Tuesday, February 26, 2013

ஒரு வரி செய்திகள்

1.EPF  வட்டி விகிதம் 8.25% இல் இருந்து 8.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது .
2.நமது சங்கத்தின் விரிவடைந்த சென்ட்ரல் ஒர்கிங் கமிட்டி ஆந்திரா மாநில வாரங்கல் நகரில் இன்று ( 26-02-2013 )முதல் 28-02-2013 வரை நடைபெற உள்ளது  .
3.78.2% IDA இணைப்பு விசயமாக DOT நிர்வாகம் கேட்ட  கேள்வி  அனைத்திற்கும் BSNL நிர்வாகம் பதில் அனுப்பிவிட்டது .

Monday, February 25, 2013

களத்தில் இறங்கிவிடு என் தோழா !


வந்து விட்டது 6 ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் 
             களத்தில் இறங்கிவிடு என் தோழா !
   பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும்  கூட்டம் 
             உங்களை   நோக்கி வருகிறது   
2 பைசாவிற்கு வடை பைசாவிற்கு டீ என்று சொல்லி 
   3 லட்சம் ஊழியர்களை அடகு வைத்த  கூட்டம் 
      ஓட்டு  கேட்டு உங்கள் முன் வருகிறது .
 போராட்ட  களத்தில் புறமுதுகு  இட்டவர்களை  
     தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த   
அடகு வைத்த கூட்டத்தை 5 ஆவது  முறையாக 
 துடைத்து எறிந்து  ஆர்ப்பரித்து களத்தில் இறங்கி 

                   செல் போன் சின்னத்தில்   
            வாக்கு  சேகரிக்க புறப்படு என் தோழா !


Sunday, February 24, 2013

செவ்வணக்கம்

பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தில் நமது மாவட்டத்தில் 162 ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர் .162 பேர் விடுமுறை எடுத்துள்ளனர் .193 பேர் பணிக்கு வந்துள்ளனர் .வழக்கம் போல் NFTE சங்கத்தினர் கருங்காலி வேலை பார்த்துள்ளனர் .நமது சங்கத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 50% பேர்  வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது பாராட்டதக்கது . போராட்டத்தில் 3 அதிகாரிகள் கலந்து கொண்டது சிறப்பு மிக்க அம்சமாகும் .அந்த மும்முத்துக்கள் தோழர் .கோவிந்தராஜன்,SDO ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,தோழர் .T ,ராதாகிருஷ்ணன், SR AO விருதுநகர்  மற்றும் தோழர் .சின்னமுனியாண்டி ,SDE ,சிவகாசி 

Thursday, February 21, 2013

மின் கட்டண உயர்வு எதிரொலி- பல்கேரியாவில் அரசு கவிழ்ந்தது!


கடுமையான மின் கட்டண உயர்வால் பல்கேரியா நாட்டு அரசாங்கம் கவிழ்ந்து போயிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் அண்மையில் கடுமையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது அந்நாட்டு மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலும் வெடித்தது. இதைத் தொடர்ந்து பல்கேரியாவின் பிரதமர் போரிசாவ் நேற்று ராஜினாமா செய்தார். இதே போல்  மக்கள் எழுச்சி இந்தியாவிலும் மாற்றம் கொண்டுவரும் . அதுதான் பிப்ரவரி 20,21 போராட்டம் .


நாசகர கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய கிளர்ச்சி வேலை நிறுத்தம் முழு வெற்றி


அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள், ஊழியர் சம்மேளனங்கள் அழைப்பு விடுத்திருந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் புதனன்று காலை துவங்கியது. இந்தவேலைநிறுத்த அறப்போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்தப்போராட் டத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, தொமுச ஆகிய சங்கங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளன.இந்த வேலைநிறுத்தத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பேராதரவு நல்கினர். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்கட்டணம், பேருந்து கட்டணம் உயர்வு, அனைத்து அத்தி யாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு ஆகியவற்றினால் இந்திய மக் கள் எந்த அளவுக்கு கோபத்துடன் உள் ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த வேலைநிறுத்தம் அமைந்தது. 2012ம் ஆண்டு செப்டம்பரில் நடை பெற்ற மாநாட்டில் பிப்ரவரி 20, 21 தேதி களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத் தன. மத்திய அரசும் மாநில அரசுகளும் கடுமையான மிரட்டல்விடுத்தபோ தும் அதையும் மீறி நாட்டையே ஸ்தம் பிக்கச் செய்யும் அளவுக்கு வேலை நிறுத்தம் முழு வெற்றிபெற்றுள்ளது.தலைநகர் தில்லி உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலும் வங்கிப் பணிகள் வேலைநிறுத்தம் காரணமாக முற்றாக முடங்கின. வேலைநிறுத்தத் தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். காப்பீட்டுத்துறையிலும் வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. பெட்ரோலியம், தொலைதொடர்பு, சுரங்கம், நிலக்கரி, பாதுகாப்புத்துறை, அணுசக்தி உள்ளிட்ட மின்துறை, மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள் முழு அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வருமானவரி மற்றும் அஞ்சல் சேவையும் பாதிக்கப்பட்டது.நாடு முழுவதுமுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ரயில், பேருந்து, ஆட்டோ என போக்குவரத்துத் தொழிலாளர்களும் பெருமளவு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் பெரும் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முறைசாரா தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற் றனர்.அருணாச்சலபிரதேசம் துவங்கி குஜராத் வரை, காஷ்மீர் துவங்கி கன் னியாகுமரி வரை நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அசாம், பீகார், ஒடிசா, பஞ்சாப், ஹரி யானா, ராஜஸ்தான், கேரளம், ஆந்தி ரம், தமிழ்நாடு, கர்நாடகம் என அனைத்து மாநிலங்களிலும் வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. கேரளம் மற்றும் திரிபுராவில் கடைகள், பள்ளிகள் அடைக்கப்பட் டிருந்தன. வேலைநிறுத்தம் இந்த மாநி லங்களில் பந்த் போராட்டமாக மாறியது.கேரளத்தில் இயல்பு வாழ்க்கை முற் றாக ஸ்தம்பித்தது. தனியார் பேருந் துகள் உள்பட பேருந்துகள் ஓடவில்லை. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் மம்தா அரசின் மிரட்டல்களை மீறி தொழிலாளர்கள் பெரும் எழுச்சியுடன் வேலைநிறுத்தத் தில் பங்கேற்றனர். 10 அம்சக்கோரிக்கைளை முன் வைத்து நடைபெற்ற வேலைநிறுத்தத் தை வெற்றிகரமாக்கிய தொழிலாளர் கள் ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.வேலைநிறுத்தம் வியாழனன்றும் முழுமையாக நடைபெற உள்ளது. இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக இருநாட்கள் முழுமையாக வேலை நிறுத்தம் நடைபெறுவது முன்னெப் போதும் நடந்திராத ஒன்றாகும்.

