மகாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கிவைத்து உரையாற்றினார் .நமது நிறுவனம் இன்று எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகளையும்,நமது விருதுநகர் மாவட்டத்தில் லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் நிறுவன வளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகளை மட்டுமே கையில் எடுத்து விவாதித்ததை எடுத்துரைத்தார்.
வர இருக்கின்ற மாவட்ட மகாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் கூறினார் .சென்னை கூட்டுறவு சங்க தேர்தலில் நமது சங்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான தோழர்கள் சந்திரசேகரன் மற்றும் ராஜமாணிக்கம் அவர்களை அம் மகாநாட்டில் அவர் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் பேசிய மாநில உதவி செயலர் தோழர் பழனிச்சாமி பேசிய போது 78.2% IDA இணைப்பை நாம் பெற்று தந்த சாதனையையும் , இன்று நமது நிறுவனம் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நடக்கின்ற இயக்கங்களுக்கு அனைத்து சங்கங்களையும் இணைத்து தலைமை தாங்குகின்ற பேரியக்கம் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் மட்டுமே என்பதை எடுத்துரைத்தார்.
வரும் தேர்தலில் நமது நிறுவனத்தை காக்க கூடிய சக்திகளுக்கு வாக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டி காட்டினார் .ஸதலஊழியர்கள் பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு தீர்க்கும் விசயத்தை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் கூறினார். ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் மற்றும் கருவிகள் பற்றாகுறை விசயத்தை ஒப்பந்த ஊழியர் மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜ் சுட்டி காட்டினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி , SNEA கிளை செயலர் தோழர் சுப்பிரமணியன், மற்றும் கோட்ட பொறியாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மகாநாட்டில் பெண் ஊழியர்கள்உட்பட பெரும் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டது நெஞ்சத்தை கிள்ளிய அம்சமாக விளங்கியது. OCB கிளை செயலராக தோழர் A.ஜெயபாண்டி அவர்களும் SDOP கிளை செயலராக M.கருப்பசாமி அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாவட்ட மகாநாட்டிற்கு கட்டியம் கூறுவதாக சிவகாசி கிளை மகாநாடு அமைந்தது.
No comments:
Post a Comment