குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் என உறுதி அளித்தார் . 

Monday, January 28, 2013

மிஸ்டு கால்' மகிமை


மொபைல் போன்கள் மூலம் பிறருக்கு, "மிஸ்டு கால்' அழைப்பு கொடுப்பதன் மூலம், 500 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது."மிஸ்டு கால்' என்ற வார்த்தையே பலருக்கு, வேம்பாக கசக்கும். அழைத்து பேசினால், காசு வீணாக போய்விடும் என நினைத்து, "மிஸ்ட் கால்' கொடுத்து, பேசும் சிக்கன நபர்கள் ஏராளமாக உள்ளனர். அத்தகைய நபர்களின் அழைப்புகளை ஏற்க, தயக்கம் காட்டுபவர்களும் உண்டு."மிஸ்டு கால்' கொடுப்பவர்களின் மனநிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கிறது.இந்த புதிய முறை, 2011ம் ஆண்டில் தான் இந்தியாவில் பரவலானது. லோக்பால் மசோதா கோரி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே மேற்கொண்ட போராட்டங்களுக்கு ஆதரவாக, "மிஸ்டு கால்' கொடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர்."மொபைல் போன்களில் முறையான அழைப்பு அளித்தால் பணம் செலவாகும்; "மிஸ்டு கால்' அழைப்புக்கு பணம் செலவாகாது' என்பதால், ஏராளமானோர், "மிஸ்டு கால்' கொடுத்தனர். 6 மாதங்களில், 2.5 கோடி பேர், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு, "மிஸ்டு கால்' மூலம் ஆதரவு அளித்தனர்.இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்களும், தங்கள் பொருட்களை விளம்பரபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் கருத்தை அறியவும், "மிஸ்டு கால்' முறையை பின்பற்ற துவங்கி விட்டன.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட எண்ணுக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்கள் கணக்கில் உள்ள பணம் விவரம், மொபைல் போனில் கிடைக்கும்.பெரிய பன்னாட்டு நிறுவனங்களான, எச்.யு.எல்., மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களும், "மிஸ்ட் கால்' மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கின்றன.மராத்தி மொழி நாளிதழ் ஒன்று, தன் சந்தாதாரர்களுக்கு, மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளது. அந்த எண்ணுக்கு, "மிஸ்ட் கால்' கொடுத்தால், மாத சந்தா விவரம், மொபைல் போனுக்கு வந்து விடும்.பிரபல சினிமா தியேட்டர் நிறுவனத்துக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், டிக்கெட் விவரம் தெரிய வருகிறது. விமான நிறுவனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், "மிஸ்ட் கால்' மூலம், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு சில கோடி ரூபாய் அளவிற்கு இருந்த, "மிஸ்டு கால்' வர்த்தகம், இப்போது, 500 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.   

                                                                                                                                                                                     நன்றி :- தினமலர் 

Saturday, January 26, 2013

VRS will neither help BSNL, Country, nor the Workers.


After a lapse of silence for some time, the BSNL Management seems to focus attention on the issue of VRS once again. It is reported in some papers today quoting some top management officers that VRS is urgently required to save the BSNL and reduce the expenditure on salary, which is about 46% to 48%. It is also stated that the workers lack technical knowledge and are aged, hence they should be retrenched through VRS. Let us see how much sincerity and facts are involved in the above arguments focused in the reports.


1. 46-48% of the revenue/expenditure is to pay the salary, is one argument. The % has increased, not because the number of workers has increased but due to the fact that the revenue of the company has gone down for which the main responsibility lies upon the management. When there were more than 3.5 lakh workers some 6-7 years back, the % of salary to the total revenue/expenditure was less, since the revenue was about Rs. 40,000 crore. The main reason for the % of salary increasing is because the revenue decreased to about Rs. 27,000 crore in the last few years. Management is fully responsible for the same and not the workers.

2. Aging is a natural phenomena and the workforce recruited 20-25 years back will naturally be above 45-50 years. They have worked dedicatory all these years and have increased the wealth of the DOT/BSNL. With regarding to their technical capability, despite the unions continuously demanding, training and retraining were not given to them as required. While top level officers were deputed to ALTTC, BRBRAITT, RTTC etc. for continued and regular refreshment courses, the non-executives were mostly discriminated. And now what right has got the management to state that they are not technically capable? If the BSNL management had got common sense and business culture, it would have trained all the staff to enable them to work effectively. The complete fault lies upon the management.