கிரீஸை செயலிழக்கச் செய்த வேலைநிறுத்தம்


கிரீஸ் நாட்டில் சம்பள வெட்டு, அதிக வரி ஆகியவை உள்ளிட்ட சிக்கன நட வடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் கிரீஸ் நாடு செயலற்று நின்றது. படகுகள் துறைமுகங்களில் முடங்கி நின்றன. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகளில் அவசர உதவியாளர்களைத் தவிர மற்றவர்கள் வெளியேறினர்.கிரீஸின் இரண்டு பெரும் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தன. அரசு செயல்படுத்தி வரும் சிக்கன நடவடிக்கைகள் ஏழை, எளிய மக்களின் வாழ் நிலையை சிதைக்கக் கூடியதாக உள்ளது என்று அவை தெரிவித்தன. அமைதிக்காலத்தில் நடந்து வரும் பொருளாதார பின்னடைவுகளால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவை கூறின.இந்த தொழிற்சங்கங்களில் 25 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2009ம் ஆண்டில் ஐரோப்பா பொருளாதார நெருக்கடியில் சிக்கியதிலிருந்து, அரசு தன்னுடைய முதலாளிகள் ஆதரவு கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர் ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.தொழிலாளர்களின் வாழ்வைப் பறித்துவரும், சமுதாயத்தை வறுமையில் ஆழ்த்தும், நாட்டின் பொரு ளாதாரத்தை பின்னடைவை நோக்கியும், சிக்கலை நோக்கியும் நகர்த்திச் செல்லும் அரசின் மீள்வில்லா கொள்கைகளுக்கு இது தான் தொழிலாளி வர்க்கத் தின் பதில் என்று தனியார் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கமான ஜிஎஸ் இஇ கூறியது. இந்தச்சங்க மும், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கமான ஏடிஇடிஒய் சங்கமும் சேர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இக் கொள்கைகள் தொடரும் வரை தங்களுடைய போராட்டங்கள் தொடரும் என்றும் அவை கூறின.கிரீஸ் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு இரண்டு முறை இருபதாயிரம் கோடி யூரோக்களுக்கு மேல் நிதியுதவி அளித்த ஐரோப்பிய யூனியன், சர்வ தேச நிதியம் ஆகியவற் றுக்கு வாக்குறுதி அளித்த படி சீர்திருத்தங்களை அமல்படுத்த பிரதமர் அண் டோனிஸ் சாமராஸ் தலை மையிலான கூட்டணி அரசு ஆர்வம் காட்டிவருகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது கடுமையான நிலைபாட் டை இந்த அரசு எடுத்து வரு கிறது. இரண்டு முறை அவ சரச்சட்டங்களை அவர்கள் மீது பாய்ச்சியுள்ளது. அண்மை வாரங்களில் வேலைநிறுத்தங்கள் பரவி வருகின்றன. கிரீஸ் பத்திரி கையாளர்கள் செவ்வாய் அன்று மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்டேயின் ஒருநாள் பயணம் செய்தித்தாள்களில் இடம்பெறவில்லை. வடக்கு மற்றும் மத்திய கிரீஸில் அதிகரித்து வரும் உற்பத்தி செலவு, எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்த்து விவசாயிகள் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். பல வேளைகளில் அவர்கள் சாலைமறியல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.புதன்கிழமை நடந்த வேலைநிறுத்தத்தால் வர்த்தகம் மற்றும் பொதுத்துறை நடவடிக்கைகள் நின்று விட்டன. பள்ளி ஆசிரியர்கள், ரயில், பேருந்து, வங்கிகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

Sunday, February 17, 2013

பிப்ரவரி 20.21 போராட்டம்

























பிப்ரவரி 20.21 போராட்டத்தை நமது விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற செய்வோம் .

+2 படிக்காதவர்களுக்கு TTA தகுதி தேர்வு

+2 படிக்காதவர்களுக்கு TTA தகுதி தேர்வு நடத்துவது விசயமாக  BSNL நிர்வாகம்  ஏற்கனவே ஏற்றுக்கொண்டு TTA ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து தகுதி தேர்வு நடத்த BSNL BOARD அனுமதி கொடுத்த பின்பும் நிர்வாகம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட தாமதம் செய்கிறது .இதனிடையே சென்னை நிர்வாக  தீர்பாணயம் ஒரு ஊழியர் ஒரு முறை தகுதி தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் போட்டி தேர்வில் எத்தனை முறையும் தேர்வு எழுதலாம் என்றும் ,.தகுதி தேர்வில் வெற்றிபெற்று போட்டி தேர்வால் தோல்வி அடைந்தால் மீண்டும் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை என்று    தீர்ப்பு அளித்துவிட்டது .நமது சங்கம் இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியதை நிர்வாகம் ஏற்று கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்தில் SLP பெட்டிசன் தாக்கல் செய்துள்ளது .இதனால்  +2 படிக்காதவர்களுக்கு TTA தகுதி தேர்வு நடத்துவது  காலதாமதம் ஆகும் . 

