Saturday, November 8, 2014

அகில இந்திய மாநாடு - மூன்றாம் நாள்

          இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சார்பாளர் விவாதங்களுக்கு நடுவே அனைத்திந்திய மாநாட்டின் மலரை அகில இந்தியத் தலைவர் தோழர் விஏஎன் நம்பூதிரி வெளியிட பொதுச் செயலாளர் தோழர் அபிமன்யு பெற்றுக் கொண்டார்.

          பிற்பகலில் ‘BSNLன் மறுமலர்ச்சியும் BSNLEUவின் பங்கும்’ என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ஏ.என். நம்பூதிரியின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கம் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர் அனிமேஷ் மிஷ்ரா வரவேற்புரையுடன் தொடங்கியது. பொதுச் செயலர் தோழர் அபிமன்யு கருத்தரங்கினை நோக்கஉரையாற்றித் தொடங்கி வைத்தார்.

          இயக்குநர் CFA திருமிகு என்.கே.குப்தா மற்றும் இயக்குநர் CM திருமிகு அனுபம் ஸ்ரீவத்சவ் ஆகியோர் நிர்வாகத் தரப்பில் தங்களுடைய கருத்தை முன்வைத்தார்கள். “BSNLஐ தற்போது இருக்கின்ற பங்கு விற்பனைகள் இல்லாத இதே நிலைமையில் தக்க வைப்பதே நிர்வாகத்தின் இன்றைய நிலையாக இருக்கின்றது. நிறுவனத்தை இழப்பிலிருந்து மீட்கும் முயற்சியில் உங்களது ஒத்துழைப்பும் அவசியமானதாக இருக்கின்றது. தென்னிந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 50,000 ப்ராண்ட் பேண்ட் இணைப்புகளை நாம் இழந்திருக்கின்றோம். இப்படியான சூழல் என்பது தவிர்க்கப்பட வேண்டும்.  விரைவில் தரைவழித் தொலைபேசியில் வீடியோ கால் வசதி வரவிருக்கிறது. FTTHக்கான பணிகள் நிர்வாகத் தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக்கித் தருவது உங்கள் கைகளில்தான் உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை BSNLEU கொடுத்தால் அவற்றை நடைமுறைப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். 70,000 கோடி லாபம் ஈட்டுகின்ற நமது முயற்சி வெற்றியடைந்தால் வருகின்ற 2016 ஊதியக் குழுவிற்குப் பின்னர் நாம் தற்போது பெறுகின்ற ஊதியத்தைப் போல் இருமடங்கு பெறலாம். வை-மேக்ஸ்க்கு மாற்றாக விரைவில் wi-fi connectivity தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரத்திற்கான நாம் அரசாங்கத்திடம் செலுத்திய, நமக்குத் திரும்பி வரவேண்டிய தொகை இன்னும் வரவில்லை. தேவையான சூழலில் இந்த முயற்சியில் நீங்களும் எங்கள் உடன் இருப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றார்கள்.

          இயக்குநர்களின் உரையைத் தொடர்ந்து SNEAவின் பொதுச் செயலர் தோழர் செபாஸ்ட்டின், BTUவின் பொதுச் செயலர் தோழர் R.C.பாண்டே, TEPUவின் பொதுச் செயலாளர் R.வெங்கட்ராமன், ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் பிரகலாத்ராய் மற்றும் NFTEயின் துணைப்பொதுச் செயலர் சேஷாத்ரி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அவர்கள் “Tower Sharing”ல் நிர்வாகம் கடைப்பிடிக்கும் கவனமற்ற போக்கைச் சுட்டிகாட்டினர். BSNL & MTNL இணைப்பில் நிலவும் சாத்தியமற்ற தன்மையையும் இணைப்பினால் இரண்டு நிறுவனங்களுக்கும் ஏற்படும் பாதகங்களையும் சுட்டிக் காட்டினர். கிராமப்புற சேவைகளுக்காக நமக்குத் தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. அவறைப் பெற முயற்சி செய்ய வேண்டும். களப்பணிகளுக்காகத் தரப்படுகின்ற பொருட்கள் உரிய காலத்தில் வழங்கப்படாமையையும் அப்பொருட்களின் தரமற்ற தன்மையைம் சுட்டிக்க காட்டினர். BSNLன் மேம்பாட்டிற்காக 2015 பிப்ரவரி 3 முதல் நடக்கவிருக்கின்ற காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க அறைகூவல் விடுத்தனர்.

          பொதுச் செயலர் தோழர் அபிமன்யு பேசுகையில் BSNLக்காக பொருட்கள் வாங்குகின்ற சீன நிறுவனங்களான HUWAI மற்றும் Zetyee போன்றவைகளிடம்தான் பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் பொருட்களை வாங்குகின்றன. அவை கடனாக வாங்குகின்றோம். நாம் உடனடியாக பணம் கொடுத்து வாங்குகின்றோம். நிதிப் பற்றாக்குறையினால் இப்போதைக்குப் பொருட்கள் வழங்க இயலவில்லை என்ற சொற்களைத் தவிர்த்து அவசரத் தேவைகளுக்கு நமது நிறுவனமும் அவர்களிடம் கடனுக்குப் பொருட்கள் வாங்குவதில் எந்தத் தவறும் இருக்கப் போவதில்லை என்பதைக் குறிப்பிட்டார்.

           தவிர்க்க முடியாத சூழலில் இடம் மாற்றப்பட்டு இரட்டிப்புச் செலவுகளுக்கு ஆளான வரவேற்புக் குழுவின் நிதிச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக கீழ்கண்ட மாநிலங்கள் மேடையில் அறிவித்து நிதியைத் தந்தன. மாநிலங்களிடையே தொடரும் தோழமைக்கு அடையாளமாக இவற்றைக் காணவேண்டும்.

           மகாராஷ்ட்டிரா ரூ. 50,000
           பஞ்சாப்               ரூ. 1,00,000
           கேரளம்                 ரூ. 25,000
           அந்தமான்            ரூ. 10,000 (100 உறுப்பினர்களை மட்டுமே கொண்டது)














No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...