3. Whether VRS will help any company to save itself? The answer is a clear NO. MTNL has implemented VRS 2-3 times. What is the present situation? The services have become worse due to shortage of staff. What happened to the Nationalized Banks which implemented the VRS ‘effectively’? Due to acute shortage of staff after the VRS, the customers have been suffering and have to wait a long period at the bank counters. And the Bank managements have now been compelled to recruit more than 70,000 employees this year. As can be seen from these experiences VRS will only weaken the BSNL.
4. According to BSNL Management about Rs.18,000 crore is required to implement VRS for retrenching about one lakh workers, which is the target. Where is this huge sum for VRS? BSNL do not have the funds. Government is reluctant to give. It is reported that when the Management approached the Banks for loan, instead of Rs. 18,000 crore, they are willing to loan only Rs.1,000 crore or so. Why the management wants to take loan for VRS and why not for the development and expansion of the services? The approach of the management is completely negative and anti-worker.
5. VRS is a big loss to the workers. If they continue in service, every year they will getting 3% increment, promotion as per the Promotion Policy, there will be a wage revision, and the pension will be almost double if he/she retires after superannuation compared to the Voluntary retirement now.

These are only some of the issues to be considered. Earlier three times the management had tried to implement VRS, but due to the strong opposition from the Unions, especially BSNLEU, the decisions had to be dropped. The present move also will face the same fate, since the proposal is not in the interest of the BSNL, customers, the workers or the country. It is only part of the neo-liberal policy of the government which wants the PSUs to be disinvested and privatised. The slogan raised by the first Prime minister of the country Pandit Jawaharlal Nehru that ‘ the Public Sector Units are the Modern temples of India’ is being changed by the present rulers in to that ‘ the PSUs are the new cemeteries of the neo-liberal period’.

All the unions should together fight this attack of VRS and defeat it once again in the interest of the workers, BSNL and the country.

Thursday, January 24, 2013

மீண்டும் போராட்டம்

           78.2 சத பஞ்சப்படி இணைப்பு DOT நிர்வாகம் தொடர்ந்து தாமதம் செய்வதை கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பாக கீழ் கண்ட போராட்ட அறைகூவல் விடப்பட்டுள்ளது.
           வரும் ஜனவரி மாதம் 28 முதல் 30 ஆம் தேதிக்குள் அனைத்து சங்க மாவட்ட செயலர்களும் நமது துறை அமைச்சர் மற்றும் CMD அவர்களுக்கு SAVINGRAM அனுப்புவது.
           11-02-2013 அன்று ஆர்ப்பாட்டம்
           15-02-2013 அன்று மாவட்ட அளவில் தர்ணா
           போராட தயாரிப்பு பணிகளில் இறங்கிடுவோம்.

குடியரசு தின வாழ்த்துக்கள்

BSNL விருதுநகர் மாவட்டச்சங்கத்தின் 63ஆவது குடியரசுதின நல்வாழ்த்துகள்

SNEAI சங்கத்தின் மாவட்ட மாநாடு



          கடந்த 21-01-2013 அன்று SNEAI சங்கத்தின் மாவட்ட மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. நமது BSNLEU  மாவட்டச்சங்கம் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் S.ரவீந்திரன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். SDOP  கிளைச் செயலர் தோழர் சந்திரசேகரன் மற்றும் தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட உதவிச் செயலர் ஆகியோரும் கலந்துகொண்டனர். புதிய SNEAI மாவட்டச் செயலராக தேர்ந்து எடுக்கப்பட்ட திரு .செல்வராஜ் SDE அவர்களுக்கு நமது இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.

Wednesday, January 23, 2013

Joint Forum தலைவர்களின் அமைச்சருடனான சந்திப்பு...

           BSNL/NTNL Joint Forumன் சங்கத் தலைவர்கள் 2013 ஜனவரி 22 அன்று மத்திய அமைச்சர் திருமிகு ஜிதேந்தர் சிங் அவர்களைச் சந்தித்து BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகள் விஷயத்தில் விரைவில் தீர்வு காண வலியுறுத்தினார்கள். தோழர்களின் கருத்துக்களை கவனமாகக் கேட்ட அமைச்சர் தொலைத்தொடரவு அமைச்சரின் கவனத்திற்கு இந்தத் தகவல்களை அவசியம் கொண்டு செல்வதாக உறுதி கூறினார். அமைச்சருடனான சந்திப்பில் தோழர் M.K. பக்க்ஷி, தோழர் V.A.N.நம்பூதிரி மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

காவிரிக்கரையில் கரை கடந்த உற்சாகம்

கலந்து கொண்ட தோழர்கள்
          நமது BSNLEU சங்கத்தின் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 22-01-2013 அன்று திருச்சி மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 தோழர்கள்வரை கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள மொத்தம் 239 கிளைச்செயலர்களில் 221 பேர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும். தேசியக்கொடியை மாநிலத் தலைவர் தோழர் M.மாரிமுத்து ஏற்றி வைக்க, நமது சங்கக்கொடியை அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தார்.

