அக்டோபர் 7 ஆம் தேதி ராஜபாளையம் கிளை மாநாடு மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் அதன் தலைவர் தோழர் R .தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது .எழுச்சி மிகு கோஷங்களுடன் நமது சங்க கொடியை தோழர் ரவிச்சந்திரன் ஏற்றி வைத்தார் .TNTCWU சங்க கொடியை அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ஏற்றி வைத்தார் .தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம் வாசிக்க அனைவரும் தியாகிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர் அதன் பின் முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கிளை மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் ..வர இருக்கும் போராட்டங்கள் ,மதுரையில் நடைபெற உள்ள நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் திரளாக பங்கேறக் வேண்டிய அவசியத்தை கூறினார் .தோழர் பொன்ராஜ் ,கிளை செயலர் முன் வைத்த ஆண்டறிக்கை மீது விவாதம் நடைபெற்று ஒப்புதல் பெறப்பட்டது .இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர் முத்துச்சாமி மற்றும் தோழர் வெள்ளை பிள்ளையார் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார் .பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . ஒட்டு மொத்தத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் எஃகு கோட்டை விருதுநகர் மாவட்டம் என்பதை பறைசாற்றியது ராஜபாளையம் கிளை மாநாடு.புதிய நிர்வாகிகளாக தோழர்கள் தியாகராஜன் ,பொன்ராஜ் ,ரவிச்சந்திரன் ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
.
No comments:
Post a Comment