ஸ்பெயின்: வீடுகளை விட்டு வெளியேற்றும் சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்


சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்த நிலை காரணமாக ஸ்பெயின் நாட்டில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டது. இதன்காரணமாக வேலையிழந்த பலர் தாங்கள் வாங்கிய கடன் மற்றும் வங்கி லோன் மூலம் வாங்கிய வீடுகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறினர்.இதன்காரணமாக வங்கிகள் அடமான மற்றும் வெளியேற்ற சட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கானவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியது. இந்த கடுமையான சட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. முக்கிய நகரங்களான பார்சிலோனா, பாம்ப்லோனா, வாலென்சியா, செவில்லே உள்ளிட்ட நாட்டின் 50 நகரங்களில் ஒரே நேரத்தில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.வேலை இன்மையின் காரணமாக தங்களது அடமான தொகையை திருப்பி செலுத்த இயலாத 3,50,000 மக்களுக்கு 'வெளியேற்ற ஆணை 'யை  அடமான நிறுவனங்கள் வழங்கியுள்ளன. வேலையில்லா திண்டாட்டம் இளைய தலைமுறையினரையும் மிக மோசமாக பாதித்துள்ளது.வீட்டை காலி செய்த பின்னரும் அவர்கள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அடமானத்தில் இருப்பதால் வீடுகளை விற்க முடியாத நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அதனால், வீட்டை எடுத்துக்கொண்டு கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். காலியான வீடுகளை வாடகைக்கு விடவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.பிரதமர் மரியானோ ரஜொயின் தலைமையிலான அரசு நாட்டின் அடமான மற்றும் வெளியேற்ற சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது. இந்த திருத்த நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற நீண்ட காலம் எடுக்கும் என்பதால், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது அரசு உடனே ஏற்க வேண்டும் என்று மக்கள் கேட்டுள்ளனர்                                .நன்றி:- மாலை மலர்  

Saturday, February 16, 2013

பிப்ரவரி 20,21க்கான Strike Notice

பிப்ரவரி 20, 21 இரண்டு நாட்கள் அனைத்து மத்திய சங்கங்களும் கலந்து கொண்டு நடைபெறஉள்ள வேலைநிறுத்தத்தை நாம் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமானதாக்குவோம்.

14 சங்கங்களின் தேசியத் தலைவர்கள் கையெழுத்திட்டு நிர்வாகத்திற்கு அளித்த

Friday, February 15, 2013

UNITED FORUM கூட்டம் மற்றும் சில தகவல்கள்

            UNITED  FORUM கூட்டம் வரும் 17-02-2013 அன்று மதியம் 3 மணி அளவில் TEPU சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த;f கூட்டத்தில் 6 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான  பிரசார யுக்தி மற்றும் சுற்றுபயணம் பற்றி முடிவு எடுக்கப்படும்.

            ITS அதிகாரிகள் பிரச்சனையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று BSNL நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி பண்ணிவிட்டது .அதனுடைய முந்தைய தீர்ப்பை  6 வார காலத்திற்குள்  அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

            தேர்தல் வரை நமது சங்க அங்கீகாரம் நீட்டிக்கபட வேண்டும் என நாம் கோரியதை தலைமைத் தொழிலாளர் ஆணையர் முடிவிற்கு நிர்வாகம் காத்துள்ளது .

பெருந்திரள் தர்ணா











            15-02-2013 அன்று அனைத்து சங்கங்கள் சார்பாக 78.2 % IDA  இணைப்பு தொடரபாக தேசம் தழுவிய அளவில் நடைபெற்ற தர்ணாவின்  ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் திரு P.கோவிந்தராஜன், SNEA,  மாவட்ட உதவி செயலர் தலைமையில் தர்ணா போராட்டம்   மாவட்ட தொலை தொடர்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. போராட்டத்தை AIBSNLEA மாநில பொறுப்பாளர் திரு T.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து 78.2% IDA விசயமாக DOT திட்டமிட்டு காலதாமதம் செய்வதை  விரிவாக  எடுத்துரைத்தார். BSNLEU மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் இன்றைய அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுரிதினார்.