பொதுச்செயலாளர் தோழர் அபிமன்யு

        விவாதத்திற்கான குறிப்புகளைச் சமர்பித்து மாநிலச்செயலர் தோழர் S.செல்லப்பா உரை நிகழ்த்தினார். அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு மாறியுள்ள சூழ்நிலையில் புதிய அங்கீகார விதிகளின் அவசியம் பற்றியும் ,BSNL நிறுவனத்திற்கு எதிரான அரசின் கொள்கைகள் பற்றியும், வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மாநில செயற்குழுவில் நமது மாவட்டத்தில் இருந்து 38 தோழர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் சார்பாக அருப்புக்கோட்டை கிளைச்செயலர் தோழர் R ஜெயக்குமார் விவாதக்குறிப்புகள் மீதான உரையை முன்வைத்தார். நமது மாவட்டம் சார்பாக அகில இந்திய சங்க கட்டிட நிதியாக ரூ.25,000/- வழங்கப்பட்டது.
மாநிலச் செயலர் தோழர் செல்லப்பா

மாநிலத் தலைவர் தோழர் மாரிமுத்து









Friday, January 18, 2013

பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டை காடாகும் குடி நீர்

          உலகமயமாதலின் விளைவாக இயற்கை வளங்கள் யாவும் முதலாளிகளின் லாப வேட் டைக்கு பலியாகியுள்ளன. இன்று நீர் பல கோடி டாலர்கள் புழங்கும் பெரிய வர்த்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிக அதிகலாபம் ஈட்டும் துறை என்று கூறப்படுவ தால் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அதில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளன.நீர் தனியார் மயமாவதால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். வடக்கே கங்கை, தெற்கே காவிரி, பவானி, சிறுவாணி, தாமிரபரணி என இந்திய ஆறுகளின் மீது பன்னாட்டுநீர் வணிகர்களின் கண் பார்வை விழுந்து வெகு நாட்களாகிவிட்டன. நமது ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணை களின் நீரை பன்னாட்டு நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்துக் கொள்ளை லாபமடிக்கின்றனர்.

          இந்தியாவில் நீரை தனியார் மயமாக்கிய திட்டம் முதன் முதலில் சத்தீஸ்கரில் தான் அமல்படுத்தப்பட்டது. தில்லி நகருக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யவே, இந்த ஒப்பந்தம் என்று தெரிவிக்கப்பட்டது. கங்கை நீரை சுத்தப்படுத்தும் பணியை வேறு யாரும் செய்ய முடியாதா? கடுமையான எதிர்ப்பை மீறி கங்கை நீர் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.பெப்சியும், கொக்ககோலாவும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவின் நீர்வளங் களை சுரண்டி வருகின்றன. கோக்கின் மொத்த வருவாய் 27,458 பில்லியன் டாலர்கள் என்றும், பெப்சியின் வருவாய் 31,372 பில்லியன் டாலர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும், கேரளத்திலும் இவற்றை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன. இயற்கையின் கொடை எப்படி வணிகமயமாக் கப்படுகிற தென்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு.

          இந்த நீர் கம்பெனிகள் நீரைச் சுரண்டி உலகின் பல நாடுகளை பாலைவனமாக்குவதுடன், தரம் குறைந்த நீரின் மூலம் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கின்றன. நீர் தனியார் மயமாகும் போது நீரை பயன்படுத்தும் முறையும் ஏழைகளுக்கு எதிராகவே உள்ளது. வசதி படைத்தவர்கள் மனமகிழ நீர் ராஜ்யங் களும், நீர் பூங்காக்களும் அமைக்கப்படுகின் றன. மும்பையில் 28 நீர் பூங்காக்கள் உள்ளன. தினசரி இவற்றிற்கென 52 பில்லியன் லிட்டர் நீர் விரயமாகிறது. ஒரு கோல்ஃப் மைதானத் திற்கு 18 முதல் 23 மில்லியன் லிட்டர் நீர் தினசரி தேவைப்படுகிறது. நம் நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 6.9 சதவீதம் மட்டுமே உள்ள வசதி படைத்தவர்களுக்கென எவ்வளவு நீர் செலவாகிறது? ஒரு கோல்ஃப் மைதா னத்தில் பயன்படுத்தப்படும் நீர் லட்சத்திற் கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கோடைகால நீர்தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்பது அரசுக்கு தெரியாதா? ஏழைகளுக்கு குடிக்க நீர் இல்லாத போது வசதி படைத்தவர்கள் கோக் அருந்துவதும், நீர் பூங்காக்களுக்கு சென்று இளைப்பாறுவதும் எவ்வளவு மோச மான முரண்பாடு.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நீரின் தேவையும் அதிகரித்துள்ளது. வேகமாக குறைந்துவரும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது.

          நீரை சிக்கன மாகவும், முறையாகவும் பயன்படுத்தவே நீர்க் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக மையஅரசு தெரிவித்தாலும் உள்ளீடாக தண்ணீரை வர்த்தகப் பொருள்களில் மிக முக்கியமான தாக மாற்றும் தந்திரம் ஒளிந்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நீர்வள கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் தேசிய நீர் சட்ட வரைவு உருவாக்கப் பட்டு 2015 ம் ஆண்டு முதல் அமலாக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங் களாவது:* நீரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். பயன்பாட்டுக்கேற்ப நீருக்கு கட்டணம் வசூலிக்கவேண்டும்.* இந்தக் கட்டணம் ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படவேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் நீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும்.*

          அந்தந்த பகுதிகளில் தண்ணீர் பயன் படுத்துவோர், சங்கங்கள் உருவாக்கப் பட்டு, இந்த அமைப்புகள் தண்ணீருக்கான கட்டணங்களை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங் கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.* ஆற்றுப் படுகைகள், நீர்நிலைகளின் கட் டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள எல்லா ஆக்கிர மிப்புகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.* நீர் மாசுபடுவதை தவிர்க்கவேண்டும். தண்ணீரின் நீரோட்டக் கோணத்தை மாற் றக் கூடாது. நிலத்தடி நீர்மட்டம் உயர் வதை உறுதிசெய்ய வேண்டும். அணை களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும். அதற்கான சரியான திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும். வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் விநி யோகம் போன்றவற்றில் தனியாரை அனு மதிக்க வேண்டுமென 2012ன் சட்ட வரைவு உள்ளது. தண்ணீர் குறித்து சட்டம் இயற்றும் அதி காரம் அந்தந்த மாநிலங்களுக்கு இருப்பதாக தெரிவித்தாலும், தேசிய அளவிலான பொதுநீர் கொள்கை உருவாக்கப்படும் என்ற மைய அர சின் அதிகார இரும்புக்கரம் திரைமறைவில் நீண்டுள்ளது. இந்த சட்டமுன்வரைவுகள் அமலானால் நாம் பயன்படுத்தும் எல்லாவித மான நீருக்கும் பணம் கட்ட வேண்டும். நீர் விநியோகம் முற்றிலும் தனியார்மயமாகிவிடும். இந்த முடிவு விவசாயத்திற்கு பலத்த அடியாகவும் இருக்கும்.

          ஒவ்வொரு மாநில அரசுகளும் தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கினாலும், நீர் விநியோகம், பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்களிடமே தாரை வார்க்கும். அவர்கள் தண்ணீர் ஆணைத்திற்கு பெயரளவுக்கு சில கட்டணங்களை செலுத்திவிட்டு கொள் ளை லாபமடிப்பர். மற்ற துறைகளின் அனு பவங்களும் அதுவே.நீர் அனைவருக்கும் பொதுவான சொத்து. எனவே நீரை பாதுகாத்து விநியோகிக்க வேண்டியது அரசின் கடமையாக கருத வேண்டும். நமது இயற்கை வளங்கள் தொடர் பாக அரசுகள் எந்தவிதமான ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மக்கள் மத்தியில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பின்பே ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இன்று நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்த வேண் டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. நாம் இந்தப் பொறுப்பை தட்டிக் கழித்தால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் மோசமான உலகைத்தான் விட்டுச் செல்வோம்.
          
          என் தாத்தா ஆற்றில் நீரைப் பார்த்தார்என் தந்தை கிணற்றில் நீரைப் பார்த்தார். நான் குழாயில் நீரை பார்த்தேன். என் மக்கள் பாட்டில்களில் பாக்கெட்டுகளிலும் பார்க்கின்றனர். எனது பேரக் குழந்தைகள்???  
 நன்றி :- தீக்கதிர்

78,2% IDA இணைப்பு

          DOT  78,2% IDA இணைப்பு விசயமாக மீண்டும்  பிஎஸ்என்எல் இடம்  இருந்து இன்னும் சில விளக்கங்களை கேட்டுள்ளது . DOT  திட்டமிட்டு 78,2% IDA இணைப்புக்கு  ஒப்புதல் கொடுப்பதில்  தாமதப்படுத்துவதை  நாம்  அனுமதிக்க முடியாது. JOINT  FORUM  விரைவில் சந்தித்து பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது .

