Showing posts with label சிவகாசி. Show all posts
Showing posts with label சிவகாசி. Show all posts

Tuesday, May 13, 2014

2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

        நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட செயற்குழு தோழர் சமுத்திரகனி, மாவட்ட தலைவர் தலைமையில் சிவகாசியில் நடைபெற்றது. தோழர் M.முத்துசாமி, மாவட்ட துணைச்செயலர் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க, தலைவர்  தலைமை உரை நிகழ்த்தினார். நமது மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளில் பெரும் தேக்கம் உள்ளதை அவர் சுட்டி காட்டினார். ஸ்தலமட்ட பிரச்சனைகளை அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் செயற்குழுவில் சுட்டி காட்டினர். மாவட்ட செயலர் சமர்ப்பித்த அறிக்கையின் மீது விவாதம் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய மாநாட்டிற்கு சார்பாளர்களாக தோழர் ரவீந்திரன், தோழர் சமுத்திரகனி, தோழர் முத்துராமலிங்கம், TTA ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பார்வை யாளர்களாக  8 தோழர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களை அனுமதிப்பதில் மாநில மற்றும் அகில இந்திய சங்கங்கள் காட்டும் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும். லாங்ஸ்டே மாறுதல்கள் பற்றி ஒரு முறை நிர்வாகம் நமது  சங்கத்தையும், NFTE சங்கத்தையும் அழைத்து விவாதித்துள்ளது. மீண்டும் விவாதம் 16-5-2014 அன்று நடைபெற உள்ளது. RGB தேர்தலில் 2 இடங்களையும் நாம் வெற்றி பெற்றதற்கு அனைத்து நிர்வாகிகளையும் மாவட்ட சங்கம் மனதார பாராட்டியது. 30-8-2014 அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சிவகாசியில் தோழர் செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பணி ஒயவு பாராட்டு விழாவோடு இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழுவிற்கு வந்த அனைவருக்கும் விருந்து தந்து உபசரித்த மாவட்ட உதவி தலைவர் தோழர் G .ராஜு அவர்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. 31-05-2014 அன்று பணி ஓய்வு பெற உள்ள தோழர் ராஜாகனி அவர்கள் மாவட்ட சங்கத்தால் கௌரவிக்கபட்டார்.வொர்க் கமிட்டி பொறுப்பில் இருந்து தோழர் சந்திரசேகரன்  விடுவிக்கபட்டு தோழர் U .B .உதயகுமார் ,SSS அவர்கள் நியமிக்க படுவதற்கு மாவட்ட செயற்குழுவில் உரிய ஒப்புதல் பெறப்பட்டது .

Sunday, April 27, 2014

சிவகாசியில் "பைபர் டூ தி ஹோம்'; பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

            பி.எஸ்.என்.எல்., சார்பில்,சிவகாசியில் ,அதிவேக இன்டர் புதிய சேவையாக, "பைபர் டூ தி ஹோம்' அறிமுகம் செய்துள்ளனர்.தொலை தொடர்பு துறையில், காலத்திற்கு ஏற்ப, புதிய தொழில் நுட்பங்கள் எது வந்தாலும், தொழில் நகரான சிவகாசியில் அறிமுகம் செய்வது வாடிக்கை. கடந்த ஆண்டுகளில் 3ஜி சேவை ,மாவட்டத்திலே முதன்முறையாக சிவகாசி, விருதுநகரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது புதிய தொழில் நுட்பத்திலான "பைபர் டூ தி ஹோம்' என்ற அதிவேக இன்டர்நெட் சேவை, மாவட்டத்திலேயே முதன்முறையாக, சிவகாசியில் அறிமுகம் செய்துள்ளது, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம். தற்போது பி.எஸ்.என்.எல்., இன்டர் நெட் சேவை, காப்பர் கேபிள் மூலம் டெலிபோன் இணைப்புகளுடன் சேர்ந்து வழங்கப்படுகிறது. இதில், 24 எம்.பி.எஸ்., (மெகாபிட் பெர் செகண்ட்) என்ற அளவில், கிடைக்கிறது. அதிலும், தொடர்பு நிலையம் சுற்றி, 500 மீட்டர் சுற்றளவில் தான், இந்த 24 எம்.பி.எஸ்.,அளவு நெட் வசதி கிடைக்கும். அதற்கு மேல், அளவு குறைந்து, நீண்ட தூரத்தில் உள்ள நெட் இணைப்புகளுக்கு, 8 எம்.பி.எஸ்., அளவுகளில் கிடைக்கிறது. மேலும், காப்பர் வயர்கள் பழுதடைவதும், அதை சரி செய்ய ஒட்டுப்போடுவது போன்ற காரணங்களால், அதிவேக சேவை வழங்கமுடியாத நிலை உருவானது.
          சிவகாசியில் உள்ள பல பிரின்டிங் ஆப்செட்களுக்கும், பட்டாசு நிறுவனங்களுக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை மிக அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு, ஒரு வினாடியில், 100 மெகாபிட்ஸ் பதிவிறக்கம் செய்யும் வகையில், ஆப்டிக்கல் பைபர் மூலம், அதிவேக இன்டர்நெட் சேவையை, ஏப்ரல் முதல் பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. ஹையர் பிராட்பாண்ட் சேவை பயன்படுத்தும்,அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பார்ட் மென்ட்களில் வசிப்போர், கல்வி நிறுவனங்கள், இச் சேவை பெறலாம். ஒரு ஆப்டிக்கல் பைபரில், 16, 32 இணைப்புகள் வழங்கலாம். இதற்காக, சிவகாசி பகுதியில், ஆப்டிக்கல் பைபர் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10, 20, 50, 100 என்ற அதிவேக எம்.பி.பி.எஸ்., பிளான்கள் அறிமுகம் செய்துள்ளனர். இதற்கான ஒரு மாத கட்டணம் ரூ.3999, 5999, 9999, 16,999 என்ற விகித்திலும், கூடுதலாக மோடத்திற்கு கட்டணம் ரூ.150 வீதம் செலுத்த வேண்டும். ""இச் சேவை பெற விரும்புவோர், சிவகாசி சேவை மையத்தினை, 04562 221 600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்,'' என, தொழில் நுட்ப அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி :-தினமலர் 

