மனித நேய பணியில் BSNLEU
கடந்த நுற்றாண்டுகாலமாக இல்லாத அளவில் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு நிவாரண நிதி திரட்ட மாநில சங்கம் அறைகூவல் விட்டவுடன் ராஜபாளையம் ,சிவகாசி மற்றும் விருதுநகர் ,சாத்தூர் கிளைகள் உடனடியாக களத்தில் இறங்கின .அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து நிவாரண நிதி திரட்டின .சிவகாசியில் ரூபாய் 15,010 ம் ,விருதுநகரில் 11,400 ம் ,ராஜபாளையத்தில் ரூபாய் 10,600 ம் வசூல் செய்யப்பட்டு மாநில சங்கத்திடம் ரூபாய் 26,410 வழங்கப்பட்டு விட்டது . ராஜபாளையம் கிளை 24/08/2018 அன்று மாநில சங்கத்திற்கு அனுப்ப உள்ளது .ஒரே நாளில் 37,000/- வழங்கிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ,அந்த பணியில் ஈடுபட்ட அனைத்து BSNLEU தோழர்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி .
No comments:
Post a Comment