மத்திய அமைச்சர்கள் குழுவோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்: மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
Sunday, August 30, 2015
Friday, August 28, 2015
Can BSNL reboot itself?
State-owned Bharat Sanchar Nigam Ltd, or BSNL, after it got nearly decimated by private telecom operators in the business of voice calls, is leaving no stone unturned to get a piece of the action in the data business. As voice calls turn into a commodity, most telecom operators have started to focus on data, the next big thing.In a move that will ease its cash flows, the Cabinet has given an in-principle approval to BSNL's long pending proposal to hive off its towers into a new subsidiary. The idea, of course, is to sell a stake in the towers company to an investor and unlock value. It is expected to be valued at Rs 20,000 crore.Besides, an investment of about Rs 39,000 crore over the next five years has been lined up to expand its core network and to help it launch more services such as 4Gand Wi-Fi.To turn around the company, which is mandated to operate in the entire country except Delhi and Mumbai, won't be a simple matter, though. Cutthroat competition and constraints in its capacity expansion plan led BSNL to post a loss of Rs 1,823 crore in 2009-10 for the first time since its inception in 2000. The loss reached Rs 7,600 crore in 2013-14 and stood at Rs 7085 crore in 2014-15.
BSNL Chairman & Managing Director Anupam Shrivastava, who took over the reins of the ailing company earlier this year, has his task cut out. The huge loss does not bother Shrivastava - he hopes to take BSNL back to profits within the next three years.After taking over, Shrivastava had said that BSNL has been making losses mainly because of depreciation of assets and administrative costs, which account for 55 per cent of the revenues. However, the operational needs are being through internal cash accruals."With a topline of Rs 28,000 crore and debt of Rs 4,500 crore, the situation is not that bad. The first priority is to change the direction of the company in such a way that losses are reduced year after year and there is enough compensation on depreciating assets," Shrivastava had said.Will the recent initiatives help BSNL turn around? Or is the government throwing good money after bad? Is it headed the Air India way, where the government has sunk in thousands of crores but no signs of a swift turnaround are visible?An opportunity One thing is for sure, the tower business offers a good opportunity for BSNL to raise critical growth capital. It has 65,000 towers, most of them located in the interiors. As metros move towards 100 per cent tele-density, the action is bound to shift to smaller towns and villages: relatively untapped territory. And BSNL's tower infrastructure is already in place - a good way for others to save investments and time. It also owns ample spectrum.Thus, when BSNL was on the verge of signing an agreement with Mukesh Ambani's Reliance Jiofor spectrum sharing, the other private telecom players including Bharti Airtel, Vodafone and Idea Cellular demanded an equal opportunity for themselves. The situation was well captured by a senior official in the ministry of communications and IT who said BSNL is turning out to be an eligible bride who is getting many suitors, and the government is indeed elated seeing this state of affairs.BSNL will outsource the operations and management of its towers across India, as it prepares to form the second-largest tower firm in the industry. Indus Towers, a joint venture between Bharti Airtel, Vodafone and Idea Cellular, is the largest player in the country with about 120,000 towers. The contract is expected to be valued at Rs 1,500-2,000 crore and expressions of interest will be invited within the next few weeks. The outsourcing will enable BSNL to reduce its expenses by 15-20 per cent.The next move Analysts say it is a wise move. "The demerger of the tower business will help unlock value. The demerged entity can improve tower tenancies by making available the towers to all private sectors, says Deloitte Haskins & Sells Partner Hemant Joshi. "This will also lead to better usage of national assets." The capital and organisational structures of the new tower unit will be formulated by an inter-ministerial group.Currently, BSNL generates revenue of about Rs 200 crore from its tower business and expects it to go up to Rs 2,000 crore once the tower unit is formed. As of now, BSNL has leased out 4,500 towers to Reliance Jio and about 1,500 to Bharti Airtel. A senior officer from BSNL says conflict of interest has been the main problem in leasing out towers to private telecom operators so far, which will be erased once the new unit is in place.Meanwhile, BSNL wants to integrate WiFi with its mobile network to provide users a seamless experience of 3G and WiFi service. "BSNL has missed the voice journey. But we want to make sure we are the leaders in data services. The age of voice is over and data is the next big thing," says Shrivastava. "We are in a strategic position, be it mobile, landline or optic fibre network."At the moment, data and broadband is small for BSNL: it contributes 10 per cent of the company's revenue, though its share is on the rise. For the industry, data's contribution stands at around 13-16 per cent. But the market is tough. One thing is for sure: it won't be a cakewalk for BSNL
நன்றி :-
செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம்
இன்று ராஜபாளையம் தொடங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வரை செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய இணைந்த பிரசார பயணம் தொடங்கியது .BSNLEU சார்பாக தோழர்கள் ரவீந்திரன்,சமுத்திரகனி ,வெங்கடேஷ் அவர்களும் NFTE சங்கம் சார்பாக தோழர் சக்கணன் அவர்களும் கலந்து கொண்டனர் .ராஜபாளையம் தொலை பேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டதிற்கு தோழர் தளவாய் பாண்டியன் (NFTE ) தலைமை வகிக்க NFTE சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் சக்கணன் அவர்களும் BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்களும் விரிவாக பேசினர் .ஸ்ரீவில்லிபுத்தூர் தொலை பேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டதிற்கு BSNLEU மாவட்ட துணை தலைவர் தோழியர் பகவதி தலமை வகிக்க தோழர்கள் சக்கணன் ,ரவீந்திரன் ,சமுத்திரகனி மற்றும் வெங்கடேஷ் பங்கேற்றனர் இரு கூட்டங்களிலும் திரளானோர் கலந்து கொண்டனர் .