Thursday, January 17, 2013

IDA உயர்வு

           To day Corporate Office issued order for 4.2% IDA increased w.e.f. 01.01.2013 Letter.no. 14-1/2012-PAT (BSNL)  dated 17-01-2013.

இன்று தோழர் ஜோதிபாசு நினைவு நாள்


அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தேசிய வாழ்வில் உயர்ந்து நின்ற மாமனிதர் தோழர் ஜோதிபாசு. இங்கிலாந்து சென்று உயர் கல்வி பெற்றவர் தோழர் ஜோதிபாசு. வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள் நலனுக்காகவே வாழ் நாள் முழுவதும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜோதிபாசு.அவர் இடது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் அடையாளமாகத் திகழ்ந்தார். சட்ட மன்ற, நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கேற்று மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதில் அனை வருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தேர்தலை மையமாக வைத்து அல்ல; அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே ஓர் அரசு, திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதில் ஜோதிபாசு உறுதியுடன் இருந் தார். ஒரு கட்சியின் தலைவராகவோ, ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ அல்லாமல் தொழிலாளர்களின் தோழனாகவே அவர் அறியப்பட்டார்.மேற்குவங்கத்தில் ஜோதிபாசு அமல்படுத்திய அரசி யல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் அனைத் துக்கும் அடிப்படை, அவரது மனிதாபிமானம், மக்கள் மீது அவர் கொண்டிருந்த அப்பழுக்கற்ற நேசம், நம் பிக்கை.அர்ப்பணிப்புமிக்க அவரது பாதையை போற்றிப் பாதுகாப்போம்!

Wednesday, January 16, 2013

தகவல்

தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 30-01-2013 அன்று நடைபெற உள்ளது .
வருகின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் விசயமாக  UNITED FORUM  கூடடம் வரும் 31-01-2013 அன்று நடைபெற உள்ளது.   

Tuesday, January 15, 2013

ஊதிய குறைப்பு பிரச்சினை


          நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யூ, மற்றும் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, AGS அவர்கள் நமது BSNL  நிறுவன  இயக்குனர் (HR ) அவர்களை  14.01.2013 அன்று சந்தித்து கீழ் கண்ட விசயங்களை பேசியுள்ளனர் .

          1. உடனடியாக JTO LDCE தேர்வு நடத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும்கூட பிஎஸ்என்எல் நிறுவனம்  LDCE  தேர்வுக்கான  அட்டவணை அறிவிக்க காலதாமதம் செய்வதை நமது தலைவர்கள் சுட்டிக்காட்டினர். .

          2. 01.01.2007 பின் நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின்   ஊதிய குறைப்பு பிரச்சினை இல் JTOs மற்றும் JAOs  கேடரில்  செய்யப்பட்டுள்ளது போல் ADVANCE INCREMENTS வழங்கவேண்டும். 01.01.2007 நியமிக்கப்பட்ட NON-EXECUTIVES    ஊதிய குறைப்பு சிக்கலை அந்த அடிபடையில் உடனடியாக தீர்க்க இயக்குனர் (HR ) இடம்  வலியுறுத்தபட்டது .

          இயக்குனர் (HR )  இரு பிரச்சினைகளையும்  கனிவுடன் .பரிசிலனை செய்வதாக உறுதி  அளித்தார்.

          JTO LDCE தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது .தேர்வு 02-06-2013 அன்று நடைபெற் உள்ளது .

வங்கி கடன்

கனரா வங்கியுடன் நமது BSNL  நிறுவனம் கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்ததை புதுப்பித்துள்ளது .இதற்கான கால வரையறை 01-11-2012 முதல் 30-11-2013  வரை இருக்கும் .

Saturday, January 12, 2013

ஆபத்தான அறிகுறி

எங்கே போகிறது தமிழகம்

        

          முதலிடம் நோக்கி தமிழகம் முன்னேறி வரு வதாக ஆண்ட, ஆள்கிற ஆட்சியாளர்கள் அடிக் கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. எந்த விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறதோ என்னவோ ஒரு விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. குடிப்பழக்கம் எனும் விஷயத் தில் பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முன்னேறுவதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமி ழகம் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. நாள்தோறும் 50 கோடி ரூபாய் அளவு க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை யாகிறதாம்.கடந்த 2011 - 12 மார்ச் மாதம் வரை 23 ஆயி ரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசுக்கு 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு மார்ச் நிதியாண்டின் முடிவில் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை இருக்குமென் றும் இதன்மூலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி வரு வாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புள்ளிவிபரம் குறித்து தமிழக அரசு பெருமிதப்பட்டுக் கொள்ளமுடியாது. மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் உயர்கிறது என்றால், கோடிக்கணக்கான குடும்பங்களில் வருமானம் சிதைகிறது. அந்த குடும்பங்கள் வீதிக்கு வருகிறது என்றே பொருள். உதாரணத் திற்கு மதுரை மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்களுக்கு 2000 குடும்ப தகராறு வழக்கு கள் வந்துள்ளன. இவற்றில் 75 சதவீதத் தகராறு காரணம் கணவர்களின் மதுப்பழக்கமாக இருந் துள்ளது.அண்மையில் நடந்த கொடூரமான பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட கயவர்கள் மதுபான மயக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்படுவோரும், மதுபோதையில் இருந்துள்ளது நிருபணமாகியுள்ளது. சமூக குற் றங்களுக்கு மதுப்பழக்கம் என்பது அடிப்படை யாக உள்ளது என்பது தெளிவு. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுக்கடைகள் இடமாற்றம் செய் யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல கல்வி நிலையங்கள் அருகிலுள்ள கடைகளும் அகற்றப்படவேண்டும்.அண்மைக்காலமாக பதின் பருவத்திலேயே மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருவ தாகவும், மது அருந்திவிட்டு பள்ளி வகுப்ப றைக்கு வரும் மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.விசேஷ நாட்களில் இவ்வளவு மது விற்றாக வேண்டும் என்று அரசே இலக்கு தீர்மானிப்பதும் அதற்கேற்ப மதுபானக்கடைகளை அலங்க ரிக்க உத்தரவிடுவதும் வெட்ககேடானதாகும்.இதற்கு மாறாக மதுப்பழக்கம் குடும்பம் மற்றும் சமூகத்தை சீரழித்துவிடும் என்ற விழிப்பு ணர்வு பிரச்சாரம் அதிகரிக்கப்பட வேண்டும். மதுப்பாட்டிலில் மட்டும் அந்த வாசகங்கள் இடம் பெற்றால் போதாது. தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதும் மறுபுறத்தில் மதுபான விற்பனை அதி கரித்துக் கொண்டே செல்வதும் நல்ல அறிகுறி அல்ல.
நன்றி :- தீக்கதிர் 

சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு கிளை மாநாடு

          சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டுக் கிளை  மாநாடு 12-01-2013 அன்று சிவகாசி பழைய தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் சிவபெருமான் தோழர் அழகுராஜ் அவர்களின் கூட்டுத் தலைமையின் கீழ் நடைபெற்றது. தோழர் மணிவண்ணன் தேசியக்  கொடியை ஏற்ற தோழியர் மதினா அவர்கள் சங்கக் கொடியை ஏற்ற மாநாடு இனிதே தொடங்கியது .தோழர் ரசூல் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, தோழர்கள் G.ராஜு மற்றும் A.ஜெயபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினர்.  மாநாட்டை முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்து உரையாற்றினார். தோழர்கள் M.அய்யாசாமி, M .பெருமாள்சாமிசெல்வராஜ்முருகன் (CITU ), கோட்ட பொறியாளர் திரு. ராஜேந்திரன், துணை பொதுமேலாளர் திரு .சொக்கலிங்கம், தோழர் A.சமுத்திரகனிமாவட்ட தலைவர், தோழர்M.முத்துசாமிதோழர் M.S.இளமாறன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழியர் மதினா அவர்களின் பணி ஒய்வுப் பாராட்டு விழாவும் இத்துடன் சேர்ந்து நடைபெற்றது. தொழிற்சங்க இயக்கத்தில் தோழியரின் பங்கை அனைவரும் பாராட்டினர். SDOP கிளையில் தோழர் அழகுராஜ்தோழர் G.ராஜு, தோழர் இன்பராஜ் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். OCB  கிளையில் தோழர் சிவபெருமான், தோழர் ஜெயபாண்டியன், தோழர் கணேசன் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து பெருந்திரளாக ஊழியர்கள் கலந்துகொண்டனர் .