Sunday, February 23, 2014

நெஞ்சத்தை கிள்ளிய சிவகாசி கூட்டு கிளை மாநாடு

















          22-02-2014 அன்று சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகளின் கூட்டு கிளை மாநாடு தோழர்கள் அழகுராஜ் மற்றும் சிவபெருமான் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
          மகாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கிவைத்து உரையாற்றினார் .நமது நிறுவனம் இன்று எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகளையும்,நமது விருதுநகர் மாவட்டத்தில் லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் நிறுவன வளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகளை மட்டுமே கையில் எடுத்து விவாதித்ததை எடுத்துரைத்தார்.
          வர இருக்கின்ற மாவட்ட மகாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் கூறினார் .சென்னை கூட்டுறவு சங்க தேர்தலில் நமது சங்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான தோழர்கள் சந்திரசேகரன் மற்றும் ராஜமாணிக்கம் அவர்களை அம் மகாநாட்டில் அவர் அறிமுகப்படுத்தினார்.
          பின்னர் பேசிய மாநில உதவி செயலர் தோழர் பழனிச்சாமி பேசிய போது 78.2% IDA இணைப்பை நாம் பெற்று தந்த சாதனையையும் , இன்று நமது நிறுவனம் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நடக்கின்ற இயக்கங்களுக்கு அனைத்து சங்கங்களையும்  இணைத்து தலைமை தாங்குகின்ற பேரியக்கம் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் மட்டுமே என்பதை எடுத்துரைத்தார்.
          வரும் தேர்தலில் நமது நிறுவனத்தை காக்க கூடிய சக்திகளுக்கு வாக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டி காட்டினார் .ஸதலஊழியர்கள் பிரச்சனைகளை நாம்  எதிர்கொண்டு தீர்க்கும் விசயத்தை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் கூறினார். ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் மற்றும் கருவிகள் பற்றாகுறை விசயத்தை ஒப்பந்த ஊழியர் மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜ் சுட்டி காட்டினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,  SNEA கிளை செயலர் தோழர் சுப்பிரமணியன், மற்றும் கோட்ட பொறியாளர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          மகாநாட்டில் பெண் ஊழியர்கள்உட்பட பெரும் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டது நெஞ்சத்தை கிள்ளிய அம்சமாக விளங்கியது. OCB கிளை செயலராக தோழர் A.ஜெயபாண்டி அவர்களும் SDOP கிளை செயலராக M.கருப்பசாமி  அவர்களும்  தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாவட்ட மகாநாட்டிற்கு கட்டியம் கூறுவதாக சிவகாசி கிளை மகாநாடு அமைந்தது.

Monday, January 27, 2014

ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் - சிவகாசி

          25/01/2014 அன்று சிவகாசியில் நடைபெற்ற ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கிளை மாநாட்டில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக தோழர் G. ராஜு, TM அவர்களும் செயலராக தோழர் P.ராமசந்திரன் அவர்களும் பொருளராக தோழர் சவரிமுத்து அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.




11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...