24-08-2015 அன்று அருப்புகோட்டை கிளை பொது குழு கூட்டம் தோழர் உதயகுமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலைநிறுத்த போராட்டம் பற்றிய அவசியத்தையும் அதை வெற்றிகரமாக்க வேண்டியகட்டாயத்தையும் விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் , உதவி தலைவர் தோழர் கண்ணன் , மாவட்ட அமைப்பு செயலர் தோழர் ராஜ்மோகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட செயற்குழு மற்றும் விரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் உரையாற்றினார் .மாவட்ட மகாநாட்டுக்கு தேவையான நிதியை வசூல் செய்ய வேண்டிய அவசியத்தை மாவட்ட செயலர் கூறியவுடன் தோழர்கள் ராஜ்மோகன் மற்றும் IMPCS பகுதியில் பணி செய்யும் கண்ணன் அவர்கள் ரூபாய் 10,000/- வழங்குவதாக அறிவித்தனர் .தோழர்கள் அஷ்ரப் தீன் தன பங்களிப்பாக ரூபாய் 4000/- வழங்குவதாக சொன்னவுடன் அனைவரும் அள்ளி தந்த அற்புதமான கிளை கூட்டம் ஆக அருப்புகோட்டை கூட்டம் திகழ்ந்தது . தோழர் மாரிராஜன் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது .





No comments:
Post a Comment