Thursday, February 21, 2013

கிரீஸை செயலிழக்கச் செய்த வேலைநிறுத்தம்


கிரீஸ் நாட்டில் சம்பள வெட்டு, அதிக வரி ஆகியவை உள்ளிட்ட சிக்கன நட வடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் கிரீஸ் நாடு செயலற்று நின்றது. படகுகள் துறைமுகங்களில் முடங்கி நின்றன. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகளில் அவசர உதவியாளர்களைத் தவிர மற்றவர்கள் வெளியேறினர்.கிரீஸின் இரண்டு பெரும் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தன. அரசு செயல்படுத்தி வரும் சிக்கன நடவடிக்கைகள் ஏழை, எளிய மக்களின் வாழ் நிலையை சிதைக்கக் கூடியதாக உள்ளது என்று அவை தெரிவித்தன. அமைதிக்காலத்தில் நடந்து வரும் பொருளாதார பின்னடைவுகளால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவை கூறின.இந்த தொழிற்சங்கங்களில் 25 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2009ம் ஆண்டில் ஐரோப்பா பொருளாதார நெருக்கடியில் சிக்கியதிலிருந்து, அரசு தன்னுடைய முதலாளிகள் ஆதரவு கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர் ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.தொழிலாளர்களின் வாழ்வைப் பறித்துவரும், சமுதாயத்தை வறுமையில் ஆழ்த்தும், நாட்டின் பொரு ளாதாரத்தை பின்னடைவை நோக்கியும், சிக்கலை நோக்கியும் நகர்த்திச் செல்லும் அரசின் மீள்வில்லா கொள்கைகளுக்கு இது தான் தொழிலாளி வர்க்கத் தின் பதில் என்று தனியார் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கமான ஜிஎஸ் இஇ கூறியது. இந்தச்சங்க மும், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கமான ஏடிஇடிஒய் சங்கமும் சேர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இக் கொள்கைகள் தொடரும் வரை தங்களுடைய போராட்டங்கள் தொடரும் என்றும் அவை கூறின.கிரீஸ் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு இரண்டு முறை இருபதாயிரம் கோடி யூரோக்களுக்கு மேல் நிதியுதவி அளித்த ஐரோப்பிய யூனியன், சர்வ தேச நிதியம் ஆகியவற் றுக்கு வாக்குறுதி அளித்த படி சீர்திருத்தங்களை அமல்படுத்த பிரதமர் அண் டோனிஸ் சாமராஸ் தலை மையிலான கூட்டணி அரசு ஆர்வம் காட்டிவருகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது கடுமையான நிலைபாட் டை இந்த அரசு எடுத்து வரு கிறது. இரண்டு முறை அவ சரச்சட்டங்களை அவர்கள் மீது பாய்ச்சியுள்ளது. அண்மை வாரங்களில் வேலைநிறுத்தங்கள் பரவி வருகின்றன. கிரீஸ் பத்திரி கையாளர்கள் செவ்வாய் அன்று மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்டேயின் ஒருநாள் பயணம் செய்தித்தாள்களில் இடம்பெறவில்லை. வடக்கு மற்றும் மத்திய கிரீஸில் அதிகரித்து வரும் உற்பத்தி செலவு, எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்த்து விவசாயிகள் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். பல வேளைகளில் அவர்கள் சாலைமறியல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.புதன்கிழமை நடந்த வேலைநிறுத்தத்தால் வர்த்தகம் மற்றும் பொதுத்துறை நடவடிக்கைகள் நின்று விட்டன. பள்ளி ஆசிரியர்கள், ரயில், பேருந்து, வங்கிகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...