            TEPU சங்க மாவட்ட செயலர் தோழர் த.ஜெபக்குமார், BSNLEU  மாவட்ட தலைவர் தோழர் A. சமுத்திரகனி, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் A.கண்ணன், AIBDPA  மாவட்ட செயலர் தோழர் M.அய்யாசாமி ஆகியோர் வரும் பிபரவரி மாதம்  20,21 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றி விரிவாக  பேசினார்கள்.

            தோழர் M.S.இளமாறன் கோஷங்கள் எழுப்ப தர்ணா சிறப்பாக நிறைவு பெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். வழக்கம் போல் NFTE சங்கம் தர்ணாவில் கலந்து கொள்ளவில்லை.  

Tuesday, February 12, 2013

உலகின் டாப் 20 சோம்பேறி நாடுகள்

          உலகின் டாப் 20 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் மால்டா உள்ளது. இந்த பட்டியலில் சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் கூட 11வது இடத்தில் உள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. தென் ஆப்பிரிக்கா, பூடான், நமீபியா, ஈராக், துருக்கி, சைப்ரஸ், இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கூட இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- ONE INDIA

ஹெலிகாப்டர் ஊழல்


          இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது. இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

          இந்தியாவைச் சேர்ந்த ராணுவ பிரிகேடியர் ஒருவர் மூலமாக இந்த இந் நிறுவனத்தின் தரகர்கள் பேச்சு நடத்தி, இந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்றுள்ளனர். பேரம் முடிவடைந்து ரூ. 3,546 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றது இத்தாலிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்ததையடுத்து ரூ. 470 கோடி அளவுக்கு இந்தியத் தரப்புக்கு லஞ்சமாகத் தந்துள்ளது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இந்தப் பணம் இந்தியாவில் யார், யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு இந்திய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் விரைவில் இந்த வழக்கை சிபிஐ வசம் மத்திய அரசு ஒப்படைக்கும் என்றும் கூறப்படுகிறது. தொடரும் ஊழல் ! தாங்குமா இந்திய தேசம் !
நன்றி : ONE INDIA

Sunday, February 10, 2013

அகில இந்திய BSNL அதிகாரிகள் சங்க மாநில செயற்குழு

          தொலைதொடர்புத்துறை நிறுவனத்தை மத்திய அரசும், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகமும் நிதி நெருக்கடியில் தள்ளுவதாக அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு கடலூரில் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்றது. சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை சமர்ப்பித்தார். சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.வேணுகோபால்,பிஎஸ்என்எல் நிறுவன முதன்மைப் பொதுமேலாளர் அஷ்ரப்கான், கடலூர் பொதுமேலாளர் லியோஆண்டனி மார்ஷல் ஆகியோர் பேசினர். வரவேற்புக்குழு செயலாளர் பி. வெங்கடேசன் நன்றி கூறினார். 

          
          பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும், தொலை தொடர்புத் துறை பிஎஸ்என்எல்-க்கு தருவதாக ஒத்துக் கொண்ட ரூ. 6700 கோடியை தராமல் தாமதிப்பதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. ஸ்பெக்ட்ரம் கட்டணமாக பிஎஸ்என்எல் இடமிருந்து வசூலித்த ரூ.18500 கோடி முறையற்றது என்பதைச் சுட்டிக் காட்டிய பின்பும், திருப்பித் தராமல் வஞ்சிக்கும் போக்கு தொடர்கிறது. பிஎஸ்என்எல் பொதுத் துறையாகவே நீடிக்க, மக்கள் சொத்தாக தொடர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

