இன்று ராஜபாளையம் தொடங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வரை செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய இணைந்த பிரசார பயணம் தொடங்கியது .BSNLEU சார்பாக தோழர்கள் ரவீந்திரன்,சமுத்திரகனி ,வெங்கடேஷ் அவர்களும் NFTE சங்கம் சார்பாக தோழர் சக்கணன் அவர்களும் கலந்து கொண்டனர் .ராஜபாளையம் தொலை பேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டதிற்கு தோழர் தளவாய் பாண்டியன் (NFTE ) தலைமை வகிக்க NFTE சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் சக்கணன் அவர்களும் BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்களும் விரிவாக பேசினர் .ஸ்ரீவில்லிபுத்தூர் தொலை பேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டதிற்கு BSNLEU மாவட்ட துணை தலைவர் தோழியர் பகவதி தலமை வகிக்க தோழர்கள் சக்கணன் ,ரவீந்திரன் ,சமுத்திரகனி மற்றும் வெங்கடேஷ் பங்கேற்றனர் இரு கூட்டங்களிலும் திரளானோர் கலந்து கொண்டனர் .










No comments:
Post a Comment