தோழர் P.அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா புகைப்படம் பார்க்க :-Click Here
Showing posts with label பணி ஓய்வு பாராட்டு. Show all posts
Showing posts with label பணி ஓய்வு பாராட்டு. Show all posts
Thursday, January 2, 2014
Monday, December 30, 2013
பணி ஓய்வு பாராட்டு,
30-12-2013 அன்று சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகளின் சார்பாக தோழர் ராமசாமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.கிளை தலைவர்கள் தோழர் சிவபெருமான் மற்றும் தோழர் அழகுராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் ராமசாமி அவர்களுக்கு தோழர் ராஜாகனி அவர்கள் சந்தன மாலை அணிவிக்க மாவட்ட செயலர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .தோழர் ராமசாமி அவர்களை வாழ்த்தி தோழர்கள் அய்யாசாமி ,கருப்பசாமி,ராஜு,ஜெயபாண்டியன் ஆகியோர் பேசினர் . தோழர் சமுத்திரகனி வாழ்த்தி பேசும் போது ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு பெரும் திரளாக செல்லவேண்டிய அவசியத்தை கூறினார் . மாவட்ட செயலர் பேசிய போது அக்டோபர் 25 ஆம் தேதி நடை பெற இருந்த போராட்ட அறைகூவலின்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தன்மையையும் அதன் பிறகு சில விசயங்களில் நடைபெற்றுள்ள முன்னேற்றங்ளையும் , தேசிய கவுன்சில் மற்றும் மாநில கவுன்சில்களில் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் நமது சங்கத்துடன் NFTE சங்கம் ஒரு இணைந்த செயல்பாட்டுக்கு வருவது ஒரு நல்ல அம்சம் என்று சுட்டி காட்டினார் .தோழர் ராமசாமி மாவட்ட சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 500/- வழங்கினார் .அந்த கூட்டத்தில் தோழர் அய்யாசாமி மாவட்ட மாநாட்டு நிதியாக ரூபாய் 1000/- வழங்கினார் . தோழர் முனியாண்டி நன்றி கூற கூட்டம் இனிதே முடிவற்றது .
Friday, November 29, 2013
பணி ஓய்வு பாராட்டு
தோழர் மாரிமுத்து தலைமை உரை
மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு மாவட்ட செயலர் உரை
தோழர் அய்யாசாமி வாழ்த்துரை
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் ஒரு பகுதி
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் மற்றோர் பகுதி
தோழர் இளமாறனின் வரவேற்புரை
தோழர் S .P .முருகேசனின் ஏற்புரை
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் மற்றோர் பகுதி
மாவட்ட செயலர் உரை
மாவட்ட செயலர் உரை
தோழர் பெருமாள்சாமி முருகேசனை கௌரவித்தல்
மூத்த கணக்கு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரை
தோழர் S.P.முருகேசன் STM அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்க பொதுக்குழு கூட்டம் 29-11-2013 அன்று கிளை தலைவர் தோழர் Aமாரிமுத்து தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கிளை செயலர் தோழர்.M.Sஇளமாறன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நல்கினார். தந்தி பிரிவில் பணியாற்றி சிறப்பான சேவை செய்து ,நமது BSNLEU சங்கத்தின் ஒரு விசுவாசமான ஒரு தோழனாக 30-11-2013 அன்று பணி ஓய்வு பெறும் தோழர் முருகேசனை பாராட்டி மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் அவர்கள் பேசும் போது இன்றைய கடின சூழ்நிலையில் கூட நமது சங்கம் பல்வேறு சாதனைகளை செய்து வருவதை உதாரணங்களுடன் சுட்டி காட்டினார்.தோழர் முருகேசனை பாராட்டி தோழர்கள் அய்யாசாமி,பெருமாள்சாமி,மூத்த கணக்கு அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ,தோழர் K.R .K அவர்கள் பேசினர் .தோழர் சித்திரவேல் முருகேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்த,மாவட்டசெயலர் தோழர் ரவீந்திரன் சந்தனமாலை அணிவிக்க ,தோழியர் தனலட்சுமி அவர்கள் கிளை சங்கம் சார்பாக நினைவு பரிசை வழங்கினார்.தோழர் முருகேசன் ஏற்புரை நிகழ்த்தினார்.தோழர் சித்திரவேல் நன்றியுரை கூற கிளை கூட்டம் இனிதே நிறைவடைந்தது .
