Wednesday, December 25, 2013

வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகிவிடும்: ஊழியர் சங்கம்!

பல பணிகள் அவுட்சோர்சிங் மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், இன்னும் 10 ஆண்டுகளில் வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகிவிடும் என இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு மதுரை காளவாசலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடந்த இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அண்ணாத்துரை எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:
"இந்தியா சுதந்திரம் அடையும் வரை வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகவே இருந்தன. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தங்களது சொந்த தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தி, ரகசியமாக சொந்த ஆதாயம் பெற்றன.அதில் வேலை செய்த ஊழியர்களுக்கு எந்த சட்டப்பாதுகாப்பு கிடையாது. ஊதிய நிர்ணயம், வேலை உறுதியளிப்பு போன்ற சலுகைகளும் மறுக்கப்பட்டன. அதன்பின் வங்கிகளின் பயன், அதன் முக்கியத்துவம் கருதி வங்கிகளை மத்திய அரசு நாட்டுடமையாக்கியது. ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதனைதொடர்ந்து தான் வங்கி ஊழியர்களுக்கும் சட்டப்பாதுகாப்புகள் வழங்கப்பட்டன.ஆனால் தற்போது வங்கிகள் அனைத்தும் மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாராக்கடனுக்காக சொத்து பறிமுதல், வாடிக்கையாளரிடம் காசோலை ஒப்படைப்பது உள்பட பல்வேறு பணிகள் ‘அவுட்சோர்சிங்‘ மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதேநிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் அனைத்து வங்கிகளும் தனியார் மயமாகிவிடும். வங்கி ஊழியர்களுக்கான சட்டம் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதை தடுக்க வங்கி ஊழியர் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட வேண்டும். போராட்டத்தில் பொதுமக்களையும் இணைத்துக் கொள்வது முக்கியம்." என  அவர் பேசினார்.
                  <நன்றி :- இந்நேரம் .காம் >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...