Wednesday, August 26, 2015
அமெரிக்காவால் பட்ட கஷ்டம்... விவரிக்கும் இமெயிலை கண்டுபிடித்த தமிழர் சிவா அய்யாத்துரை!
இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை,மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில் அமெரிக்கா சென்று குடியேறிய இவர், தற்போது சென்னை வந்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"நான் இங்கே அழுத்தமாகக் கூற விரும்புவது நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடைக்க வேண்டும். நம்மால் முடியாது என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். நம் மீது சில கற்பிதங்களையும், நம்பிக்கைகளையும் மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேயர் வேண்டுமென்றே உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை நாம் உடைக்க வேண்டும்.நான் 1978ல் இமெயிலைக் கண்டு பிடித்தது ஒரு இந்தியனாக கண்டு பிடித்தேன். ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ஒரு தமிழனாக இமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் அப்போது இதை பிரபலம் பண்ணும் அளவிற்கு என்னிடம் வழக்கறிஞரோ அல்லது உடனிருந்து வழி நடத்துவதற்கான நபரோ இல்லை. பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஆனால் இப்போது உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது. ஒரு 14 வயது இந்தியப் பையன், தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது, முதலில் சுரண்டி பொருட்களைக் கொண்டு சென்றார்கள். அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம். அவ்வளவுதான். ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள், வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள். நம்மை அந்தப் பட்டியலில் சேர்க்கவே மாட்டார்கள். சேர்க்கவிடவே மாட்டார்கள். எனக்கும் அது நடந்தது. அவர்களில் ஒருவன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விளையாட்டுகளைச் செய்தார்கள். வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள் என்ற நம்பிக்கையை நம்மிடம் விதைத்தது அவர்களின் வெற்றி, அவர்களின் தந்திரம், நாம் இதை உடைத்து வெளிவராமல் நம்மால் எதையும் நாம் தான் கண்டு பிடித்தேன் என்று சொல்ல முடியாது. எனக்கான ஆதாரங்கள் என் அம்மாவிடமிருந்து கிடைத்தபோது நான் கண்டுபிடித்ததை நிரூபித்தேன். நான் வெள்ளைக்காரனுக்கு நிரூபிக்கவில்லை. இந்தியனுக்கான அடையாளத்தை நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம், இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு பதினான்கு வயதுச் சிறுவன், அதுவும் கருப்புத்தோல் கொண்ட தமிழன், இந்தியன் என்று! இந்த வெள்ளைத் தோல் கொண்டவந்தான் கண்டுபிடிப்பான் என்ற மூளைச் சலவையிலிருந்து இந்திய மக்கள் முதலில் வெளியே வர வேண்டும்.
ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வந்து நம்மைக் கேள்வி கேட்டது. அப்போது சொர்க்கத்தில் ஏற்ற தாழ்வு உண்டா? என்ற கேள்விக்கு ஏற்ற தாழ்வு இல்லை என்றனர். அப்படியானால், பூமியில் மட்டும் ஏன் ஏற்ற தாழ்வு என்று ஆன்மீகப் பெரியவர்களே கேள்வி எழுப்பியுள்ளனர். நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான். சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து நம்மை பிரித்தாண்டது அவன்தான். எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள், வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில், 15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும் ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள். நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது? 5000 ஆண்டுகளுக்குமுன் பலவற்றைக் கண்டுபிடித்த நம்மால் ஏன் இப்போது முடியவில்லை.ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர், பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர், கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு. நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும், படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம். கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதில் முடித்தேன். அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.
அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன். நியூயார்க் என்கிற ஊரில் 3 மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது 14 வயதுதான். வேலை பார்த்தவர்கள் 30 வயது 40 வயது கொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும் கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதி பார்த்து கொடுத்தது. அப்போதே 14, 15 செமினார் கூட நடத்தினேன்.எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும், சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார். அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் இமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் இமெயில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு.இதுமாதிரி புதுமாதிரியான கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது, தகுதியுள்ளது என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக 'ரேட்டியான்' என்கிற கும்பல் மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். இமெயில் என்றால் அது 'சிவா அய்யாதுரைதான்' என்று வெற்றி பெற்றேன். அதுவரை 'இமெயில்' என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக் ஷனரியிலும் வந்தது.இசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல் அங்கு வந்தது. இப்போது தினமும் இமெயில் போக்குவரத்துகள் 20 ஆயிரம் கோடி முறை நடக்கின்றன. 4.2 பில்லியன் இமெயில் முகவரிகள் உள்ளன. இது ஒரு இந்தியனின் தமிழனின் கண்டுபிடிப்பின், பங்களிப்பின் விளைவு அல்லவா?1993ல் அதிபர் கிளிண்டன் கூட இமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார். எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும், ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.நம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான். ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்னை என்று கண்டுபிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது.மேலை நாட்டு வைத்தியமுறையிலோ உடம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம் மருந்துகள், ஆயிரம் டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு எதையும் வியாபாரமாகப் பார்ப்பார்கள்.'சைட்டோ சால்வ்' என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம். நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது. நம் வீட்டு கறி மசாலாவில் மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம்.சித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் மென்பொருள் செய்து வருகிறேன் .சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை. இறுதியாகச் சொல்வது இதுதான்.. அமெரிக்காவில் அவர்களால் முடியும் என்றால், இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம்" என்றார்.
நன்றி : விகடன் செய்திகள்
அன்பு தோழர் அய்யனாருக்கு ஒரு பாராட்டு
தளவாய்புரம் தொலை பேசி நிலையத்தில் முது நிலை எழுத்தராக பணிபுரியும் தோழர் அய்யனார் அவர்கள் வரும் 31-08-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கம் அவரை பொன்னாடை அணிவித்து பாராட்டியது . தோழர் அய்யனார் அவர்கள் தந்தி பிரிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணி செய்து பின் சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதியில் பணியாற்றியவர் . தொடக்க காலம் முதல் K G போஸ் அணியால் ஈர்க்கப்பட்டு நமது BSNLEU சங்க தோழராக திகழ்ந்தவர் .
மனு அளிக்கும் போராட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். செய்யும்பணித்தன்மைக்கேற்ப சம்பளம் வழங்கவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம்ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திமதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்முன்னதாகநடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மதுரைமாவட்டத் தலைவர் சி.செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன், என்.சோனைமுத்து, விருதுநகர் மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ஆர்.முனியசாமி,கே.அந்தோணிசாமி, சி.பழனிச்சாமி, எஸ்.மாயாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரை, விருதுநகர், காரைக்குடிமாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பிஎஸ்என்எல் உயரதிகாரியிடம் வழங்கினர். நமது விருதுநகர் மாவட்டம் சார்பாக 18 பெண் ஊழியர்கள் உட்பட 59 பேர் ஒப்பந்த ஊழியர் மாவட்ட சங்கம் சார்பாக பங்கேற்றனர் .
(கேமராவில் பிரச்சனை காரணமாக தேதி 25க்குப் பதிலாக 22 என உள்ளது)
GM அலுவலக கிளை கூட்டம்
25-08-2015 அன்று GM அலுவலக மற்றும் SDOP கிளைகளின் இணைந்த கூட்டம் தோழர் A மாரிமுத்து தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கல் M S இளமாறன் ,K சிங்கரவேல் அவர்கள் ஆய்படுபொருளை விளக்கி பேசினர் .பின்னர் பேசிய மாவட்ட செயலர் தோழர் .S ரவீந்திரன் செப்டம்பர் வேலை நிறுத்தம் பற்றியும் மாநில மற்றும் மாவட்ட சங்க முடிவுகளை விளக்கியும் விரிவாக பேசினார் .மாவட்ட மாநாட்டிற்கு அனைத்து தோழர்களும் உற்சாகம் ஊட்டக்கூடிய அளவில் நன்கொடை தருவதாக கூறினர் .கிளை பொருளாளர் தோழர் A மாரியப்பா நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது .
Tuesday, August 25, 2015
அருப்புகோட்டை கிளை பொது குழு கூட்டம்
24-08-2015 அன்று அருப்புகோட்டை கிளை பொது குழு கூட்டம் தோழர் உதயகுமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலைநிறுத்த போராட்டம் பற்றிய அவசியத்தையும் அதை வெற்றிகரமாக்க வேண்டியகட்டாயத்தையும் விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் , உதவி தலைவர் தோழர் கண்ணன் , மாவட்ட அமைப்பு செயலர் தோழர் ராஜ்மோகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட செயற்குழு மற்றும் விரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் உரையாற்றினார் .மாவட்ட மகாநாட்டுக்கு தேவையான நிதியை வசூல் செய்ய வேண்டிய அவசியத்தை மாவட்ட செயலர் கூறியவுடன் தோழர்கள் ராஜ்மோகன் மற்றும் IMPCS பகுதியில் பணி செய்யும் கண்ணன் அவர்கள் ரூபாய் 10,000/- வழங்குவதாக அறிவித்தனர் .தோழர்கள் அஷ்ரப் தீன் தன பங்களிப்பாக ரூபாய் 4000/- வழங்குவதாக சொன்னவுடன் அனைவரும் அள்ளி தந்த அற்புதமான கிளை கூட்டம் ஆக அருப்புகோட்டை கூட்டம் திகழ்ந்தது . தோழர் மாரிராஜன் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...