Monday, December 30, 2013

பணி ஓய்வு பாராட்டு,







        


                 30-12-2013 அன்று சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகளின் சார்பாக தோழர் ராமசாமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.கிளை தலைவர்கள் தோழர் சிவபெருமான் மற்றும் தோழர் அழகுராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் ராமசாமி அவர்களுக்கு தோழர் ராஜாகனி அவர்கள் சந்தன மாலை அணிவிக்க  மாவட்ட செயலர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .தோழர் ராமசாமி அவர்களை வாழ்த்தி தோழர்கள் அய்யாசாமி ,கருப்பசாமி,ராஜு,ஜெயபாண்டியன் ஆகியோர் பேசினர் . தோழர் சமுத்திரகனி வாழ்த்தி பேசும் போது ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு பெரும் திரளாக செல்லவேண்டிய அவசியத்தை  கூறினார் . மாவட்ட செயலர் பேசிய போது அக்டோபர் 25 ஆம் தேதி நடை பெற இருந்த போராட்ட அறைகூவலின்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தன்மையையும் அதன் பிறகு சில விசயங்களில் நடைபெற்றுள்ள முன்னேற்றங்ளையும் , தேசிய கவுன்சில் மற்றும் மாநில கவுன்சில்களில் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் நமது சங்கத்துடன் NFTE  சங்கம்  ஒரு இணைந்த செயல்பாட்டுக்கு  வருவது ஒரு நல்ல அம்சம் என்று சுட்டி காட்டினார் .தோழர் ராமசாமி மாவட்ட சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 500/- வழங்கினார் .அந்த கூட்டத்தில் தோழர் அய்யாசாமி மாவட்ட மாநாட்டு நிதியாக ரூபாய் 1000/- வழங்கினார் . தோழர் முனியாண்டி நன்றி கூற கூட்டம்  இனிதே முடிவற்றது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...