Thursday, September 5, 2013
Monday, July 1, 2013
Friday, June 28, 2013
தோழர் .M .பெருமாள்சாமி ,CTS பணி ஒய்வு பாராட்டு விழா
விருதுநகர் மாவட்ட தொலைத் தொடர்பு அலுவலக கிளைச்சங்கம் சார்பாக தோழர் M.பெருமாள்சாமி, CTS அவர்களுக்கு 28-06-2013 அன்று மாவட்டச்சங்க அலுவலகத்தில் பணி ஒய்வு பாராட்டு விழா - கிளைத்தலைவர் தோழர் A.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. தோழர் M.S.இளமாறன், கிளைச்செயலர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தோழர் M.பெருமாள்சாமி அவர்களின் சங்கப் பணிகளையும், ஊழியர்களின்பால் அவரிடம் இருந்த உதவி செய்யும் குணநலன்களையும், விருதுநகர் மாவட்டத்தில் K.G.போஸ் அணியை வளர்ப்பதில் தோழர் M.அய்யாசாமி, தோழர் K.சின்னமுனியாண்டி, தோழர் V.K.பரமசிவம், தோழர் T.ராதாகிருஷ்ணன், தோழர் நாகராஜன், தோழர் முருகேசன் அவர்களுடன் இணைந்து தோழர் M.பெருமாள்சாமி ஆற்றிய பணிகளை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
தோழரை வாழ்த்தி மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன், மூத்த கணக்கு அதிகாரி திரு. T.ராதாகிருஷ்ணன், தோழர் K.R.கிருஷ்ணகுமார், மாவட்ட உதவி செயலர். தோழர் M.முத்துசாமி, ஓய்வூதியர் சங்க தலைவர் S.முருகேசன், மாவட்ட பொருளர் தோழர் S.வெங்கடப்பன், SDOP கிளைச் செயலர் தோழர் C.சந்திரசேகரன், தோழியர் G.தனலெட்சுமி ஆகியோர் பேசினர். தோழர் G.சந்திரசேகரன் அவர்கள் தோழர் பெருமாள்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர் V.சுப்பிரமணியம் அவர்கள் சந்தன மாலை போட்டு கௌரவித்தார். மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் நினைவுப் பரிசை வழங்கினார். தோழர் T.சித்ரவேல் அவர்கள் நன்றியுரை கூறினார்.
தோழரை வாழ்த்தி மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன், மூத்த கணக்கு அதிகாரி திரு. T.ராதாகிருஷ்ணன், தோழர் K.R.கிருஷ்ணகுமார், மாவட்ட உதவி செயலர். தோழர் M.முத்துசாமி, ஓய்வூதியர் சங்க தலைவர் S.முருகேசன், மாவட்ட பொருளர் தோழர் S.வெங்கடப்பன், SDOP கிளைச் செயலர் தோழர் C.சந்திரசேகரன், தோழியர் G.தனலெட்சுமி ஆகியோர் பேசினர். தோழர் G.சந்திரசேகரன் அவர்கள் தோழர் பெருமாள்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர் V.சுப்பிரமணியம் அவர்கள் சந்தன மாலை போட்டு கௌரவித்தார். மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் நினைவுப் பரிசை வழங்கினார். தோழர் T.சித்ரவேல் அவர்கள் நன்றியுரை கூறினார்.
Tuesday, April 30, 2013
பணி ஓய்வு பாராட்டு
30-04-2013 அன்று நமது மாவட்டத்தின் முன்னணி ஊழியரும்,ராஜபாளையம் கிளைத் தலைவருமான நமது மாவட்டத்தில் K.G. போஸ் அணியை கட்டிய மூத்த தோழருமான P.தர்மராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா ராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. நமது மாநில உதவிச் செயலர்கள் தோழர்கள் M.முருகையா, தோழர் C.பழனிசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்க மூத்த தோழர் M.பெருமாள்சாமி அவர்கள் மாவட்டச் சங்கம் சார்பாக அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர்கள் M.கருப்பசாமி, A.சமுத்திரகனி, CITU தோழர் கணேசன், தோழர் M.அய்யாசாமி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தோழர் P.தர்மராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...