Thursday, January 10, 2013

சோசலிசமே வளர்ச்சிக்கான மாற்றுப் பாதை என்பதை நிரூபிக்கும் சீனா

          உலக அளவில் பொருளாதார வலிமையில் சீனா, அமெரிக்காவை முந்திவிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மிக வேகமாக சீனா வளர்ந்து வருகிறது. இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி நிபுணர்கள் கணிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.இதில், சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும், பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக 2019ஆம் ஆண்டில் பொருளாதார வலிமையில் சீனா அமெரிக்காவை முந்திவிடும். இந்த வளர்ச்சி 30 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். எனவே அடுத்த 30 ஆண்டுகளுக்கு சீனா முதன்மை நாடாக திகழும் என கூறியுள்ளனர், மேலும் நாட்டின் சுகாதார வளர்ச்சியிலும் சீனா முதன்மை நாடாக திகழும் என தெரிவித்துள்ளனர். தற்போது சுகாதார வளர்ச்சியில் சீனா 11-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவடைந்த மத்திய நிர்வாக குழு

          நமது BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மத்திய நிர்வாக குழு கூட்டம் வரும் 2013 பிப்ரவரி 26,27,28 தேதிகளில் ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் CEC உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க வேண்டும்.

Wednesday, January 9, 2013

அடுத்த தாக்குதல்


          மான்ய விலையில் வழங்கப் படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மேலும் ரூ 100 அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில் கட்டணம் உயர்கிறது

          ரயில் கட்டணத்தை உயர்த்தி மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். இது விசயமாக அவர் மேலும் கூறியதாவது கட்டண உயர்வுக்கு மக்களும் தயாராகி விட்டனர். கடந்த 12 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதை பொது மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். கட்டண உயர்வு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்றாலும் அதற்கான யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்டணத்தை உயர்த்த இதுவே சரியான நேரம். தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க கட்டண உயர்வு தவிர்க்க இயலாத ஒன்றாகும்.ஆக மொத்தம் மக்கள் கஷ்டப்பட தயாராகவேண்டும் என்பதை இந்த அரசாங்கம் தன் லட்சியமாய் கொண்டுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வளிக்கும் சங்கத்திற்கு வாக்குகளிப்போம்


Tuesday, January 8, 2013

விரிவடைந்த மாநில செயற்குழுமற்றும் சேவை கருத்தரங்கம்

          நமது BSNLEU சங்கத்தின்  தமிழ் மாநில விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் மற்றும் சேவைக் கருத்தரங்கம் வருகின்ற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் மாநிலத்தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள  விரிவடைந்த செயற்குழு கூட்டத்தை நமது அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு தொடக்கி வைக்க உள்ளார். அனைத்துக் கிளைச்செயலர்கள் மற்றும் முன்னணித் தோழர்களும் அவசியம் கலந்துகொள்ள தோழமையுடன் மாவட்டச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு சிறு விடுப்பு உண்டு.

Monday, January 7, 2013

6th membership verification

This is the 6th membership verification in BSNL  among which BSNL EU won the last 4 verification in a row and was serving the Employees since 8 long years. Lived as per their aspirations. We can be very proud to say that, with united struggles, until now, we saved BSNL all these years. Our responsibility day by day is increasing. We appeal all the employees to become part and parcel of the BSNL EU fraternity, join the hands in the united struggles for our better future and better BSNL. BSNLEU and its cadres are more confident that we can clinch more than 50% votes in the forth coming 6th Membership verification, which ensures us more power to bargain with either the Government or management. Join the hands together. Vote for BSNL EU for our better and better future.   
                                                                                                                                  BSNLEU , VIRUDHUNAGAR DISTRICT

புதிய அங்கீகார விதிகள் பற்றி FNTO

          புதிய அங்கீகார விதிகளை FNTO சங்கம் கடுமையாக எதிர்த்து உள்ளது. புதிய அங்கீகார விதிகளை திரும்ப பெற வேண்டும் என அச்சங்கம் கடிதம் கொடுத்துள்ளது. புதிய அங்கீகார விதிகள் இடது தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக உள்ளதாக அச்சங்கம் கூறி உள்ளது வேடிக்கையானது .

