Showing posts with label பிறந்த நாள். Show all posts
Showing posts with label பிறந்த நாள். Show all posts

Thursday, April 13, 2017

பட்டுக்கோட்டையார் பிறந்தநாள்.

         ‘நான் அமர்ந்திருக்கம் முதலமைச்சர் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களால் ஆனது’ என்று முன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனால் நினைவுகூறப்பட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் (1930) ஏப்ரல் 13.


குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! -                (உனக்கு…
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு…

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு…

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார் – அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு…

Friday, May 2, 2014

மே 2 - சத்யஜித் ரே பிறந்தநாள்






          மேற்கு வங்கத்தில் 1921 பிறந்த இவர் தன்னுடைய திரைப்படப் பணிக்காக ஆஸ்கார் விருதுபெற்ற முதல் இந்தியர். இயக்குநர் என்ற தகுதியைத் தாண்டி இவர் ஒரு எழுத்தாளர், ஓவியர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர். இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய திரைப்படங்களுக்காக உலக அளவில் பேசப்பட்டவர்.
          பதேர் பாஞ்சாலி திரைப்படம் வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.
- மே 2 சத்யஜித்ரே பிறந்தநாள்

Tuesday, April 29, 2014

ஏப்ரல் 29 - பாரதிதாசன் பிறந்தநாள்

படம் : புகழேந்தி
தொழிலறிந்த ஏழைமக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள் 
சோற்றிலே மண்போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி

நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த 
கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.

(தளை அறு என்ற தலைப்பில் பாரதிதாசன் எழுதிய பாடலின் இரண்டு பத்திகள் மட்டும்)

Saturday, April 26, 2014

ஏப்ரல் 25 - புதுமைப்பித்தன் பிறந்தநாள்

படம் : அருணோதயம்
            நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப் பித்தன் பிறந்தநாள். 108 ஆண்டுகளுக்கு முன் பிறந்த புதுமைப்பித்தன் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதைகள் ‘பொன்னகரம்’ மற்றும் ‘துன்பக்கேணி’. பொன்னகரம் (1934) அன்றைய சென்னையின் சேரிப்பகுதியைச் சேர்ந்த அம்மாளு என்ற பெண் தன் கணவனின் மருத்துவச் செலவிற்காக கற்பை மீறுவது தொடர்பான கதை. மருத்துவம் அன்றைக்கும் வணிகமாகத்தான் இருந்தது என்பதையும், கற்பு என்பது ஒருவகையில் மேலாதிக்கக் கற்பிதம்தான் என்பதை நிலைநிறுத்துத முயன்ற கதை. துன்பக்கேணி சென்ற நூற்றாண்டில் இலங்கை முதலான நாடுகளுக்கு தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்ட தலித்துகளின் வாழ்வைப் பிரதிபலித்தது. இவ்விரு கதைகளும் சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பாடங்களாக இருந்து வந்தன. ஜெய்சாம்யாக் என்பவர் தொடுத்த ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கினைக் காரணம்காட்டி இச்சிறுகதை நீக்கப்பட்டது. துணையாக பொன்னகரமும் கல்விச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இடம் மறுக்கப்பட்ட புதுமைப்பித்தனை, அவரது பிறந்தநாளில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தன் படைப்புகளில் பிரதிபலித்த நவீன இலக்கியத்தின் முன்னோடியாக நினைவு கூர்வோம்.

Monday, April 14, 2014

அவர் ஏற்றி வைத்த தீபத்தை தொடர்ந்து எரியச் செய்வோம்

.                







        "தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். “டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீபத்தை ஏழை, எளிய மக்களுக்குச் சமூகநீதி என்ற இலக்கை நாம் அடையும்வரை தொடர்ந்து எரியச் செய்யவேண்டும்...”

Tuesday, December 10, 2013

மகா கவி பாரதியார் பிறந்த நாள்

டிசம்பர் 11 மகா கவி பாரதியார் பிறந்த நாள் 
பாரதியார்
பாரதியின் அற்புதமான கையெழுத்து...பாரீர் 

Tuesday, October 1, 2013

அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்


நம்பிக்கை,​​ அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டுமென்று எண்ணிய சமுதாயச் சிற்பி அண்ணல் காந்தியடிகள்.
"முடிவில்லா கீர்த்தி பெற்றாய் ​
புவிக்குள்ளே முதன்மையுற்றாய்''
என்று அண்ணல் காந்தியைப் பற்றி தன்னுடைய மதிப்பீட்டை சாசனமாகப் பதிவு செய்து விட்டுச் சென்றார் மகாகவி பாரதியார்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...