கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதமாதம் சம்பளம் கொடுப்பதில் Innovative நிறுவனம் கடும் காலதாமதம் செய்வதை கண்டித்தும் அன் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய கோரியும் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம் தோழர் சமுத்திரகனி ,தோழர் ஜெயக்குமார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது .26-11-2014 நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் இப் பிரச்சனையை மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டி காட்டியும் இதுவரை பிரச்னை தீரவில்லை .அந்நிறுவனம் முறையாக EPF பணத்தையும் செலுத்தவில்லை .மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெண்டர் எடுத்துள்ள இந் நிறுவனம் எல்லா இடங்களிலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதை நமது மாநில சங்கத்திடமும் எடுத்து கூறியுள்ளோம் .இன்று லேபர் அதிகாரியிடம் பிரச்சனையின் தன்மையை இ மெயில் மூலமாக அனுப்பி அந்த அதிகாரியிடம் பேசி மாவட்ட நிர்வாகமே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி உள்ளோம் . லேபர் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார் .அந்த அடிப்படையில் வரும் நிகழ்வுகளை பார்த்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மாநில சங்கத்தின் ஆலோசனையுடன் தொடங்கப்படும் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை அனைவருக்கும் பேச வாய்ப்பு அளித்து ஒரு பயிற்சி பட்டறையாக நடைபெற்றது ஒரு சிறப்பு அம்சமாகும் . போராட்டத்தை வாழ்த்தி CITU சங்க மாநில பொறுப்பாளர் தோழியர் மகாலட்சுமி , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் ,ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி, BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர்
தோழர் வேல்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி ,அஷ்ரப் தீன் ,மதி கண்ணன் ,அனவரதம் ,இளமாறன் ,சிங்காரவேல்,சந்திரசேகரன் ,வெங்கடப்பன் ஆகியோர் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினர் .தோழர் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் மாரிமுத்து நன்றி கூறி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உண்ணாவிரத போராட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டது சிறப்பு மிக்கது .