Saturday, January 30, 2016

தோழர் ஜெயபாண்டி பாராட்டு விழாவும் 8 வது மாவட்ட செயற்குழுவும்

        28-01-2016 அன்று  விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 8 வது மாவட்ட செயற்குழு மற்றும் நமது OCB சிவகாசி கிளையின் செயலர் தோழர் A .ஜெயபாண்டியன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர் A .ஜெயபாண்டியன் அவர்கள் 25 ஆண்டு காலம் OCB கிளையின் செயலராக பணியாற்றியவர் . சிறந்த சேவைக்கான சஞ்சார் ஸ்ரீ விருது வாங்கிய தோழர் .விருதுநகர் மாவட்ட சங்க நிர்வாகிகளில் ஒரு துடிப்பு மிக்க தோழர் .தனது 55 வது வயதில் LONG STAY மாறுதலில் கிராமப்புற பகுதிக்கு எந்த முணு முணுப்பும் இன்றி சென்ற தோழர்.
          அவரைப் பாராட்டி அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகள் ,ஊழியர்கள் பாராட்டி பேசினர் .அவருக்கு மாவட்ட சங்கம் சங்கம் சார்பில் சந்தன மாலையை தோழர் சமுத்திரகனி அணிவிக்க ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவு பரிசை வழங்கினார் .AIBSNLEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் ,SR AO ,மற்றும் தோழர் நாராயணன் SR AO ஆகியோரும் , நமது ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,மற்றும் மாநில நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோரும்  பங்கேற்றனர்.
          அதன் பின் மாவட்ட செயற்குழு தோழர் சமுத்திரகனி தலைமையில் நடைபெற்றது தோழர் முத்துசாமி அஞ்சலி உரை நிகழ்த்த ,மாவட்ட செயலர் ஆய் படு பொருள மீது விரிவாக பேசினார் ..நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார் .மாவட்ட மாநாட்டு நிதி ,சரிபார்ப்பு தேர்தல் ,LONG STAY மாறுதல் , புன்னகையுடன் கூடிய சேவை ,விரிவடைந்த செயற்குழு நடத்துவது , ஆகியன விரிவாக விவாதிக்க பட்டன . மாவட்ட மாநாட்டு தேதியை அடுத்த செயற்குழுவில் விவாதித்து முடிவு எடுப்பது எனத் தீர்மானிக்க பட்டது.



















































11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...