Wednesday, August 29, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து உண்ணாவிரதம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து இன்று விருதுநகர் PGM அலுவலகம் முன்பாக உண்ணாவிரதபோராட்டம் TNTCWU சங்கத்தின் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது . இது விஷயமாக நமது அனைத்திந்திய சங்கம் , மாநில  சங்கம் எடுத்த நடவடிக்கைகள் ,நிர்வாகத்தின் அசைவற்ற போக்கு ஆகியவற்றை விளக்கி TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் ,BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கிருஷ்ணகுமார் மற்றும் தோழர் முத்துச்சாமி ஆகியோர் பேசினர் .
Image may contain: 9 people, people standing, crowd and outdoor
  Image may contain: 1 person, tree and outdoor
Image may contain: 1 person, sitting, crowd and outdoor
Image may contain: 10 people, people sitting and outdoor
Image may contain: 6 people, people sitting, people standing, crowd and outdoor
Image may contain: 20 people, including Jeyabharath Murugan, people standing and outdoor
Image may contain: 16 people, people standing, crowd and outdoor

Monday, August 27, 2018

Trade union, farmer organisations to conduct long march in Delhi on September 5


Trade union, farmer organisations to conduct long march in Delhi on September 5
delhi rally september 2018 க்கான பட முடிவு
To continue its struggle against the BJP government's neo-liberal policies and misrule, a group of trade unions and farmers organisations have decided to conduct a worker-peasant rally and a long march in Delhi on the lines of one organised in Maharashtra in March this year.The rally to be organised by the All Indian Kisan Sabha (AIKS), Centre of Indian Trade Unions (CITU) and All-India Agricultural Workers' Union (AIAWU) at Ramlila Maidan on September 5 is expected to be attended by around 5 lakh people, the organisers said."This will be the first worker-peasant rally since the independence and the largest of the Left and Democratic forces. The rally will declare the future course of struggles and give a clarion call to build the Left and Democratic political alternative at the All Indian level based on alternative policies for people's development," said Hannan Mollah, general secretary, AIKS.
The organizers have decided to involve dalits, tribals and minority sections and issues related to them will also be raised during the rally. The AIKS has also given a call for a massive 'jail bharo' struggle on August 9, that coincides with the Quit India Day. It is expected that lakhs of peasants will participate in this struggle at district level and even CITU has lend its support to the struggle.
"The struggle on Quit India Day denotes the importance of the fight against imperialist driven pro-corporate economic policies known as neo-liberal reforms that are being intensified by the rabidly communal Narendra Modi Government. The BJP led government, for the first time in the history of the country, has allowed 100 per cent foreign direct investment in agriculture and retail trade to facilitate corporate procurement," said Mollah.
AIKS president Dr Ashok Dhawale, who led the farmers' protest in Maharashtra, said the present government is the biggest anti-farmer regime at the Centre since independence.
               நன்றி :- இந்தியன் எக்ஸ்பிரஸ் 

சுற்றறிக்கை எண்: 94

மாநில சங்க சுற்றறிக்கை எண் 94 படிக்க :-click here

ஆண்டு பொது குழு கூட்டம்

GM அலுவலக கிளை மற்றும் SDOP கிளைகளின் ஆண்டு பொது குழு கூட்டம் 21/08/2018 அன்று அதன் கிளை தலைவர்கள்   தோழர் சிங்காரவேலு மற்றும் தோழியர் தனலட்சுமி தலைமையில் மிக எளிமையாக நடைபெற்றது . கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல்  மற்றும் நியூ டெல்லி பேரணிக்கு ஊழியர்களை திரட்டுவது என்ற பல பணிகள் குறுக்கிட்டதால் மாநாட்டை எளிய முறையில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .மறைந்த தலைவர்கள் மற்றும் கேரளா வெள்ளத்தில் பலியான பொதுமக்களுக்கு தோழர் சந்திரசேகரன் அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநாட்டை முறையாக மாவட்ட செயலர் துவக்கி வைத்து உரை நிகழ்த்த ,ஆண்டு அறிக்கையை தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து சமர்ப்பிக்க , மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் .புதிய நிர்வாகிகளாக GM அலுவலக கிளைக்கு தோழர்கள் G.தனலட்சுமி ,M.S.இளமாறன் ,A.கோவிந்தராஜ் ஆகியோர்  முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .SDOP  கிளைக்கு தோழர்கள் சிங்காரவேலு ,மாரிமுத்து மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர்  முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people sitting
Image may contain: 13 people, including Chellappa Chandrasekar, people sitting
Image may contain: 2 people, people sitting, people standing and indoor
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: 13 people, people sitting
Image may contain: 4 people, including Ravi Indran, people sitting
Image may contain: 3 people, people sitting


Thursday, August 23, 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி

மனித நேய பணியில் BSNLEU 
கடந்த நுற்றாண்டுகாலமாக இல்லாத அளவில் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு நிவாரண நிதி திரட்ட மாநில சங்கம் அறைகூவல் விட்டவுடன் ராஜபாளையம் ,சிவகாசி மற்றும் விருதுநகர் ,சாத்தூர் கிளைகள் உடனடியாக களத்தில் இறங்கின .அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து நிவாரண நிதி திரட்டின .சிவகாசியில் ரூபாய் 15,010 ம் ,விருதுநகரில் 11,400 ம் ,ராஜபாளையத்தில் ரூபாய் 10,600 ம் வசூல் செய்யப்பட்டு மாநில சங்கத்திடம் ரூபாய் 26,410 வழங்கப்பட்டு விட்டது . ராஜபாளையம் கிளை 24/08/2018 அன்று மாநில சங்கத்திற்கு அனுப்ப உள்ளது .ஒரே நாளில் 37,000/- வழங்கிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ,அந்த பணியில் ஈடுபட்ட அனைத்து BSNLEU தோழர்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி .

