Saturday, September 23, 2017

7வது மாவட்ட செயற்குழு

இன்று விருதுநகரில் 7வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக எழுச்சியுடனும் ,உற்சாகத்துடனும் நடைபெற்றது .மூத்த தோழர் A ,கண்ணன் ,மாவட்ட உதவிசெயலர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் தீர்மானம் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மறைத்த தியாகிகளுக்கு  மௌன அஞ்சலி செலுத்த ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்   ஆய் படு பொருள் மீது விரிவான கருத்தை பதிவு செய்தார் .தனது உரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியை சுட்டி காட்டினார் .நமது அணியை விட்டு ஜெபக்குமார் ,BSNL காங்கிரஸ் தலைவர் என்று சொல்லும் தளவாய் பாண்டியன் ,தந்தி பிரிவை சேர்ந்த தோழர்கள் எங்கள் பக்கம் என்று சொல்லி 6 வது சரிபார்ப்பு தேர்தலில் நாங்கள்  தான் வெற்றி பெறுவோம் என்று மார் தட்டியவர்களை வெற்றி கண்டு 300 பொட்டலம் பிரியாணியை வேஸ்ட் செய்ய  வைத்தோம் .இன்று அதே பாணியில் அவர்கள் நாம் உதிர்த்து விட்ட காய்ந்த சருகுகளை அள்ளி  வைத்து எக்காளம் இடுகிறார்கள் .சென்னை  RGB தேர்தலில் வீடுவீடாக கை கடிகாரம் கொடுத்தும் கையொடிந்து போன கதையை சொல்லியும் , .எத்தனை சரிபார்ப்பு தேர்தல் வந்தாலும் நமது BSNLEU சங்கத்தை  தோற்கடிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்பதை மாவட்ட செயலர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் .இந்த செயற்குழுவில் புதிய மாவட்ட  உதவி செயலராக தோழர் A.கண்ணன் அவர்களும் ,புதிய மாவட்ட அமைப்பு செயலராக தோழர் கலையரசன் அவர்களும் ,மற்றொரு புதிய மாவட்ட உதவி செயலராக தோழர் K .சமுத்திரம் அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ,செயல் இழந்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்  மாவட்டம் தழுவிய ஒரு எழுச்சி மிகு போராட்டத்தை நடத்த மாவட்ட செயற்குழு முடிவு எடுத்துள்ளது .அக்டோபர் 21ஆம் தேதி நடை பெற உள்ள நவம்பர்  புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு அதிக ஊழியர்களை திரட்டுவது . .நவம்பர்  மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தர்ணாவுக்கு போதுமான ஊழியர்களை திரட்டுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன .சிறப்புரை நிகழ்த்திய நமது தமிழ் மாநில செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊதிய மாற்றம் ,துணை  டவர் நிறுவனம் ,வர இருக்கின்ற போராட்டங்கள் ஈரோடு மாவட்ட ஒப்பந்த ஊழியர் பிரச்சனை ஆகியவற்றை பற்றி விரிவாக பேசினார் .மணிலா அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஸ்தல மட்ட பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார் .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் அருமையாக ஒருங்கிணைத்து தனது பணியை சிறப்பாக செய்தார் .மாவட்ட பொருளாளர்   தோழர்  சந்திரசேகரன் நன்றி நவின்றார் .
Image may contain: 2 people, people sitting
Image may contain: 1 person, standing and indoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people standing
Image may contain: 6 people, people smiling, people sitting and indoor
Image may contain: 9 people, people sitting
Image may contain: 3 people
Image may contain: 4 people, people sitting

Friday, September 22, 2017

7 வது மாவட்ட செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே ! 
வருகின்ற 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 7 வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு  ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்த உள்ளார் .
ஆய் படு பொருள் :
1.அமைப்பு நிலை 
2.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

Saturday, September 16, 2017

துணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

துணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் 
Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
விருதுநகர் 
Image may contain: 1 person, standing
Image may contain: 12 people, people standing and outdoor

Friday, September 15, 2017

நன்றி நன்றி

  மாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டுக்கு நிதி வேண்டும் என்று அவர்களால் கோரப்பட்ட போது மாவட்டம் முழுவதும் மாவட்ட சங்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்கான நிதியை வசூல் செய்தது .கிளை வாரியாக இதுவரை வந்த நிதி .
1.விருதுநகர்                          = Rs.18,650
2.சிவகாசி                                =Rs 17,600
3.அருப்புக்கோட்டை            =Rs   5,600
4.ஸ்ரீவில்லிபுத்தூர்                 =Rs   5,100
5.சாத்தூர்                                  =Rs     400
6.ராஜபாளையம்                    = Rs .9,900
                                                  -----------------------
                                                             57,250        
                                                  ________________      
அள்ளி தந்த அனைத்து  உள்ளங்களுக்கும் மாவட்ட சங்கத்தின்     நெஞ்சு நிறை நன்றி .நிதி வசூலில்     மாவட்ட சங்கத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள் .

துணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

துணை டவர் நிறுவனம் எதிர்ப்பு மற்றும் போராடும் அரசு ஊழியர் ,ஆசிரியர்களுக்கு ஆதரவு  ஆர்ப்பாட்டம் 
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 9 people, people standing and outdoor
Image may contain: 2 people, outdoor
Image may contain: 5 people, people smiling, people standing and outdoor
Image may contain: 1 person, standing, walking, crowd and outdoor
Image may contain: 2 people, people standing

சாத்தூர் கிளை மாநாடு

செப்டம்பர் 11 ஆம் தேதி சாத்தூர் கிளை மாநாடு அதன் உப தலைவர் தோழர் காதர் மொய்தீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாநில  அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,சிவகாசி கிளை செயலர் தோழர் கருப்பசாமி,மாவட்ட உதவி பொருளாளர் தோழர் மாரியப்பா ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .புதிய கிளை செயலராக தோழர் காதர் மொய்தீன் தேர்ந்து எடுக்கப்பட்டார் .
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 1 person, sitting
Image may contain: 4 people, people sitting and indoor

Sunday, September 10, 2017

அருப்புக்கோட்டை கிளை மாநாடு

அருப்புக்கோட்டை கிளை மாநாடு அதன் தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் 09/09/2017 அன்று மாலை  5 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் பதவி உயர்வு பெற்று செல்வதை  ஒட்டி அவருக்கு சிறப்பான பாராட்டு விழாவும் கிளை மாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது. தியாகிகளுக்கு தோழர் சோலை அஞ்சலி செலுத்தினார். அதன் பின் கிளை செயலர் தோழர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்தார். மாநாட்டை வாழ்த்தி SNEA மாவட்ட தலைவர் தோழர் சரவணன், கோட்ட பொறியாளர், அருப்புக்கோட்டைமாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், JCTU தோழர் ராஜாராம், மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி, காதர்  மொய்தீன், மாரியப்பா, மாரிமுத்து, சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் உதயகுமார் ,சோலை மற்றும் அய்யனார் அவரகள் தலைவர் ,செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதன் பின் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோழர்கள்  அனைவரும் தோழர் அஷ்ரப் தீன் அவர்களின் தொழிற்சங்க பணியை நினைவு கூர்ந்தனர். மாவட்ட சங்கம் சார்பாக தோழர் அஷ்ரப் தீன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார். புதிய கிளை செயலர் தோழர் சோலை நன்றி நவின்றார்.





































Image may contain: 1 person, sitting

Image may contain: 7 people, people smiling, people sitting

Image may contain: 5 people, people sitting and indoor

Image may contain: 8 people, people sitting and indoor

Image may contain: 4 people, people sitting

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...