உயரப்போகும் போகும் வருமான வரி

          எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் உள்பட அனைத்து தரப்பினர் மீதும் வருமான வரி கடுமையாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. அதிக வருமானம் உடைய பிரிவினர் மீது கடுமையாக வரி விதிக்கப்படும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் கூறியிருப்பதன் மூலம் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் அவர் ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன், வருமானவரி முறையை இன்னும் வலுப்படுத்த அரசு தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார். வருமான வரி விகிதத்திற்கு மேலாக, சர்ச்சார்ஜ் என்ற பெயரில் கூடுதலாக வரிவிதிக்க திட்டமிட்டுவருவதாக தெரிவித்த அவர், கூடுதலான வருமானம் கொண்ட மக்கள் கூடுதலாக வரி செலுத்த தயாராகிக் கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டார். இந்தியாவில் மூன்று விதமாக வருமான வரி விகிதங்கள் அமலில்உள்ளன. 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற வீதங்களில் வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த விகிதங்களை 1997ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வரையறை செய்தார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்பது நடுத்தர மக்களின் பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் அத்தகைய அறிவிப்பு இருக்காது என்பது மட்டுமல்ல; வருமான வரி விகிதம் கடுமையாக்கப்படும் என்பது ரங்கராஜனின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சி.ரங்கராஜன் கூறியுள்ளார். பொதுச்செலவினங்களை பெரிய அளவிற்கு குறைக்க வேண்டியுள்ளது என்று கூறிய அவர், வருவாயை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் செலவினத்தை குறைக்க வேண்டுமானால் பல்வேறு வடிவங்களில் அளிக்கப்பட்டுவரும் மானியங்களை வெட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.2013-14 பட்ஜெட் எந்த திசைவழியில் அமையும் என்பதற்கு ரங்கராஜனின் இந்தப்பேட்டியே முன்னோட்டம் என பொருளாதார நோக்கர்கள் கூறுகின்றனர்.
நன்றி :-தீக்கதிர்

தோழர் O.P.குப்தா மறைவிற்கு இரங்கல்...

          தபால் தந்தி தொழிற்சங்க முன்னணி தலைவர்களில் ஒருவரும், NFTE (BSNL) சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான தோழர் O.P.குப்தா இன்று (06.01.2013) இரவு 8மணி அளவில் மருத்துவ மனையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சக தோழர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறோம்.

Saturday, January 5, 2013

பணி ஓய்வுப் பாராட்டு



          இன்று நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் 31-01-2013 அன்று பணி ஓய்வு பெற உள்ள திரு சொக்கலிங்கம், DGM (ADMN ) அவர்களுக்கு மூத்த தோழர் M.பெருமாள்சாமி அவர்கள் சால்வை அணிவித்தார். தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலர் BSNLEU சங்கம் சார்பாக நினைவுப் பரிசை வழங்கினார்.திரு சொக்கலிங்கம் அவர்களை வாழ்த்தி தோழர் சமுத்திரகனி, மாவட்ட தலைவர் , தோழர் R.ஜெயக்குமார், கிளை செயலர், அருப்புகோட்டை,தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர்,தோழர் T.ஜெபக்குமார், TEPU, தோழர் M.S.இளமாறன், கிளை செயலர், GM அலுவலகம்,தோழர் H.காதர் மொய்தீன்,சாத்தூர்,தோழர் A.ஜெயபாண்டியன், சிவகாசி ஆகியோர் பேசினர் . 

Friday, January 4, 2013

சரிபார்ப்பு தேர்தல்

6ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு  தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது.

மனு தாக்கல்                                                    :-  11-02-3013

மனுவை திரும்ப பெற இறுதி நாள்       :-  15-02-2013

தேர்தல் நாள்                                                   :-  16-04-2013

வாக்கு எண்ணிக்கை                                   :-  18-04-2013

தேர்தல் முடிவு அறிவிப்பு                        :-  18-04-2013


5 ஆவது வெற்றி மகுடத்தை BSNLEU சங்கத்திற்கு சூட்டத் தயாராவோம்.  


Thursday, January 3, 2013

போக்குவரத்து படி

          புதிய பதவி உயர்வு பெறும்பொழுது பதவி உயர்வுத் தேதியிலிருந்து போக்குவரத்துப்படி வழங்கவேண்டும் என்ற உத்தரவை நமது மாநிலச்சங்கத்தின் முன் முயற்சியால் மாநில நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இந்த உத்தரவை நமது மாவட்டத்தில் அமலாக்க உதவிய Sr .AO திரு T.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதனால் சுமார் 48 ஊழியர்கள் பலன் பெற்று உள்ளனர்.   

புதிய அங்கீகார விதி

          புதிய அங்கீகார விதியின் அடிப்படையில் சரிபார்ப்புத் தேர்தல் நடைபெறுவதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஒரிரு தினங்களில் வெளியாக உள்ளது. சரிபார்ப்புத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...