கிளை கூட்டங்கள்

ராஜபாளையம் கிளை கூட்டம் 14/08/2018 அன்று  அதன் தலைவர் தோழர் R .தியாகராஜன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நியூ டெல்லி பேரணி ,ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தை அம்ஸங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் ஆயபடுபொருளாக கொண்டு சிறப்பான விவாதங்கள்  நடைபெற்றது . மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோரும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் தங்கதுரை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் வெள்ளைப்பிள்ளையார் ,முருகன் ,ராதாகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .
Image may contain: 2 people, people sitting
Image may contain: 3 people, including Christopher Roy M, people sitting
Image may contain: 1 person, indoor
Image may contain: 4 people, people sitting
Image may contain: 7 people
Image may contain: 1 person, sitting, standing and indoor
சாத்தூர் கிளை கூட்டம் 18/08/2018 அன்று  அதன் தலைவர் தோழர் ஜெயச்சந்திரன்  தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நியூ டெல்லி பேரணி ,ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தை அம்ஸங்கள் மற்றும் கேரளா வெள்ள நிவாரண நிதி  ஆயபடுபொருளாக கொண்டு சிறப்பான விவாதங்கள்  நடைபெற்றது . மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
 Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 7 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor

Tuesday, August 7, 2018

அஞ்சலி

Image may contain: 1 person, smiling, sunglasses and close-up
ஜூன் 3 1924 இல் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆன டாக்டர் கலைஞர் கருணாநிதி  அவர்கள் 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். அவர் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் தன் அஞ்சலியை செலுத்துகிறது

Wednesday, August 1, 2018

நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சனைகளின் முன்னேற்றம்

மாநில  சங்க சுற்றறிக்கை படிக்க :-CLICK HERE

AUAB தலைவர்கள் மத்திய அமைச்சரிடம் சந்திப்பு



Image may contain: 7 people, people sitting and people standing
பாராளுமன்றத்தில் இன்று (01/08/2018) AUAB தலைவர்கள்  மத்திய அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களை சந்தித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் M.B.ராஜேஷ் அவர்கள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, அவரும் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கு பெற்றார். தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் ஷேசாத்ரி Dy.GS NFTE, தோழர் K.செபாஸ்டியன் GS SNEA, தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA, தோழர் ரவி ஷில் வர்மா GS AIGETOA, தோழர் சுரேஷ் குமார் GS BSNL MS, தோழர் S.D.ஷர்மா GS ATM மற்றும் தோழர் J.விஜயகுமார் Dy.GS TEPU ஆகியோர் இன்று இந்த கூட்டத்தில் பங்கு பெற்றனர்.
24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூறப்பட்ட உறுதி மொழிகள் அமலாக்கப்படாதது தொடர்பாக தங்களின் வருத்தங்களை AUAB தலைவர்கள் தெரிவித்தனர். உறுதிமொழிகளின் அமலாக்கம் தொடர்பாக கடந்த ஐந்து மாத காலமாக மத்திய அமைச்சரோ, தொலை தொடர்பு துறையின் செயலாளரோ, ஒரு கூட்டத்தைக் கூட நடத்த வில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 
1. 3rd PRCயின் AFFORDABILITY பிரிவிலிருந்து BSNLக்கு விலக்கு அளிப்பதற்கான உறுதி மொழி மத்திய அமைச்சரால் வழங்கப்பட்டது. எனினும், அதற்கு தேவையான அமைச்சரவைக் குறிப்பு தயாரிப்பதற்கான பணிகளை DOT துவங்கவே இல்லை. 
2. ஊழியர்களின் ஊதிய விகிதத்தின் உயர்ந்த பட்ச அளவிற்கு பதிலாக அரசாங்க உத்தரவின் படி ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீட்டை BSNL நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என மத்திய அமைச்சர் தொலை தொடர்பு செயலாளருக்கு வழிகாட்டினார். ஆனால் இதற்காக இதுவரை DOT எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
3. BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொலை தொடர்பு துறை செயலாளருக்கு மத்திய அமைச்சர் வழிகாட்டினார். அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
4. BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை BSNL நிறுவனத்திற்கு அது வழங்கப்படவில்லை.
விவாதங்களுக்கு பின் BSNLக்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்குவது அரசாங்கத்தின் கைகளில் உள்ளது என்றும் அது விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக தொலை தொடர்பு துறை செயலாளரோடு ஆகஸ்ட் 3ஆம் தேதி  விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார். 
மேலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவதுடன் BSNLக்கு வருவாயையும் ஈட்டித்தர வேண்டுமென மத்திய அமைச்சர் கூறினார். மிகக் கடுமையான விலை குறைப்பில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடுமையான போட்டியை தாங்கள் கொடுத்து வருவதாக AUAB தலைவர்கள் பதிலளித்தனர். இத்தகைய கூட்டத்தை ஏற்பாடு செய்து பிரச்சனைகளை விவாதித்த மத்திய அமைச்சருக்கு தோழர் M.B.ராஜேஷ் MP நன்றி தெரிவித்தார். 
AUAB தலைவர்கள் இந்த கூட்டத்தை வழங்கிய மத்திய அமைச்சருக்கும், அதே போல இதற்கான ஏற்பாடுகளை செய்த தோழர் M.B.ராஜேஷ் MPஅவர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...