          தரைவழி இணைப்புகளை கொடுப்பதற்கு வாய்ப்பிருந்தும், தேவையான கருவிகளையும், உபகரணங்களையும், வாங்குவதில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பொது மக்களுக்கு சிறந்த சேவையை தரும் வகையில் போதுமான கேபிள், மோடம் மற்றும் வயர்களை தில்லி பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Saturday, February 9, 2013

திருவில்லிப் புத்தூருக்கு நன்றி

          
          சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் கண்ணன் புகழ் பாடிய ஸ்ரீவில்லிபுத்தூரில், BSNLEU புகழ் பாடிய நமது ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. எதிர் பார்த்ததைவிட கூடுதல் தோழர்கள் வந்த பின்பும் அயராமல் உணவு ஏற்பாடு செய்து பம்பரமாய் பணி யாற்றிய தோழர்கள் ராஜாராம், சமுத்திரம், ஆறுமுகம், ராமநாதன், சேது, சுந்தர மகாலிங்கம், பாண்டி, காளிதாஸ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் வேல்சாமி, மாயகிருஷ்ணன், திருப்பதி, சஞ்சீவீ, பால்ராஜ், கோபால் ஆகியோருக்கும், மிகச்சிறப்பாய் செயற்குழு நடத்த அல்லும் பகலும் பாடுபட்ட தோழர்கள் புளுகாண்டி, வெங்கடேஸ்வரன், தோழியர் பகவதி, கிளைச் செயலர் தோழர் L.தங்கதுரை ஆகியோருக்கும், தோளோடு தோள் கொடுத்து வேலை செய்த ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும், நமது செயற்குழுவில் பங்கேற்ற பணி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் தோழர் அய்யாசாமி, தோழர் முத்தையா ஆகியோருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி.

Friday, February 8, 2013

பிப்ரவரி 20, 21பொதுவேலை நிறுத்தம்

          பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் பொதுவேலை நிறுத்தம் செய்வது என்று சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர், மாநில அரசு ஊழியர், வங்கி காப்பீடு, தொலைதொடர்பு, பாதுகாப்புத்துறை போன்ற 40க்கும் மேற்பட்ட துறை வாரியான சம்மேளனங்களும் இணைந்து அறிவிப்பு விடுத்துள்ளன.

          விலைவாசியை கட்டுப்படுத்து, வேலைபாதுகாப்பை உறுதிபடுத்தி வேலை வாய்ப்புகளை பெருக்கு, தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்து, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை உறுதி செய், தொழிற்சங்க உரிமைகளை அமல்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

          பொதுத்துறையை விற்பனை செய்வது, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூலதனத்தை அனுமதிப்பது, பொதுவினியோக பொருட்களுக்கு பணம் தந்து விடுவோம் என்று கூறி படிப்படியாக உணவு மானியத்தை கைவிடும் முயற்சியில் ஈடுபடுகின்ற மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் நமது BSNLEU முழுமையாக பங்கேற்க உள்ளது.

          பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெறும் அனைத்திந்திய வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்திட நமது மாவட்ட சங்கம் அனைவரையும் கேட்டு கொள்கிறது.

திருவில்லிபுத்தூர் கிளை மாநாடு


          திருவில்லிபுத்தூர் கிளை மாநாடு 08-02-2013 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தோழர் தங்கவேல், STS  அவர்கள் தலைமை தாங்க தோழர் L.தங்கதுரை வரவேற்புரை நிகழ்த்தினார். கிளை மாநாட்டை தோழர் S.ரவீந்திரன்மாவட்ட செயலர் தொடக்கி வைத்தார்.  மாநில உதவி செயலர் தோழர் சி.பழனிசாமி சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் I.R.கணேசன், CITU, ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்த்துரை வழங்கினார்.

          புதிய நிர்வாகிகளாக தோழர்கள் L.தங்கதுரை, TM; G.வெங்கடசாமி, TM; P.சுந்தர மகாலிங்கம், TM ஆகியோர் முறையே தலைவர்செயலர் மற்றும் பொருளாளராக  தேர்ந்து எடுக்கப்பட்டனர். 

மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்புக் குழு

          விருதுநகர் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்புக் குழு 08-02-2013 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் உருவாக்கபட்டுள்ளது.
கீழ் கண்டோர் நிர்வாகிகளாக நியமிக்க பட்டனர்.

மாவட்ட தலைவர்          :   தோழியர்  P .பகவதி, ஸ்ரீவில்லிபுத்தூர்


துணை தலைவர்கள்        : தோழியர்  N .மங்கையர்க்கரசி, விருதுநகர்

                                                        தோழியர் ஜெயஜோதி, சாத்தூர்

                              தோழியர் S .செல்வதேவி, ராஜபாளையம்


செயலர்                                            : தோழியர் G .தனலட்சுமி, விருதுநகர்   


உதவி செயலர்கள்                       : தோழியர் M .R . ஆலீஸ், அருப்புகோட்டை

                                 தோழியர் S .கல்யாண சுந்தரி,சிவகாசி

                                  தோழியர் R .ஜான்சிராணி, சிவகாசி


பொருளாளர்                            : தோழியர்.S .பாண்டி செல்வி,  விருதுநகர்


துணை பொருளாளர்       : தோழியர்..M .ராமலக்ஷ்மி, விருதுநகர்


புதிய நிர்வாகிகளுக்கு BSNLEU மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்வாழ்த்துக்கள்

விரிவடைந்த செயற்குழுவும் சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கமும்





















          விருதுநகர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் 08-02-2013 அன்று தோழர் A .சமுத்திரகனி, மாவட்ட தலைவர் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தோழர் தங்கராஜ் நினைவரங்கில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

          தோழர் கே.புளுகாண்டி நமது சங்கக் கொடியை ஏற்ற, தோழர் M.S.இளமாறன் கோஷங்கள் எழுப்ப, செயற்குழு இனிதே துவங்கியது. தோழர் L.தங்கதுரை வரவேற்ப்புரை நிகழ்த்தினார். மாவட்டத் துணை செயலர் Mமுத்துசாமி அஞ்சலித் தீர்மானத்தை வாசிக்க, மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் துவக்க உரை ஆற்றினார்SNEA மாவட்டத் துணை செயலர் திரு. R.கோவிந்தராஜன், SDOT, ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்த்துரை வழங்கினார்.

                    தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் தோழர் லட்சுமண பெருமாள் நகைசுவையுடன் இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி பேசினார். உழைக்கும் மகளிர் ஒருங்கினைப்பு குழு மாநில கனவீனர் தோழியர் V .P .இந்திரா சிறப்புரை நிகழ்த்தினார்.

          சேவை மேம்பட்டுக் கருத்தரங்கை நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் A.கண்ணன், TTA   தொடக்கஉரையாற்றித் தொடக்கி வைத்தார். இதில் நமது DGM திரு. s.ராதாகிருஷ்ணன், CAO (F) திரு. S.ஆழ்வார் சாமி மற்றும் திரு. R.தனுஷ்கோடி, AGM (Admin) ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கை தோழர் C.பழனிசாமி, மாநில உதவிச் செயலர் நிறைஉரையாற்றி முடித்து வைத்தார்.

          தோழர் S.வெங்கடப்பன் நன்றி உரை நிகழ்த்த விரிவடைந்த மாவட்டச் செயற்குழு இனிதே நிறைவுற்றது. செயற்குழுவில் 211 தோழர்களும், ஒப்பந்த ஊழியர்கள் 10 பேரும் கலந்து கொண்டனர்.

Monday, February 4, 2013

பகிர்ந்து கொள்வதற்கான சில தகவல்கள்

1.டெலிகாம் மெகானிக் போட்டித்தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு :-
      ஜெனரல் :40 வயது 
      OBC           :43  வயது 
      SC              : 45  வயது
இந்த வயது வரம்பை மேலும் தளர்த்த 30-01-2013 அன்று நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் நாம் வலியுறுத்தி உள்ளோம். நிர்வாகம் கவனமுடன் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.

