இன்று விருதுநகரில் 7வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக எழுச்சியுடனும் ,உற்சாகத்துடனும் நடைபெற்றது .மூத்த தோழர் A ,கண்ணன் ,மாவட்ட உதவிசெயலர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் தீர்மானம் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மறைத்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்த ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆய் படு பொருள் மீது விரிவான கருத்தை பதிவு செய்தார் .தனது உரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியை சுட்டி காட்டினார் .நமது அணியை விட்டு ஜெபக்குமார் ,BSNL காங்கிரஸ் தலைவர் என்று சொல்லும் தளவாய் பாண்டியன் ,தந்தி பிரிவை சேர்ந்த தோழர்கள் எங்கள் பக்கம் என்று சொல்லி 6 வது சரிபார்ப்பு தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று மார் தட்டியவர்களை வெற்றி கண்டு 300 பொட்டலம் பிரியாணியை வேஸ்ட் செய்ய வைத்தோம் .இன்று அதே பாணியில் அவர்கள் நாம் உதிர்த்து விட்ட காய்ந்த சருகுகளை அள்ளி வைத்து எக்காளம் இடுகிறார்கள் .சென்னை RGB தேர்தலில் வீடுவீடாக கை கடிகாரம் கொடுத்தும் கையொடிந்து போன கதையை சொல்லியும் , .எத்தனை சரிபார்ப்பு தேர்தல் வந்தாலும் நமது BSNLEU சங்கத்தை தோற்கடிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்பதை மாவட்ட செயலர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் .இந்த செயற்குழுவில் புதிய மாவட்ட உதவி செயலராக தோழர் A.கண்ணன் அவர்களும் ,புதிய மாவட்ட அமைப்பு செயலராக தோழர் கலையரசன் அவர்களும் ,மற்றொரு புதிய மாவட்ட உதவி செயலராக தோழர் K .சமுத்திரம் அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ,செயல் இழந்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மாவட்டம் தழுவிய ஒரு எழுச்சி மிகு போராட்டத்தை நடத்த மாவட்ட செயற்குழு முடிவு எடுத்துள்ளது .அக்டோபர் 21ஆம் தேதி நடை பெற உள்ள நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு அதிக ஊழியர்களை திரட்டுவது . .நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தர்ணாவுக்கு போதுமான ஊழியர்களை திரட்டுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன .சிறப்புரை நிகழ்த்திய நமது தமிழ் மாநில செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊதிய மாற்றம் ,துணை டவர் நிறுவனம் ,வர இருக்கின்ற போராட்டங்கள் ஈரோடு மாவட்ட ஒப்பந்த ஊழியர் பிரச்சனை ஆகியவற்றை பற்றி விரிவாக பேசினார் .மணிலா அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஸ்தல மட்ட பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார் .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் அருமையாக ஒருங்கிணைத்து தனது பணியை சிறப்பாக செய்தார் .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி நவின்றார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment