இன்று ராஜபாளையம் நகரில் விருதுநகர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது .மாவட்டம் முழுவதும் 200 பேர் பங்கேற்ற உற்சாகமான சூழலில் நடைபெற்ற இச் செயற்குழு மாவட்டத்தில் நமது BSNLEU சங்கம் ஒரு மாபெரும் சக்தி என்பதை நிரூபித்தது . நமது சங்க கொடியை மூத்த தோழரும் ,மாவட்ட சங்க நிர்வாகியுமான தோழர் சிவஞானம் ஏற்றி வைக்க ,தேசிய கொடியை நமது AITEU CL III(N) சங்கத்தின் முன்னால் மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார் .தோழர்கள் முத்துசாமி மற்றும் இளமாறன் அவர்களின் கோஷங்களுடன் முறையாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் தொடங்கியது .தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த பட்டது .மாவட்ட தலைவர் தலைமை உரையுடன் துவங்கிய செயற்குழு , மாவட்ட செயலரின் துவக்க உரை மற்றும் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில உதவி செயலர் தோழர் முருகையா சிறப்புரையுடன் நிறைவு பெற்றது .பின் துவங்கிய செமினாரை மாவட்ட செயலர் துவக்கி வைக்க , கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் தனது கருத்துக்களை பதிவு செய்தார் .அதற்குரிய விளக்கங்களை மதிப்பிற்குரிய துணை மாவட்ட பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார் .அதன் மாவட்ட பொது மேலாளர் திருமதி S .E .ராஜம் ,ITS அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் .அதன் பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் தோழர்கள் சிவஞானம் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்கள் கெள்ரவிக்கபட்டனர் .வர உள்ள சரிபார்ப்பு தேர்தலில் 60 %முதல் 70 % வரை நமது BSNLEU சங்கத்திற்கு ஆதரவை திரட்டுவது என்பது 2017 இல் வர உள்ள ஊதிய உடன்பாடு மற்றும் IDA இணைப்பு மற்றும் நிறுவன பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் என்பதை பேசிய அனைவரும் சுட்டி காட்டினர் .BSNLEU சங்கம் தன் சொந்த பலத்தில் 50% வாக்கிற்கும் மேல் வாங்கும் என்பதை பேசிய அனைவரும் அறுதியிட்டு கூறினர் .சென்ற சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் ,மெடிக்கல் அலவன்ஸ் ,LDC இன்னும் சொல்ல போனால் 10,000 கோடி நஷ்டம் அடைந்தற்கும் BSNLEU
காரணம் என்று சொனவர்கள் அவர்களுக்கு அங்கீகாரம் வந்த பிறகு வாய் மூடி மௌனம் சாதித்தது மட்டும் இன்றி அதற்கு எந்த வித இயக்கமும் நடத்தாமல் ஊழியர்களை ஏமாற்றிய செயலை அனைவரும் தனது பேச்சில் சுட்டி காண்பித்தனர் .இச் செயற்குழு மாவட்டத்தில் ஒரு திருப்புமுனை செயற்குழுவாக திகழ்ந்தது .ராஜபாளையம் கிளை தோழர்கள் முத்துராமலிங்கம் ,ராதாகிருஷ்ணன் ,I .முருகன் ,ரவிச்சந்திரன் ,சிவஞானம், அனவரதம் ,ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகி வேலுசாமி தலைமையில் பம்பரமாய் பணியாற்றிய ராஜபாளையம் கிளை தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நன்றி நன்றி நன்றி .