2. நமது சங்க அங்கீகார காலத்தை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி நமது மத்திய சங்கம் துணைமுதன்மை தொழிலாளர் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.

3. பிபரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு  முறையான நோட்டீஸ் நிர்வாகத்திற்கு கொடுத்தாகிவிட்டது. இதில் BSNLEU, NFTE (BSNL ), TEPU ,SEWA BSNL, BSNLWRU, BTEU (BSNL), BSNL MS, ATM  மற்றும் பல சங்கங்கள் கையெழுத்து  இட்டுள்ளன.

4. JTO போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வெளியிட நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

Friday, February 1, 2013

இந்தியாவின் எளிமையான மற்றும் நேர்மையான முதல் அமைச்சர்

ஒரு சில நாட்களுக்கு  முன் செய்திதாள்களில் ஒரு முன்னால் முதல் அமைச்சருக்குபிரைமரி ஸ்கூல் ஆசிரியர்களை நியமனம் செய்ததில்  ஊழல்  செய்ததற்கு   10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்ததை நாம் அறிவோம்.  இந்த   UPA அரசு ஊழலின் மொத்த உருவமாக திகழகிறது . 2G  ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி , நிலைகரி  ஊழலில் 1.86 லட்சம் கோடி ,காமன்வெல்த் ஊழல் என நமது இந்திய தேசமே இவர்கள் ஊழலுக்கு சாட்சியாய் உள்ளது . 65 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பெரும் பாலான மக்கள் வறுமை கோட்டில் வாடும் போது ஊழல் அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியில் பணத்தை முடக்கு கிறார்கள் .இப்பேர் பட்ட தேசத்தில்  திரிபுரா மாநில முதல் அமைச்சர் மாணிக் சர்க்கார் அவர்களுக்கு 2,20,000 மதிப்பு உள்ள ஒரு தகர வீடு மட்டுமே உள்ளது .அவர் கையீருப்பில் பணமாக Rs.1080/- ம் ,வங்கியில் RS .9720/- மட்டுமே உள்ளது  என்பது குறிப்பிடதக்கது ..அவருடைய மாத ஊதியம் RS .9200/- மட்டுமே .இவரல்லவா  இந்தியாவின் எளிமையான மற்றும் நேர்மையான முதல் அமைச்சர் .

கேடர் பெயர் மாற்றம் & UNITED FORUM கூட்டணி

          கேடர் பெயர் மாற்றம் தொடர்பாக நேற்று  நடைபெற்ற கூட்டத்தில் டெலிகாம்  மெக்கானிக் கேடரின் பெயர் "டெலிகாம்  டெக்னீசியன்" என்றும் ரெகுலர்  மஸ்தூர்  கேடரின் பெயர் "டெலிகாம் அசிஸ்ட்டண்ட்" என்றும் மாற்றம்  செய்ய உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

          SRTOA மற்றும் TTA கேடர் பெயர் மாற்றம் விசயமாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.

          30-01-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் தற்போது உள்ள கூட்டணி தொடரும் என்றும் மேலும் கூட்டணியை பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக UNITED FORUM  மீண்டும் வரும் 17-02-2013 அன்று கூட உள்ளது .

மத்திய சங்கச் செய்திகள்

1. NE -12 SCALE இல் 1 வருடம் சேவை  முடித்த 10% ஊழியர்களுக்கு E1 PAY SCALE 16400-40500 கொடுக்க  நடந்து முடிந்த (30-01-2013) தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

2. 30-01-2013 அன்று நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் சுகேந்தர்பால்சிங் கொலைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து வெளிநடப்பு செய்து நமது எதிர்ப்பைப் பதிவு செய்து உள்ளோம்.

3. கேடர் பெயர் மாற்றம் தொடர்பாக 31-01-2013 அன்று நடைபெறஉள்ள கூட்டத்தில் சில முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...